நாட்டின் வடகிழக்கு பகுதி தற்போது நமது தேசிய வளர்ச்சியின் மையமாக உள்ளது என்று குடியரசுத் துணைத் தலைவர் திரு ஜக்தீப் தன்கர் கூறியுள்ளார். குவஹாத்தியில் உள்ள கால்நடை அறிவியல் கல்லூரியில் இன்று (27.10.2024) நடைபெற்ற கிருஷ்ணகுரு சர்வதேச ஆன்மிக இளைஞர் சங்கத்தின் 21-வது சர்வதேச மாநாட்டில் அவர் உரையாற்றினார். பல ஆண்டுகளாக, வடகிழக்குப் பிராந்தியம் வளர்ச்சி, போக்குவரத்து இணைப்பு தொடர்பான சவால்களை எதிர்கொண்டது என்று அவர் கூறினார். ஆனால் இன்று இந்தப் பகுதி வளர்ச்சியின் முன்னுரிமைப் பகுதியாக மாறியுள்ளது என்று அவர் குறிப்பிட்டார், நமது நாட்டில் மாற்றத்தை ஏற்படுத்துவதற்கு மூன்று கொள்கைகள் அவசியம் என்று அவர் கூறினார். எந்த சூழ்நிலையிலும், ஆன்மீகத்திலிருந்து உங்களை விலகி இருக்காதீர்கள் என அவர் வலியுறுத்தினார். ஆன்மிகப் பாதை, தேசியவாதம், நவீனத்துவ தொழில்நுட்ப வளர்ச்சி ஆகிய மூன்றும் இணையும் போது உலகின் மிகப் பெரிய சக்தியாக இந்தியா மாறுவதை யாராலும் தடுக்க முடியாது என்று அவர் கூறினார். கிருஷ்ணகுருஜியின் போதனைகளின் தாக்கத்தைக் கூறிய குடியரசுத் துணைத் தலைவர், கிருஷ்ணகுருஜி தெய்வீக அருளின் சாரத்தை உள்ளடக்கியவர் என்றும் அன்பு, சேவை, மனிதநேயம் பற்றிய தனது போதனைகளால் தனது பக்தர்களின் இதயங்களை ஒளிரச் செய்துள்ளார் என்றும் கூறினார். ஆன்மிகத்தின் உள்ளார்ந்த பண்புகளை எடுத்துரைத்த குடியரசுத் துணைத் தலைவர், நல்லிணக்கத்துக்கு வழிவகுக்கும் மதிப்புகளை மேம்படுத்த வேண்டும் என வலியுறுத்தினார். இந்நிகழ்ச்சியில் அசாம் ஆளுநர் திரு லக்ஷ்மன் பிரசாத் ஆச்சார்யா, அசாம் முதலமைச்சர் திரு ஹிமந்தா பிஸ்வா சர்மா, மத்திய துறைமுகங்கள், கப்பல் நீர்வழிகள் துறை அமைச்சர் திரு சர்பானந்த சோனோவால், கிருஷ்ணகுரு சர்வதேச ஆன்மீக இளைஞர் சங்கத்தின் தலைவர் கமலா கோகோய் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
Read More »கே.ஆர். நாராயணன் பிறந்த தினத்தை முன்னிட்டு அவருக்குக் குடியரசுத்தலைவர் மலரஞ்சலி செலுத்தினார்
மறைந்த முன்னாள் குடியரசுத் தலைவர் கே.ஆர். நாராயணனின் பிறந்த நாளை முன்னிட்டு, அவருக்குக் குடியரசுத் தலைவர் மாளிகையில், இன்று (2024 அக்டோபர் 27) குடியரசுத் தலைவர் திருமதி திரௌபதி முர்மு மலரஞ்சலி செலுத்தினார்.
Read More »காலாட்படை தினத்தை முன்னிட்டு, படையின் அனைத்துப் பிரிவு வீரர்களுக்கும் முன்னாள் வீரர்களுக்கும் பிரதமர் வாழ்த்து
காலாட்படை தினத்தை முன்னிட்டு காலாட்படையின் அனைத்து பிரிவு வீரர்களுக்கும் முன்னாள் வீரர்களுக்கும் வாழ்த்துத் தெரிவித்துள்ள பிரதமர் திரு நரேந்திர மோடி அவர்களது சேவைகளைப் பாராட்டியுள்ளார். இது குறித்து சமூக ஊடக எக்ஸ் தளத்தில் பிரதமர் வெளியிட்டுள்ள பதிவில் கூறியிருப்பதாவது: “அயராது உழைத்து நம்மைப் பாதுகாக்கும் காலாட்படையின் அனைத்து பிரிவு வீரர்களுக்கும் முன்னாள் வீரர்களுக்கும், இந்தக் காலாட்படை தினத்தில் அவர்களது அர்ப்பணிப்பு உணர்வுக்கும் தைரியத்திற்கும் நாம் அனைவரும் மரியாதை செலுத்துகிறோம். நமது தேசத்தின் பாதுகாப்பை உறுதி செய்து, எந்தவொரு துன்பத்தையும் எதிர்கொண்டு அவர்கள் எப்போதும் உறுதியுடன் நிற்கிறார்கள். காலாட்படை, வலிமை, வீரம், கடமை ஆகியவற்றின் அம்சங்களை உள்ளடக்கியது. இப்படை ஒவ்வொரு இந்தியருக்கும் உத்வேகம் அளிக்கிறது.”
