शनिवार, नवंबर 23 2024 | 07:46:30 AM
Breaking News
Home / Choose Language (page 29)

Choose Language

નાઈજીરીયા, બ્રાઝિલ અને ગુયાનાની તેમની પાંચ દિવસીય મુલાકાત પહેલા પ્રધાનમંત્રીનું પ્રસ્થાન નિવેદન

હું નાઈજીરીયા, બ્રાઝિલ અને ગુયાનાની પાંચ દિવસની મુલાકાતે જઈ રહ્યો છું. મહામહિમ રાષ્ટ્રપતિ બોલા અહેમદ ટીનુબુના આમંત્રણ પર, નાઇજીરીયાની આ મારી પ્રથમ મુલાકાત હશે, જે પશ્ચિમ આફ્રિકન ક્ષેત્રમાં અમારા નજીકના ભાગીદાર છે. મારી આ યાત્રા એ આપણી વ્યૂહાત્મક ભાગીદારી કે જે લોકશાહી અને બહુલવાદમાં સહિયારી માન્યતા પર આધારિત છે તેના …

Read More »

অসমৰ কাৰ্বি আংলঙত উন্নয়নমূলক আঁচনিৰ পৰ্যালোচনা কেন্দ্ৰীয় সামাজিক ন্যায় আৰু সবলীকৰণ মন্ত্ৰী ড° বীৰেন্দ্ৰ কুমাৰৰ

নৱেম্বৰঃ কেন্দ্ৰীয় সামাজিক ন্যায় আৰু সবলীকৰণ মন্ত্ৰী ড০ বীৰেন্দ্ৰ কুমাৰে তিনিদিনীয়াকৈ কাৰ্বিআংলং ভ্ৰমণ কৰি বিভিন্ন ৰাজ্যিক আৰু কেন্দ্ৰীয় চৰকাৰৰ পৃষ্ঠপোষকতা ৰূবপায়ণ হৈ থকা আঁচনিৰ অগ্ৰগতিৰ বুজ লয়। শনিবাৰে মন্ত্ৰীগৰাকীৰ অধ্যক্ষতাত জিলাখনৰ উন্নয়নত উদগনি আৰু মূল বিষয়সমূহৰ সমাধানৰ লক্ষ্যৰে এলানি উচ্চ পৰ্যায়ৰ বৈঠকত মিলিত হয়। মাটিপুঙৰ আৰ্বৰেটামৰ প্ৰেক্ষাগৃহত অনুষ্ঠিত প্ৰথমখন বৈঠকত ড০ কুমাৰে কাৰ্বিআংলং …

Read More »

মণিপুৰত স্বাভাৱিক জীৱন-যাত্ৰা আৰু শান্তি ঘূৰাই অনাৰ বাবে প্ৰয়োজনীয় পদক্ষেপ গ্ৰহণ কৰিবলৈ নিৰাপত্তা বাহিনীক নিৰ্দেশ

মণিপুৰৰ নিৰাপত্তাৰ পৰিস্থিতি বিগত কিছুদিন ধৰি ব্যাপক অৱনতি ঘটি আছে। যুদ্ধংদেহী দুয়োটা সম্প্ৰদায়ৰ সশস্ত্ৰ দুস্কৃতিকাৰীয়ে হিংসাত লিপ্ত হৈ থকাৰ ফলত দুৰ্ভাগ্যজনকভাৱে প্ৰাণ হেৰুৱাইছে আৰু জনসাধাৰণৰ জীৱন-যাপন ব্যাহত হৈ আছে। সকলো নিৰাপত্তা বাহিনীক স্বাভাৱিক জীৱন-যাত্ৰা আৰু শান্তি ঘূৰাই অনাৰ বাবে প্ৰয়োজনীয় পদক্ষেপ ল’বলৈ নিৰ্দেশ দিয়া হৈছে। হিংসাত্মক আৰু ধ্বংসাত্মক কাৰ্যকলাপত লিপ্ত …

Read More »

പ്രധാനമന്ത്രി ശ്രീ നരേന്ദ്ര മോദി ന്യൂഡൽഹിയിൽ ഹിന്ദുസ്ഥാൻ ടൈംസ് നേതൃ ഉച്ചകോടി 2024നെ അഭിസംബോധന ചെയ്തു

