शनिवार, नवंबर 16 2024 | 11:56:24 AM
Breaking News
Home / Choose Language / Tamil / ஆஸ்திரேலிய தூதர் திரு. பிலிப் கிரீன், வேளாண் மற்றும் விவசாயிகள் நலத்துறை செயலாளர் டாக்டர் தேவேஷ் சதுர்வேதியுடன் சந்திப்பு

ஆஸ்திரேலிய தூதர் திரு. பிலிப் கிரீன், வேளாண் மற்றும் விவசாயிகள் நலத்துறை செயலாளர் டாக்டர் தேவேஷ் சதுர்வேதியுடன் சந்திப்பு

Follow us on:

ஆஸ்திரேலிய தூதர் திரு. பிலிப் கிரீன், புதுதில்லியில் உள்ள கிருஷி பவனில் வேளாண் மற்றும் விவசாயிகள் நலத்துறை செயலாளர் டாக்டர் தேவேஷ் சதுர்வேதியை மரியாதை நிமித்தமாக சந்தித்தார். இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா இடையேயான இருதரப்பு உறவுகளை மேலும் வலுப்படுத்தவும், வேளாண் மற்றும் அதனைச் சார்ந்த துறைகளில் ஒத்துழைப்புக்கான புதிய வாய்ப்புகளைக் கண்டறியவும் இந்த சந்திப்பு  முக்கியமான பொதுத்தளமாக அமைந்தது.

இந்த சந்திப்பின் போது, டாக்டர் சதுர்வேதி இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா இடையேயான நீண்டகால மற்றும் பன்முக கூட்டாண்மையின் முக்கியத்துவத்தை அடிக்கோடிட்டுக் காட்டினார். விவசாயத்தில் இந்தியாவின் தற்போதைய முன்னுரிமைகளை கோடிட்டுக் காட்டிய அவர், உணவுப் பாதுகாப்பை உறுதி செய்வது மட்டுமல்லாமல், விவசாயிகளின் வருமானத்தை அதிகரிப்பதிலும், மக்களுக்கு ஊட்டச்சத்து பாதுகாப்பை மேம்படுத்துவதிலும் அரசு உறுதிபூண்டுள்ளது என்பதை வலியுறுத்தினார். பயிர் பன்முகப்படுத்தல், ஏற்றுமதியை ஊக்குவித்தல், எண்ணெய் வித்துக்கள் மற்றும் பருப்பு வகைகளில் தன்னிறைவை அடைதல் மற்றும் இந்தியாவின் வேளாண் உத்தியின் முக்கிய கூறுகளாக உழவர் உற்பத்தியாளர் அமைப்புகளை வலுப்படுத்துதல் போன்ற முக்கியமான முயற்சிகளை டாக்டர் சதுர்வேதி எடுத்துரைத்தார். இந்தத் துறையை நவீனமயமாக்குவதில் துல்லிய வேளாண்மை, டிஜிட்டல் வேளாண் இயக்கம் மற்றும் சிறிய பண்ணைகளின் இயந்திரமயமாக்கல் உள்ளிட்ட தொழில்நுட்ப முன்னேற்றங்களின் முக்கியத்துவத்தையும் அவர் வலியுறுத்தினார். கூடுதலாக, விவசாயத்தில் புதுமை மற்றும் மாற்றத்தை ஊக்குவிப்பதில் புத்தொழில் நிறுவனங்களின் வளர்ந்து வரும் பங்கை அவர் பாராட்டினார்.

ஆஸ்திரேலியாவின் முன்னுரிமைகளில் விவசாயத்தின் முக்கியத்துவத்தையும், இரு நாடுகளுக்கும் இடையிலான மேம்பட்ட ஒத்துழைப்புக்கான சாத்தியக்கூறுகளையும் திரு கிரீன் எடுத்துரைத்தார். வேளாண் தொழில்நுட்பத் துறையில் உள்ள வாய்ப்புகளை ஆராய்வதில் மிகுந்த ஆர்வம் காட்டிய அவர், இந்த நோக்கங்களை முன்னெடுத்துச் செல்ல வர்த்தக உறவுகளை வலுப்படுத்துவதன் முக்கியத்துவத்தை வலியுறுத்தினார். வர்த்தகம் மற்றும் ஒத்துழைப்புக்கான புதிய வாய்ப்புகளை அடையாளம் கண்டு தொடர்ந்து ஈடுபட வேண்டியதன் அவசியத்தை திரு கிரீன் வலியுறுத்தினார்.