Read More »சிறந்த நடனக் கலைஞரும், கலாச்சார அடையாளமாகத் திகழ்ந்தவருமான திரு. கனக ராஜு மறைவுக்கு பிரதமர் இரங்கல்
சிறந்த நடனக் கலைஞரும், கலாச்சார அடையாளமாகத் திகழ்தவருமான திரு. கனக ராஜு மறைவுக்கு பிரதமர் திரு. நரேந்திர மோடி இரங்கல் தெரிவித்துள்ளார். குஸ்ஸாதி நடனத்தைப் பாதுகாப்பதில் அவரது வளமான பங்களிப்பையும், கலாச்சார பாரம்பரியத்தின் முக்கிய அம்சங்கள் அவற்றின் உண்மையான வடிவத்தில் தழைத்தோங்குவதை உறுதி செய்வதற்கான அவரது அர்ப்பணிப்பு மற்றும் ஆர்வத்தையும் திரு மோடி பாராட்டியுள்ளார். சமூக ஊடக எக்ஸ் தளத்தில் திரு மோடி வெளியிட்டுள்ள பதிவில் கூறியிருப்பதாவது: “சிறந்த நடனக் கலைஞரும், கலாச்சார அடையாளமாகத் திகழ்ந்தவருமான திரு. கனக ராஜு அவர்கள் மறைவு வருத்தம் அளிக்கிறது. குஸ்ஸாதி நடனத்தைப் பாதுகாப்பதில் அவரது வளமான பங்களிப்பு வரும் தலைமுறையினருக்கு எப்போதும் ஊக்கமளிக்கும். கலாச்சார பாரம்பரியத்தின் முக்கிய அம்சங்களில் அவரது அர்ப்பணிப்பு மற்றும் ஆர்வம் ஆகியவை அவற்றின் உண்மையான வடிவத்தில் செழித்து வளர முடியும் என்பதை உறுதி செய்தது. அவரது குடும்பத்தினருக்கும் ரசிகர்களுக்கும் இரங்கல். ஓம் சாந்தி.”
Read More »இந்தியாவின் புத்தொழில் புரட்சியை வலுப்படுத்த டிபிஐஐடி, ஹெச்சிஎல் சாஃப்ட்வேர் நிறுவனத்துடன் இணைந்து செயலாற்ற உள்ளது
தொழில் மற்றும் உள்நாட்டு வர்த்தக மேம்பாட்டுத் துறையான டிபிஐஐடி (DPIIT) , அதன் உற்பத்தி தொழில் பாதுகாப்பு முயற்சியின் முக்கிய அங்கமாக, மென்பொருள் தீர்வுகளில் உலகளாவிய முன்னணி நிறுவனமான ஹெச்சிஎல் சாஃப்ட்வேர் உடன் ஒரு உத்தி சார் கூட்டு ஒத்துழைப்பை 2024 அக்டோபர் 23 அன்று புதுதில்லியின் வனிஜ்யா பவனில் அறிவித்தது. இந்தியாவின் புத்தொழில் உற்பத்திச் சூழல் அமைப்பில் புரட்சியை ஏற்படுத்தும் முயற்சியில், டிபிஐஐடி உற்பத்தி புத்தொழில்களை பாதுகாப்பதற்கான சூழலை உருவாக்குகிறது. ஸ்டார்ட்அப் இந்தியா முன்முயற்சியின் கீழ், டிபிஐஐடி இதுவரை தொழில்துறை பங்குதாரர்களுடன் 80 புரிந்துணர்வு …
Read More »பெங்களூருவில் கட்டிடம் இடிந்து விழுந்து உயிர் இழந்தவர்களுக்கு பிரதமர் இரங்கல்; உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு நிவாரணம் அறிவிப்பு
பெங்களூருவில் கட்டிடம் இடிந்து விழுந்து ஏற்பட்ட உயிர் இழப்பிற்கு பிரதமர் திரு. நரேந்திர மோடி இரங்கல் தெரிவித்துள்ளார். உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு பிரதமர் தேசிய நிவாரண நிதியிலிருந்து தலா ரூ.2 லட்சமும், காயமடைந்தவர்களுக்கு தலா ரூ.50 ஆயிரமும் வழங்கப்படும் என்றும் திரு மோடி அறிவித்துள்ளார். சமூக ஊடக எக்ஸ் தளத்தில் அவர் வெளியிட்டுள்ள பதிவில், கூறியிருப்பதாவது: “பெங்களூருவில் கட்டிடம் இடிந்து விழுந்து ஏற்பட்ட உயிர் இழப்பு மிகுந்த வேதனை அளிக்கிறது. தங்களின் …