പ്രധാനമന്ത്രി ശ്രീ നരേന്ദ്ര മോദി ഇന്ന് ന്യൂഡൽഹിയിൽ ഹിന്ദുസ്ഥാൻ ടൈംസ് നേതൃ ഉച്ചകോടി 2024-നെ അഭിസംബോധന ചെയ്തു. സമ്മേളനത്തെ അഭിസംബോധന ചെയ്യവേ, 100 വർഷം മുമ്പ് മഹാത്മാഗാന്ധിയാണ് ഹിന്ദുസ്ഥാൻ ടൈംസ് ഉദ്ഘാടനം ചെയ്തതെന്ന് ചൂണ്ടിക്കാട്ടിയ പ്രധാനമന്ത്രി, 100 വർഷത്തെ ചരിത്ര യാത്രയ്ക്ക് ഹിന്ദുസ്ഥാൻ ടൈംസിനെയും (എച്ച്ടി) അതിന്റെ ഉദ്ഘാടനം മുതൽ അതുമായി ബന്ധപ്പെട്ട എല്ലാവരെയും അഭിനന്ദിച്ചു. അവരുടെ ഭാവി പ്രവർത്തനങ്ങൾക്ക് അദ്ദേഹം ആശംസകൾ നേർന്നു. വേദിയിലെ എച്ച്ടിയുടെ പ്രദർശനം സന്ദർശിച്ച …

Read More »

അഞ്ച് ദിവസത്തെ നൈജീരിയ, ബ്രസീൽ, ഗയാന സന്ദർശനത്തിന് മുന്നോടിയായുള്ള പ്രധാനമന്ത്രിയുടെ പ്രസ്താവന

നൈജീരിയ, ബ്രസീൽ, ഗയാന എന്നിവിടങ്ങളിൽ അഞ്ച് ദിവസത്തെ സന്ദർശനത്തിനായി ഞാൻ പുറപ്പെടുകയാണ്. ബഹുമാന്യ പ്രസിഡൻ്റ് ബോല അഹമ്മദ് ടിനുബുവിന്റെ ക്ഷണപ്രകാരം, പശ്ചിമാഫ്രിക്കൻ മേഖലയിലെ നമ്മുടെ അടുത്ത പങ്കാളിയായ നൈജീരിയയിലേക്കുള്ള എൻ്റെ ആദ്യ സന്ദർശനമാണിത്. ജനാധിപത്യത്തിലും ബഹുസ്വരതയിലും ഇരുകൂട്ടർക്കുമുള്ള വിശ്വാസത്തിൽ അധിഷ്ഠിതമായ ഞങ്ങളുടെ തന്ത്രപരമായ പങ്കാളിത്തം സ്ഥാപിക്കുന്നതിനുള്ള അവസരമായിരിക്കും എൻ്റെ സന്ദർശനം. ഹിന്ദിയിൽ എനിക്ക് ഊഷ്മളമായ സ്വാഗത സന്ദേശങ്ങൾ അയച്ച നൈജീരിയയിലെ ഇന്ത്യൻ സമൂഹത്തെയും സുഹൃത്തുക്കളെയും കാണാൻ ഞാൻ ആകാംക്ഷയോടെ കാത്തിരിക്കുകയാണ്. …

Read More »

காலத்திற்கு ஏற்ப, உகந்த வயதினருக்கு திரைப்படங்களைப் பரிந்துரைக்க புதிய சான்றளிப்பு முறை அறிமுகம்

மத்திய திரைப்பட சான்றளிப்பு வாரியம் இதுவரை திரைப்படங்களை “யூ”, “ஏ” மற்றும் “யூஏ” ஆகிய பிரிவுகளில் திரையிடுவதற்கான அனுமதி வழங்கி வந்தது. மாறி வரும் திரைப்பட உள்ளடக்கங்களை கருத்தில் கொண்டு 24.10.2024  முதல் அனுமதி வழங்கும் திரைப்படங்கள், “யூ”, “ஏ”, “யூஏ7+”, “யூஏ 13+”, “யூஏ 16+” என்னும் பிரிவுகளில் வகைப்படுத்தப்படுகின்றன. இதில் “யூ” வகை திரைப்படங்கள் எல்லா வயதினருக்கும் உகந்தவையாகும். “ஏ” வகையில் அனுமதிக்கப்படும் படங்கள் 18 வயது கடந்தவர்கள் மட்டுமே காண்பதற்கு அனுமதிக்கப்பட்டவை. அதற்குக் குறைவான வயதுடையவர்கள் காண அனுமதி …