வேளாண் தொழில்நுட்பம், தோட்டக்கலை, டிஜிட்டல் வேளாண்மை மற்றும் வேளாண் இயந்திரங்கள் உள்ளிட்ட பல்வேறு துறைகளில் ஒத்துழைப்பை முன்னெடுப்பதன் முக்கியத்துவத்தை இரு தரப்பும் ஒப்புக் கொண்டன.

வேளாண் மற்றும் விவசாயிகள் நல அமைச்சகத்தின் மூத்த அதிகாரிகள், ஐ.சி.ஏ.ஆர் பிரதிநிதிகள் மற்றும் வெளியுறவு அமைச்சகத்தின் இணைச் செயலாளர் ஆகியோரும் இந்த விவாதத்தில் பங்கேற்று,  கருத்துக்களைப் பரிமாறிக் கொண்டார்கள்.

मित्रों,
मातृभूमि समाचार का उद्देश्य मीडिया जगत का ऐसा उपकरण बनाना है, जिसके माध्यम से हम व्यवसायिक मीडिया जगत और पत्रकारिता के सिद्धांतों में समन्वय स्थापित कर सकें। इस उद्देश्य की पूर्ति के लिए हमें आपका सहयोग चाहिए है। कृपया इस हेतु हमें दान देकर सहयोग प्रदान करने की कृपा करें। हमें दान करने के लिए निम्न लिंक पर क्लिक करें -- Click Here