Read More »புதுதில்லியில் உள்ள விஞ்ஞான் பவனில், மத்திய பஞ்சாயத்து ராஜ் அமைச்சர் திரு ராஜீவ் ரஞ்சன் சிங் 2024 அக்டோபர் 24 அன்று “கிராம பஞ்சாயத்து அளவில் வானிலை முன்னறிவிப்பு” வெளியிடுவதைத் தொடங்கிவைக்கிறார்
மத்திய பஞ்சாயத்து ராஜ் அமைச்சகம், புவி அறிவியல் அமைச்சகத்தின் இந்திய வானிலை ஆய்வுத்துறையுடன் இணைந்து, கிராம பஞ்சாயத்துகளுக்கு தினசரி வானிலை முன்னறிவிப்புகளை வெளியிடும் முயற்சியை நாளை (அக்டோபர் 24) தொடங்கவுள்ளது. புதுதில்லி விஞ்ஞான் பவனில் மத்திய பஞ்சாயத்து ராஜ் துறை அமைச்சர் திரு ராஜீவ் ரஞ்சன் சிங் இதனைத் தொடங்கிவைக்கிறார். கிராமப்புற சமூகங்களுக்கு அதிகாரம் அளிப்பதையும், அடிமட்டத்தில் பேரிடர் தயார்நிலையை மேம்படுத்துவதையும் நோக்கமாகக் கொண்ட இந்த முயற்சி, நாடு முழுவதும் உள்ள விவசாயிகள் மற்றும் கிராம மக்களுக்கு நேரடியாகப் …
Read More »பிரிக்ஸ் உச்சிமாநாட்டில் பங்கேற்பதற்காக ரஷ்யா புறப்படுவதற்கு முன்பு பிரதமர் வெளியிட்ட அறிக்கை
ரஷ்ய அதிபர் மேதகு திரு. விளாடிமிர் புட்டின் விடுத்த அழைப்பின் பேரில், 16-வது பிரிக்ஸ் உச்சிமாநாட்டில் பங்கேற்பதற்காக, இரண்டு நாள் பயணமாக நான் இன்று கசான் புறப்படுகிறேன். பிரிக்ஸ் அமைப்பு நாடுகளுக்கு இடையேயான நெருங்கிய ஒத்துழைப்பை இந்தியா மதிக்கிறது. உலகளாவிய வளர்ச்சித் திட்டம், சீர்திருத்தப்பட்ட பன்முகத்தன்மை, பருவநிலை மாற்றம், பொருளாதார ஒத்துழைப்பு, நிலைமைக்குத் தக்கபடி தகவமைத்துக் கொள்ளக்கூடிய விநியோகச் சங்கிலிகளை உருவாக்குதல், கலாச்சாரம் மற்றும் மக்களுக்கு இடையேயான இணைப்பை ஊக்குவித்தல் உள்ளிட்ட பல்வேறு விஷயங்கள் தொடர்பான பிரச்சினைகள் குறித்த கலந்துரையாடல் …
Read More »இந்திய விமானப்படை மற்றும் சிங்கப்பூர் விமானப்படை இடையேயான கூட்டு ராணுவ பயிற்சி மேற்கு வங்கத்தில் உள்ள விமானப்படை தளத்தில் தொடங்கியது
இந்திய விமானப்படை மற்றும் சிங்கப்பூர் குடியரசு விமானப்படை ஆகியவை மேற்கு வங்கத்தின் கலைகுண்டா விமானப்படை நிலையத்தில் கூட்டு ராணுவப் பயிற்சியின் 12வது பதிப்பை தொடங்கின. பயிற்சியின் இருதரப்பு கட்டம் நவம்பர் 13 முதல் இன்று வரை நடத்தப்படும், இது இரு படைகளுக்கும் இடையே தீவிர ஒத்துழைப்பை உருவாக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது, ஏனெனில் அவை மேம்பட்ட வான் போர் உருவகப்படுத்துதல்கள், கூட்டுப் பணி