Read More »

ஐஐடி மெட்ராஸ், ஐஐடி பாலக்காடு ஆகியவை இணைந்து கூட்டுக் கல்வி முன்முயற்சியைத் தொடங்கியுள்ளன

சென்னையில் உள்ள இந்திய தொழில்நுட்பக் கழகம் (ஐஐடி மெட்ராஸ்), இந்திய தொழில்நுட்பக் கழகம் பாலக்காடு ஆகிய இரு கல்வி நிறுவனங்களும் பகிரப்பட்ட வளங்கள், ஆராய்ச்சிக்கான உள்ளகப் பயிற்சிகள், கோடைகாலப் பாடத்திட்டங்கள் என மாணவர்களுக்கு கல்வி வாய்ப்புகளை வழங்குவதற்காக கைகோர்த்துள்ளன. ஐஐடி மெட்ராஸ்-ல் இளங்கலை அறிவியல் (பிஎஸ்) பட்டப்படிப்பு, ஐஐடி பாலக்காட்டில் இளங்கலைப் பட்டப்படிப்பு ஆகியவற்றில் சேரும் மாணவர்களுக்கு கற்றல் அனுபவத்தை விரிவுபடுத்துவதன் மூலம் இரு கல்வி நிறுவனங்களின் பலத்தையும் மாணவர்கள் பயன்படுத்திக் கொள்ள இந்த ஒப்பந்தம் வகைசெய்கிறது. இக்கல்வி நிறுவனம் கடந்த ஜூன் 2020-ல் டேட்டா சயின்ஸ் அண்ட் அப்ளிகேஷன்ஸ் என்ற நான்காண்டு பிஎஸ் பட்டப்படிப்பு பாடத்திட்டத்தை அறிமுகப்படுத்தியது. தனித்துவமான இப்பாடத்திட்டத்தில் உயர்தரமான பயிற்சியுடன் பாடங்களின் உள்ளடக்கங்கள் ஆன்லைன் மூலமும், தனிநபர் மதிப்பீடுகள் நேரடியாகவும் வழங்கப்படுகிறது. இதுவரை 30,000-க்கும் மேற்பட்ட மாணவ-மாணவிகள் இந்த பாடத்திட்டத்தில் தீவிரமாகப் பங்கேற்று துடிப்பான மற்றும் கலந்தாலோசிக்கும் நடைமுறையை வளர்த்துக் கொண்டிருக்கின்றனர். ஐஐடி மெட்ராஸ் இயக்குநர் பேராசிரியர் வி.காமகோடி, ஐஐடி பாலக்காடு இயக்குநர் பேராசிரியர் ஏ.சேஷாத்ரி சேகர் ஆகியோர் முன்னிலையில் இருதரப்பு ஒத்துழைப்பிற்கான புரிந்துணர்வு ஒப்பந்தம் இன்று (14 நவம்பர் 2024) கையெழுத்தானது. இரு கல்வி நிறுவனங்களின் ஆசிரியர்களும் இந்நிகழ்வின்போது உடனிருந்தனர். இந்த கூட்டுமுயற்சிக்கு வரவேற்புத் தெரிவித்துப் பேசிய ஐஐடி மெட்ராஸ் இயக்குநர் பேராசிரியர் வி.காமகோடி கூறுகையில், “நமது நாட்டில் உள்ள தகுதியான ஒவ்வொரு மாணவருக்கும் தரமான கல்வி சென்றடைய வேண்டும் என ஐஐடி மெட்ராஸ் உறுதிபூண்டுள்ளது. ஐஐடி பாலக்காடுடனான இம்முயற்சி நமது இலக்குகளை அடைவதற்கான மிக முக்கியமான நடவடிக்கையாக அமைந்துள்ளது” எனக் குறிப்பிட்டார். ஐஐடி பாலக்காடு இயக்குநர் பேராசிரியர் ஏ.சேஷாத்ரி சேகர் கூறும்போது, “ஐஐடி மெட்ராஸ்-ல் பிஎஸ் டேட்டா சயின்ஸ் அண்ட் அப்ளிகேஷன்ஸ் பாடத்திட்டத்தில் படிக்கும் சிறப்புமிக்க மாணவர்கள், எங்கள் கல்வி நிறுவனத்தில் சேருவது குறித்து மகிழ்ச்சி அடைவதுடன், எங்களது கிரடிட் படிப்புகளை நேரடியாகப் படித்து, உள்ளகப் பயிற்சியை மேற்கொள்வதை வரவேற்கிறேன். சிறந்த மாணவர்களை வழிநடத்துவதில் நாங்கள் ஆர்வமாக இருக்கிறோம். எங்கள் கல்வி