मंगलवार, दिसंबर 03 2024 | 02:26:15 AM
Breaking News
Home / Choose Language / Tamil / தொழில் மற்றும் உள்நாட்டு வர்த்தக ஊக்குவிப்புத் துறை பொழுதுபோக்கு தளமான வின்சோ நிறுவனம் இடையே புரிந்துணர்வு ஒப்பந்தம்

தொழில் மற்றும் உள்நாட்டு வர்த்தக ஊக்குவிப்புத் துறை பொழுதுபோக்கு தளமான வின்சோ நிறுவனம் இடையே புரிந்துணர்வு ஒப்பந்தம்

Follow us on:

உலகளவில் இயங்கி வரும் பொழுதுபோக்கு அம்சங்களுடன் கூடிய விளையாட்டுத் துறையை போன்று இந்தியாவிலும் பொழுதுபோக்கு அம்சங்களை மேம்படுத்தும் வகையில் தொழில் மற்றும் உள்நாட்டு வர்த்தக ஊக்குவிப்புத் துறை பொழுதுபோக்கு தளமான வின்சோ உடன் புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளது. இதன் மூலம் இத்துறையில் 2,000-க்கும் மேற்பட்ட புத்தொழில் நிறுவனங்களை உருவாக்குவதில் கவனம் செலுத்தப்படும். இத்துறையில் வழிகாட்டுதல் நெறிமுறைகள், தொழில்சார் நுண்ணறிவு மற்றும் உலகளாவிய வர்த்தக வாய்ப்புகளை வழங்கும். இணையதள விளையாட்டு மற்றும் அது சார்ந்த தொழில்நுட்பத்தில் சுயசார்பு இந்தியாவின் இலக்குகளை எட்டும் வகையிலான பிரதமர் நரேந்திர மோடியின் தொலைநோக்குப் பார்வையுடன் இணைந்து செயல்பட வகை செய்கிறது. இத்துறையில் 300 பில்லியன் அமெரிக்க டாலர் அளவிற்கு உலகச் சந்தை வாய்ப்புகள் உள்ளதாக மதிப்பிடப்பட்டுள்ளது.

தொழில் மற்றும் உள்நாட்டு வர்த்தக ஊக்குவிப்புத் துறையின் இணைச் செயலாளர் திரு சஞ்சீவ் சிங் கூறுகையில்,  அனிமேஷன், விளையாட்டு வடிவமைப்பு மற்றும் மேம்பாடு ஆகியவற்றில் அதிநவீன திறன்களைக் கொண்ட நிபுணர்களின் யோசனைகள் இந்தத் துறையில் உள்ள திறன் சார்ந்த இடைவெளியை நிரப்புவதில்  புரிந்துணர்வு ஒப்பந்தம் கவனம் செலுத்துகிறது என்று கூறினார். இந்த ஒப்பந்தத்தின் மூலம் 2 மில்லியனுக்கும் கூடுதலான வேலைவாய்ப்புகள் உருவாக்கப்படும் என்று கூறினார்.

இது தவிர, ஒரு சிறப்பு மையத்தை நிறுவுவதற்கும் இந்த ஒப்பந்தம் வகை செய்கிறது. இத்துறையில் தொழிலாளர்களின் திறன் மேம்பாடு, உத்திசார் நடவடிக்கைகள் மற்றும் அறிவுசார் சொத்துக்களின் உருவாக்கம், அந்நிய நேரடி முதலீடு போன்ற வாய்ப்புகளுக்கும் இந்த ஒப்பந்தம் வழிவகுக்கிறது.

मित्रों,
मातृभूमि समाचार का उद्देश्य मीडिया जगत का ऐसा उपकरण बनाना है, जिसके माध्यम से हम व्यवसायिक मीडिया जगत और पत्रकारिता के सिद्धांतों में समन्वय स्थापित कर सकें। इस उद्देश्य की पूर्ति के लिए हमें आपका सहयोग चाहिए है। कृपया इस हेतु हमें दान देकर सहयोग प्रदान करने की कृपा करें। हमें दान करने के लिए निम्न लिंक पर क्लिक करें -- Click Here


* 1 माह के लिए Rs 1000.00 / 1 वर्ष के लिए Rs 10,000.00

Contact us

Check Also

டிஜிடல் ஆயுள் சான்றிதழ் பிரச்சாரம் 3.0 மைல்கற்களை எட்டியது – 1.30 கோடி சான்றிதழ்கள் உருவாக்கப்பட்டுள்ளன

ஓய்வூதியம் மற்றும் ஓய்வூதியம் பெறுவோர் நலத்துறை, டிஜிட்டல் ஆயுள்  சான்றிதழ்  பிரச்சாரம் 3.0 ஐ வெற்றிகரமாக முடித்துள்ளது.  டிஜிட்டல் ஆயுள் …