* 1 माह के लिए Rs 1000.00 / 1 वर्ष के लिए Rs 10,000.00

Contact us

Check Also

பழங்குடி சமூகத்தை மேம்படுத்துதல்: சமூக-பொருளாதார வளர்ச்சிக்கான முன்முயற்சிகள்

இந்தியாவில்10.42 மில்லியன்  பழங்குடியின மக்கள் 705-க்கும் அதிகமான தனித்துவமான குழுக்களாக  உள்ளனர். (மொத்த மக்கள் தொகையில் 8.6%). இவர்கள் பெரும்பாலும் தொலைதூரப் பகுதிகளில் வசிக்கின்றனர். இந்த சமூகங்களை மேம்படுத்துவதற்காக, சமூக-பொருளாதார அதிகாரமளித்தல், நிலையான வளர்ச்சி மற்றும் அவர்களின் வளமான கலாச்சார பாரம்பரியத்தை பாதுகாத்தல் ஆகியவற்றை நோக்கமாகக் கொண்ட பல்வேறு திட்டங்களை அரசு அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த முயற்சிகள் வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்துவதற்கும், கல்வியை மேம்படுத்துவதற்கும், பழங்குடி மக்களுக்கான உள்ளடக்கிய வளர்ச்சியை உறுதி செய்வதற்கும் வடிவமைக்கப்பட்டுள்ளன. பழங்குடியினருக்கு அதிகாரமளித்தலுக்கான தனது உறுதிப்பாட்டின் ஒரு பகுதியாக, அரசு பல முயற்சிகளைத் தொடங்கியுள்ளது.  பழங்குடி சமூகங்களின் பாரம்பரியத்தை கௌரவிப்பதற்காக, 2021 முதல் நவம்பர் 15 அன்று பழங்குடியினர் கெளரவ தினம்  கொண்டாடப்படுகிறது. இந்த நாளானது நாடு முழுவதும் உள்ள பழங்குடி சமூகங்களால் மதிக்கப்படும் பகவான் பிர்சா முண்டாவின் பிறந்த நாளாகும். சுரண்டும் பிரிட்டிஷ் காலனித்துவ அமைப்புக்கு எதிராக பிர்சா முண்டா துணிச்சலுடன் போராடினார். சுதந்திர இயக்கத்தை வழிநடத்தினார்.  இந்த ஆண்டு, பிர்சா முண்டாவின் 150 வது பிறந்த நாளில், பிரதமர் ஒரு சிறப்பு நினைவு நாணயம் மற்றும் தபால் முத்திரையை வெளியிடுகிறார். அதே நேரத்தில் பழங்குடி சமூகங்களை, குறிப்பாக கிராமப்புற மற்றும் தொலைதூரப் பகுதிகளில் உள்ள பழங்குடி சமூகங்களை மேம்படுத்துவதற்காக ரூ .6,640 கோடிக்கும் அதிகமான வளர்ச்சித் திட்டங்களையும் தொடங்கி வைக்கிறார். பழங்குடி சமூகத்தின் ஒட்டுமொத்த வளர்ச்சியை உறுதி செய்வதற்காக, 2024-25 மத்திய பட்ஜெட்டில் பழங்குடியினர் நல அமைச்சகத்திற்கு ரூ.13,000 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. முன்னர் பழங்குடியினர் துணைத் திட்டம் (டிஎஸ்பி) என்று அழைக்கப்பட்ட பழங்குடியினருக்கான மேம்பாட்டு செயல் திட்டத்தின் (டிஏபிஎஸ்டி) கீழ், 42 அமைச்சகங்கள் / துறைகள் கல்வி, சுகாதாரம், விவசாயம் மற்றும் உள்கட்டமைப்பு போன்ற துறைகளில் பழங்குடியினர் மேம்பாட்டிற்காக நிதி ஒதுக்க உறுதிபூண்டுள்ளன. பழங்குடி சமூகங்களின் சமூக-பொருளாதார வளர்ச்சிக்கு ஆதரவளிக்க பல திட்டங்கள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன. குறிப்பாக பாதிக்கப்படக்கூடிய பழங்குடி குழுக்களின் தேவைகளுக்கு சிறப்பு கவனம் செலுத்தப்படுகிறது. இந்தத் திட்டங்கள் அவர்களின் வாழ்க்கை நிலைமைகளை மேம்படுத்தவும், பிரதான சமூகத்தில் அவர்கள் சேர்க்கப்படுவதை உறுதி செய்யவும் வடிவமைக்கப்பட்டுள்ளன. 2024, அக்டோபர் 2 அன்று, பிரதமர் நரேந்திர மோடி ஜார்க்கண்டின் ஹசாரிபாக்கில்ரூ. 79,156 கோடிக்கும் அதிகமான செலவினத்துடன் தொடங்கிவைத்த லட்சியத் திட்டம் சுமார் 63,843 பழங்குடி கிராமங்களில் சமூக உள்கட்டமைப்பு, சுகாதாரம், கல்வி மற்றும் வாழ்வாதார மேம்பாடு ஆகியவற்றில் முக்கியமான இடைவெளிகளை நிரப்பி வளர்ச்சியை உறுதி செய்வதை நோக்கமாகக் கொண்டுள்ளது. 2023, நவம்பர் 15 அன்று, ஜார்க்கண்டின் குந்தியில் தொடங்கிய பிஎம்-ஜன்மான் திட்டம், குறிப்பாக பாதிக்கப்படக்கூடிய பழங்குடி குழுக்களின் வாழ்விடங்களில் பாதுகாப்பான வீட்டுவசதி, சுத்தமான குடிநீர், கல்வி, சுகாதாரம், சாலை, தொலைத்தொடர்பு இணைப்பு, மின்மயமாக்கல், நிலையான வாழ்வாதாரங்கள் போன்று அவர்களின் வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்துவதை நோக்கமாகக் கொண்டுள்ளது. 2018-19-ல் தொடங்கப்பட்ட ஏகலைவா மாதிரி உறைவிடப் பள்ளிகள் திட்டம், பழங்குடி மாணவர்களுக்கு அவர்களின் கல்வி, கலாச்சார மற்றும் திறன் மேம்பாட்டில் கவனம் செலுத்தி, தரமான கல்வியை வழங்குவதை நோக்கமாகக் கொண்டுள்ளது. 2024, அக்டோபர் 2 அன்று, பிரதமர் 40 பள்ளிகளைத் திறந்து வைத்தார். ரூ .2,800 கோடிக்கும் அதிக  முதலீட்டில்  25 திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டினார். இதுவரை 728 அவசரகால  மருத்துவ முறைக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது. பிரதமரின் பழங்குடியினர் மேம்பாட்டு இயக்கம் பழங்குடி தொழில்முனைவோரை ஊக்குவிப்பதையும்  …