நிறுவனத்தின் படிப்புகள் மற்றும் உள்ளகப் பயிற்சிகள் கற்றல், கண்டுபிடிப்புகளுக்கு வலுமான முக்கியத்துவத்தை வழஙகி வருகின்றன. ஐஐடி மெட்ராஸ் உடனான இக் கூட்டுமுயற்சி வாயிலாக மாணவர்கள் சிறந்து விளங்குவதற்குத் தேவையான திறன்கள், நுண்ணறிவுகள், நெட்வொர்க்குகளுடன் வலுவான அடித்தளம் ஆகியவற்றை உருவாக்கும்” எனத் தெரிவித்தார். இந்த ஒத்துழைப்பின் முக்கிய அம்சங்கள் வருமாறு:           ஐஐடி பாலக்காடு படிப்புகளில் இருந்து கிரடிட் பரிமாற்றம்: ஐஐடி மெட்ராஸ் பிஎஸ் (டேட்டா சயின்ஸ் அண்ட் அப்ளிகேஷன்ஸ்) மாணவ-மாணவிகள், ஐஐடி பாலக்காட்டில் படிப்புகளை மேற்கொள்வதன் மூலம் கல்வி வளங்கள் மற்றும் நிபுணத்துவத்தின் பரிமாற்றத்தை ஊக்குவிப்பதுடன், மாணவர்கள் தங்கள் கிரடிட் தேவைகளையும் பூர்த்தி செய்துகொள்ள முடியும். அத்துடன் கல்வி வளங்கள் மற்றும் நிபுணத்துவத்தைப் பரிமாறிக் கொள்ளவும் ஏதுவாக இருக்கும்           ஐஐடி பாலக்காடு மாணவர்கள் ஐஐடி மெட்ராஸ்-ஐ அணுகுதல்: ஐஐடி பாலக்காடு இளங்கலைப் பட்டப்படிப்பு மாணவர்கள் ஐஐடி மெட்ராஸ்-ல் பிஎஸ் டேட்டா சயின்ஸ் அண்ட் புரோகிராமிங் பாடத்திட்டத்தில் சேர்ந்து படிக்க இந்த புரிந்துணர்வு ஒப்பந்தம் வகை செய்கிறது.அத்துடன் ஐஐடி பாலக்காடு மாணவர்கள் இங்குள்ள அதிநவீனத் திறன்களுக்கான அணுகலையும் பெற முடியும்.           கூடுதல் முன்முயற்சிகளுக்கான ஆதரவு: மாணவ-மாணவிகள் பரிமாற்றத் திட்டங்கள், வேலைவாய்ப்புகள், இதர கூட்டு முயற்சிகளுக்கும் இந்த இருதரப்பு ஒத்துழைப்புக்கான புரிந்துணர்வு உதவிகரமாக இருக்கும். இருதரப்பு பாடத்திட்டங்களை அறிந்துகொள்ளல், நடைமுறைக் கற்றல் மற்றும் ஆராய்ச்சிக்கான வாய்ப்புகள் மூலம் மாணவர்கள் தங்கள் அனுபவங்களை வளப்படுத்திக் கொள்ள இரு கல்வி நிறுவனங்கள் மேற்கொண்டிருக்கும் அர்ப்பணிப்புக்கு இந்த ஒத்துழைப்பு வகைசெய்கிறது. இரண்டு ஐஐடிகளின் நிபுணத்துவம் மற்றும் உள்கட்டமைப்பைப் பயன்படுத்தி ஒரு வலுவான கல்விச் சூழலை உருவாக்குவதை இக்கூட்டுமுயற்சி நோக்கமாகக் கொண்டுள்ளது. ஐஐடி மெட்ராஸ் பிஎஸ் பாடத்திட்டத்தின் இறுதியாண்டு மாணவ-மாணவிகளுக்கு கற்றல் வாய்ப்புகளை வழங்க நாட்டின் பிற முன்னணி கல்வி நிறுவனங்களோடு ஒத்துழைப்பு முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. ஐஐடி காந்திநகர், ஐஐஐடி ஹைதராபாத், சென்னை கணிதவியல் நிறுவனம் (சிஎம்ஐ) ஆகிய கல்வி நிறுவனங்கள் ஐஐடி மெட்ராஸ் பிஎஸ் (டேட்டா சயின்ஸ்) பட்டப்படிப்பு பாடத்திட்டத்தில் இருந்து தகுதியான மாணவர்களுக்கு தங்கள் வளாகப் படிப்புகளை வழங்கியுள்ளன.   

