நுகர்வோர் விலைக் குறியீட்டு எண் மற்றும் தொழில்துறை உற்பத்தி குறியீட்டு எண் ஆகியன நாட்டின் தொழில் துறை வளர்ச்சி, ஒருங்கிணைந்த துறைகள், ஊரக மற்றும் நகர்ப்புறங்களில் நிலவும் பணவீக்க போக்குகளை பிரதிபலிப்பதன் மூலம் பொருளாதாரக் கொள்கை மற்றும் நிதிச்சந்தையில் முக்கியபங்கு வகிக்கிறது. தற்போது புள்ளியியல் மற்றும் திட்ட அமலாக்க அமைச்சகத்தால் மாதந்தோறும் 12-ம் தேதி மாலை 5:30 மணிக்கு இவை வெளியிடப்படுகின்றன.
(12-ம் தேதி விடுமுறை நாளாக வந்தால், அடுத்த வேலை நாளில் நுகர்வோர் விலை குறியீடும், 12-ம் தேதி விடுமுறை நாளில் வந்தால், அதன் முந்தைய நாளில் தொழில் துறை உற்பத்தி குறியீடும் வெளியிடப்படுகிறது)
நுகர்வோர் விலைக் குறியீட்டு எண் மற்றும் தொழில்துறை உற்பத்தி குறியீட்டு எண் தரவுகளை மேலும் அதிக நேரம் அணுகும் வகையில், மாதந்தோறும் 12-ம் தேதி மாலை 5.30 மணிக்கு வெளியிடப்படும் தரவுகள் மாலை 4 மணிக்கு வெளியிடப்படும் வகையில், மத்திய புள்ளியியல் மற்றும் திட்ட அமலாக்க அமைச்சகம் திருத்தி அமைத்துள்ளது. இதையடுத்து அடுத்த நுகர்வோர் விலைக் குறியீட்டு எண் மற்றும் தொழில்துறை உற்பத்தி குறியீட்டு எண் 2024 நவம்பர் 12 அன்று மாலை 4 மணிக்கு அமைச்சகத்தின் இணையதளத்தில் (ttps:// www.mospi.gov.in) வெளியிடப்படும்.