Read More »

புதுவை பல்கலைக்கழகத்தில் பிரதமரின் முத்ரா யோஜனா (PMMY) குறித்த தேசிய அளவிலான கருத்தரங்கு MSME மற்றும் நிதி உள்ளடக்கத்தை மேம்படுத்துவதில் வங்கிகள், தொழில்முனைவோர் மற்றும் கல்வியாளர்களின் பங்களிப்பு

புதுவை பல்கலைக்கழகத்தின் சர்வதேச வணிகத் துறை, புதுவை யூனியன் பிரதேசத்தில் வருமானம் ஈட்டுவதும், வேலைவாய்ப்புகளை உருவாக்குவதும் தொடர்பாக சிறு தொழில் முனைவோர்களிடையே பிரதமரின் முத்ரா யோஜனா (PMMY) குறித்து ICSSR உடன், தேசிய அளவிலான கருத்தரங்கினை ஏற்பாடு செய்தது. இந்த கருத்தரங்கின் தலைமை விருந்தினராக புதுவை பல்கலைக்கழக துணைவேந்தர் பேராசிரியர் க. தரணிக்கரசு கலந்துகொண்டு நிகழ்ச்சியைத் தொடங்கி வைத்தார். இந்தியன் வங்கி புதுச்சேரி மண்டல துணை பொது மேலாளர் திரு. வெங்கடாசுப்பிரமணியன் எம், பாரத ஸ்டேட் வங்கி புதுச்சேரி மண்டல உதவி பொது மேலாளர் ஸ்ரீமதி எஸ். அன்புமலர், இந்தியன் வங்கி மண்டல அலுவலகம் புதுச்சேரி, முதன்மை மாவட்ட மேலாளர் திரு. ஏ. சதீஷ்குமார், இந்தியன் வங்கி புதுச்சேரி முதன்மை மேலாளர் திரு. பெரியதம்பி, இந்தியன் வங்கி சுயவேலைவாய்ப்பு பயிற்சி நிறுவன இயக்குநர் ஸ்ரீமதி ஜோசபின் சகாயராணி ஆகியோர் முன்னிலை வகித்து வாழ்த்துப் பேசியனர். தொடக்க உரையின் போது, பேராசிரியர் க. தரணிக்கரசு, பங்கேற்பாளர்களுக்கு இந்திய அரசின் பல்வேறு திட்டங்களை, குறிப்பாக பிரதம மந்திரி முத்ரா யோஜனா (PMMY), ஸ்டார்ட்-அப் இந்தியா, மேக் இன் இந்தியா போன்ற தொழில் முனைவோர் ஊக்கத்திற்கான திட்டங்களை மற்றும் நிதியுதவி நடவடிக்கைகளைக் குறித்துப் பேசி, சிறு தொழில் முனைவோர்கள் அதிக வாய்ப்புகளைப் பெற ஊக்கப்படுத்தினார். வங்கிகளின் வல்லுநர்கள், பிரதம மந்திரி முத்ரா யோஜனா மற்றும் அதன் புதுவை பிராந்தியத்திற்கு உள்ள முக்கியத்துவத்தை பற்றி விளக்கினர். சொற்பொழிவின் போது, புதுவை மண்டலத்தில் 70%கும் மேலாக இந்த திட்டத்தின் பயனாளிகளில் பெண்கள் முன்னிலையில் உள்ளனர் என கூறப்பட்டது. மேலும், மாணவர்களுக்கு புதிய வணிகத் திட்டங்கள் தொடங்குவதற்கும், ஏற்கனவே உள்ள வணிகங்களுக்கு மறுநிதி வழங்குவதற்கும் ஆலோசனை மற்றும் இலவச கடன் வசதி வழங்கப்பட்டது. இந்த கருத்தரங்கு ICSSR ஆராய்ச்சி திட்டமாக, புதுவை பல்கலைக்கழகத்தின் சர்வதேச வணிகத் துறையின் முதன்மை ஆய்வாளரான பேராசிரியர் பி.ஜி. அருளின் ஏற்பாடு செய்யப்பட்டது. அவர் தனது ஆராய்ச்சி முடிவுகளை வங்கி அதிகாரிகள், ஆசிரியர்கள், பயனாளிகள் மற்றும் மாணவர்களிடம் சமர்ப்பித்தார். கருத்தரங்கின் ஒரு பகுதியாக, குழு விவாதம் நடைபெற்றது, இதில் நிகழ்நேர பயனாளிகள் தங்கள் அனுபவங்களைப் பகிர்ந்து கொண்டனர். MSME கள் மற்றும் நிதி உள்ளடக்கத்தை மேம்படுத்துவதில் பிரதம மந்திரி முத்ரா யோஜனாவின் (PMMY) தாக்கம் மற்றும் எதிர்கால முன்னேற்றத்தைப் பற்றிய மதிப்புமிக்க நுண்ணறிவுகளை விவாதிக்கவும் பகிர்ந்து கொள்ளவும் இந்த நிகழ்வு பல்வேறு வல்லுநர்கள், கொள்கை வகுப்பாளர்கள், கல்வியாளர்கள், மாணவர்கள் மற்றும் தொழில்முனைவோரை ஒரே இடத்தில் ஒன்றிணைத்தது. நிகழ்ச்சியின் இறுதியில், சர்வதேச வணிகவியல் துறையின் ஆராய்ச்சி அறிஞரான திரு. பி. சந்தோஷ் நன்றி உரை வழங்கினார்.

Read More »

பழங்குடி சமூகத்தை மேம்படுத்துதல்: சமூக-பொருளாதார வளர்ச்சிக்கான முன்முயற்சிகள்

இந்தியாவில்10.42 மில்லியன்  பழங்குடியின மக்கள் 705-க்கும் அதிகமான தனித்துவமான குழுக்களாக  உள்ளனர். (மொத்த மக்கள் தொகையில் 8.6%). இவர்கள் பெரும்பாலும் தொலைதூரப் பகுதிகளில் வசிக்கின்றனர். இந்த சமூகங்களை மேம்படுத்துவதற்காக, சமூக-பொருளாதார அதிகாரமளித்தல், நிலையான வளர்ச்சி மற்றும் அவர்களின் வளமான கலாச்சார பாரம்பரியத்தை பாதுகாத்தல் ஆகியவற்றை நோக்கமாகக் கொண்ட பல்வேறு திட்டங்களை அரசு அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த முயற்சிகள் வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்துவதற்கும், கல்வியை மேம்படுத்துவதற்கும், பழங்குடி மக்களுக்கான உள்ளடக்கிய வளர்ச்சியை உறுதி செய்வதற்கும் வடிவமைக்கப்பட்டுள்ளன. பழங்குடியினருக்கு அதிகாரமளித்தலுக்கான தனது உறுதிப்பாட்டின் ஒரு பகுதியாக, அரசு பல முயற்சிகளைத் தொடங்கியுள்ளது.  பழங்குடி சமூகங்களின் பாரம்பரியத்தை கௌரவிப்பதற்காக, 2021 முதல் நவம்பர் 15 அன்று பழங்குடியினர் கெளரவ தினம்  கொண்டாடப்படுகிறது. இந்த நாளானது நாடு முழுவதும் உள்ள பழங்குடி சமூகங்களால் மதிக்கப்படும் பகவான் பிர்சா முண்டாவின் பிறந்த நாளாகும். சுரண்டும் பிரிட்டிஷ் காலனித்துவ அமைப்புக்கு எதிராக பிர்சா முண்டா துணிச்சலுடன் போராடினார். சுதந்திர இயக்கத்தை வழிநடத்தினார்.  இந்த ஆண்டு, பிர்சா முண்டாவின் 150 வது பிறந்த நாளில், பிரதமர் ஒரு சிறப்பு நினைவு நாணயம் மற்றும் தபால் முத்திரையை வெளியிடுகிறார். அதே நேரத்தில் பழங்குடி சமூகங்களை, குறிப்பாக கிராமப்புற மற்றும் தொலைதூரப் பகுதிகளில் உள்ள பழங்குடி சமூகங்களை மேம்படுத்துவதற்காக ரூ .6,640 கோடிக்கும் அதிகமான வளர்ச்சித் திட்டங்களையும் தொடங்கி வைக்கிறார். பழங்குடி சமூகத்தின் ஒட்டுமொத்த வளர்ச்சியை உறுதி செய்வதற்காக, 2024-25 மத்திய பட்ஜெட்டில் பழங்குடியினர் நல அமைச்சகத்திற்கு ரூ.13,000 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. முன்னர் பழங்குடியினர் துணைத் திட்டம் (டிஎஸ்பி) என்று அழைக்கப்பட்ட பழங்குடியினருக்கான மேம்பாட்டு செயல் திட்டத்தின் (டிஏபிஎஸ்டி) கீழ், 42 அமைச்சகங்கள் / துறைகள் கல்வி, சுகாதாரம், விவசாயம் மற்றும் உள்கட்டமைப்பு போன்ற துறைகளில் பழங்குடியினர் மேம்பாட்டிற்காக நிதி ஒதுக்க உறுதிபூண்டுள்ளன. பழங்குடி சமூகங்களின் சமூக-பொருளாதார வளர்ச்சிக்கு ஆதரவளிக்க பல திட்டங்கள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன. குறிப்பாக பாதிக்கப்படக்கூடிய பழங்குடி குழுக்களின் தேவைகளுக்கு சிறப்பு கவனம் செலுத்தப்படுகிறது. இந்தத் திட்டங்கள் அவர்களின் வாழ்க்கை நிலைமைகளை மேம்படுத்தவும், பிரதான சமூகத்தில் அவர்கள் சேர்க்கப்படுவதை உறுதி செய்யவும் வடிவமைக்கப்பட்டுள்ளன. 2024, அக்டோபர் 2 அன்று, பிரதமர் நரேந்திர மோடி ஜார்க்கண்டின் ஹசாரிபாக்கில்ரூ. 79,156 கோடிக்கும் அதிகமான செலவினத்துடன் தொடங்கிவைத்த லட்சியத் திட்டம் சுமார் 63,843 பழங்குடி கிராமங்களில் சமூக உள்கட்டமைப்பு, சுகாதாரம், கல்வி மற்றும் வாழ்வாதார மேம்பாடு ஆகியவற்றில் முக்கியமான இடைவெளிகளை நிரப்பி வளர்ச்சியை உறுதி செய்வதை நோக்கமாகக் கொண்டுள்ளது. 2023, நவம்பர் 15 அன்று, ஜார்க்கண்டின் குந்தியில் தொடங்கிய பிஎம்-ஜன்மான் திட்டம், குறிப்பாக பாதிக்கப்படக்கூடிய பழங்குடி குழுக்களின் வாழ்விடங்களில் பாதுகாப்பான வீட்டுவசதி, சுத்தமான குடிநீர், கல்வி, சுகாதாரம், சாலை, தொலைத்தொடர்பு இணைப்பு, மின்மயமாக்கல், நிலையான வாழ்வாதாரங்கள் போன்று அவர்களின் வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்துவதை நோக்கமாகக் கொண்டுள்ளது. 2018-19-ல் தொடங்கப்பட்ட ஏகலைவா மாதிரி உறைவிடப் பள்ளிகள் திட்டம், பழங்குடி மாணவர்களுக்கு அவர்களின் கல்வி, கலாச்சார மற்றும் திறன் மேம்பாட்டில் கவனம் செலுத்தி, தரமான கல்வியை வழங்குவதை நோக்கமாகக் கொண்டுள்ளது. 2024, அக்டோபர் 2 அன்று, பிரதமர் 40 பள்ளிகளைத் திறந்து வைத்தார். ரூ .2,800 கோடிக்கும் அதிக  முதலீட்டில்  25 திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டினார். இதுவரை 728 அவசரகால  மருத்துவ முறைக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது. பிரதமரின் பழங்குடியினர் மேம்பாட்டு இயக்கம் பழங்குடி தொழில்முனைவோரை ஊக்குவிப்பதையும்  “பழங்குடியினரின்  உள்ளூர் பொருட்களுக்கு ஆதரவு ” முன்முயற்சியை ஊக்குவிப்பதையும் நோக்கமாகக் கொண்டுள்ளது. சிறு வன தயாரிப்புகள்  மற்றும் அவ்வாறு அல்லாதவை உள்ளிட்ட இயற்கை வளங்களை பழங்குடி சமூகங்கள் சிறப்பாகப் பயன்படுத்த உதவுவதில் இது கவனம் செலுத்துகிறது. 2014, அக்டோபர் 28  அன்று தொடங்கப்பட்ட பிரதமரின் வனபந்து நலத் திட்டம்,  இந்தியாவின் பழங்குடி சமூகங்கள் எதிர்கொள்ளும் தனித்துவமான சவால்களை எதிர்கொள்ள வடிவமைக்கப்பட்ட ஒரு  முயற்சியாகும். பழங்குடி சமூகங்களுக்கு அதிகாரம் அளித்தல், சமூக-பொருளாதார நிலைமைகளை மேம்படுத்துதல், அவர்களின் கலாச்சார பாரம்பரியத்தை பாதுகாப்பதை இந்தத் திட்டம் நோக்கமாகக் கொண்டுள்ளது. கல்வி, சுகாதாரம் மற்றும் சமூக-பொருளாதார வளர்ச்சிக்கு வலுவான முக்கியத்துவம் அளித்து, பழங்குடி சமூகங்களுக்கு அதிகாரம் அளிக்க அரசு பல முயற்சிகளைத் தொடங்கியுள்ளது. விழிப்புணர்வை அதிகரிப்பதன் மூலமும், ஒற்றுமையை ஊக்குவிப்பதன் மூலமும், இந்த முயற்சிகள் பழங்குடி கலாச்சாரங்களைப் பாதுகாக்க உதவுகின்றன. அதே நேரத்தில் அவர்களின் வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்துகின்றன. இந்தியாவின் முன்னேற்றத்துடன் ஒருங்கிணைக்கின்றன. இந்த முன்முயற்சிகள் மூலம், பழங்குடி சமூகங்கள் மேம்பட்டது மட்டுமின்றி, நாட்டின் வளர்ச்சியில் முக்கியப் பங்கு வகிக்கும் நிலையை அவர்கள் அடைந்துள்ளனர். பழங்குடியின குழுக்கள் உட்பட அனைத்து சமூகங்களையும் உள்ளடக்கி, வளர்ச்சி உணர்வுடன் ஒன்றிணைந்து முன்னேறுவதை உறுதி செய்யும் “அனைவரும் இணைவோம், அனைவரும் உயர்வோம்” என்ற தொலைநோக்குப் பார்வையுடன் இது இணைந்து செல்வதாக உள்ளது.

Read More »

200 ஜிகாவாட் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி சாதனையை கௌரவிக்கும் வகையில் சுதர்சன் பட்நாயக்கின் மணல் சிற்பத்தை மத்திய அமைச்சர் பிரலாத் ஜோஷி பகிர்ந்துள்ளார்

ஒடிசாவின் பூரி கடற்கரையில் உருவாக்கப்பட்ட புகழ்பெற்ற மணல் சிற்பக் கலைஞர் திரு சுதர்சன் பட்நாயக்கின் கலைப்படைப்புகளை மத்திய புதிய மற்றும் புதுப்பிக்கத்தக்க எரிசக்தித்துறை  அமைச்சர் திரு  பிரலாத் ஜோஷி பகிர்ந்துள்ளார். “புதுப்பிக்கத்தக்க எரிசக்தியில் 200 ஜிகாவாட் மைல்கல்லை தாண்டிய இந்தியாவின் குறிப்பிடத்தக்க சாதனையை கௌரவிக்கும் வகையிலான மணற்சிற்பம்! @sudarsansand #RenewablesPeChintan #REChintanShivir ” என்று மத்திய அமைச்சர் ஜோஷி தனது எக்ஸ் சமூக வலைத்தள பக்கத்தில் பதிவிட்டுள்ளார். பிரதமர் திரு நரேந்திர மோடியின் ‘பஞ்சாமிர்த’ இலக்குக்கு ஏற்ப, புதுப்பிக்கத்தக்க எரிசக்தியில் இந்தியா அக்டோபரில் 200 ஜிகாவாட் மைல்கல்லை எட்டியது. இந்தக் குறிப்பிடத்தக்க வளர்ச்சி 2030 ஆம் ஆண்டுவாக்கில் புதைபடிவம் அல்லாத ஆதாரங்களில் இருந்து 500 ஜிகாவாட்  புதுப்பிக்கத்தக்க எரிசக்தியை அடைய வேண்டும் என்ற நாட்டின் லட்சிய இலக்குடன் ஒத்துப்போகிறது.

Read More »