திட்டமிடல் மற்றும் விளக்க அமர்வுகளில் ஈடுபடுகின்றன. இருதரப்பு கட்டம் பரஸ்பர செயல்பாட்டை மேம்படுத்துதல், போர் தயார்நிலையை கூர்மைப்படுத்துதல் மற்றும் இரு விமானப்படைகளுக்கு இடையே அறிவு பரிமாற்றத்தை ஊக்குவித்தல் ஆகியவற்றை நோக்கமாகக் கொண்டுள்ளது. எஃப்-16, எஃப்-15 ஸ்குவாட்ரன்கள், ஜி-550 வான்வழி முன்கூட்டிய எச்சரிக்கை மற்றும் கட்டுப்பாடு மற்றும் சி-130 விமானங்களைச் சேர்ந்த விமானப் பணியாளர்கள் மற்றும் ஆதரவு வீரர்களை உள்ளடக்கிய சிங்கப்பூர் விமானப்படை இன்றுவரை அதன் மிகப்பெரிய குழுவுடன் பங்கேற்கிறது. ரஃபேல், மிராஜ் 2000 ஐடிஐ, சுகோய் -30 எம்கேஐ, தேஜஸ், மிக் -29 மற்றும் ஜாகுவார் விமானங்களுடன் இந்திய விமானப்படை பங்கேற்கிறது. கூட்டு ராணுவப் பயிற்சி அமைப்பு தொடங்கப்பட்டதிலிருந்தே, இரு நாடுகளுக்கும் இடையே கையெழுத்திடப்பட்ட இருதரப்பு ஒப்பந்தத்தின் கீழ் நடத்தப்பட்டு வருகிறது. இந்திய விமானப்படை நடத்திய மிகப்பெரிய பன்னாட்டு வான்வழி பயிற்சிகளில் ஒன்றான எக்ஸ்-தரங் சக்தியில் சிங்கப்பூர் விமானப்படை பங்கேற்ற உடனேயே கூட்டுப் பயிற்சி வருகிறது, இது இரு விமானப்படைகளுக்கும் இடையில் வளர்ந்து வரும் தொழில்முறை தொடர்பை இது பிரதிபலிக்கிறது. விமான நடவடிக்கைகளுடன் இரு விமானப் படைகளின் வீரர்களும் அடுத்த ஏழு வாரங்களில் பல விளையாட்டு மற்றும் கலாச்சார நடவடிக்கைகளின் போது தொடர்பு கொள்வதால், சிறந்த நடைமுறைகளைப் பரிமாறிக் கொள்வார்கள். கூட்டு ராணுவப் பயிற்சி 2024 பல ஆண்டுகளாக ஒத்துழைப்பு மற்றும் கூட்டுப் பயிற்சிகளின் மூலம் கட்டியெழுப்பப்பட்ட வலுவான இருதரப்பு பாதுகாப்பு உறவையும், இந்தியாவுக்கும் சிங்கப்பூருக்கும் இடையிலான பரஸ்பர மரியாதையையும் எடுத்துக்காட்டுகிறது.
Read More »இந்திய விமானப் போக்குவரத்தில் உள்ளடக்கத்தை நோக்கி உயரும் உடானின் பயணம்
சிவில் விமானப் போக்குவரத்து அமைச்சகத்தால் முன்னெடுக்கப்படும் உடான் திட்டம், இந்தியா முழுவதும் உள்ள சேவை செய்யப்படாத விமான நிலையங்களிலிருந்து பிராந்திய விமான இணைப்பை மேம்படுத்துவதை நோக்கமாகக் கொண்டுள்ளது, இது விமானப் பயணத்தை மக்களுக்கு மலிவு விலையில் அளிக்கிறது. அதன் ஏழாவது ஆண்டு நிறைவைக் கொண்டாடும் இந்த நேரத்தில், தொலைதூர பிராந்தியங்களில், உள்கட்டமைப்பு மற்றும் இணைப்பை மேம்படுத்துவதற்கான இந்திய அரசின் உறுதிப்பாட்டிற்கு உடான் ஒரு சான்றாகத் திகழ்கிறது. உடான் திட்டத்தின் வரலாறு, பிரதமர் திரு. நரேந்திர மோடியின் தொலைநோக்குப் பார்வையில் ஆழமாக வேரூன்றியுள்ளது. தேசிய சிவில் விமானப் போக்குவரத்துக் கொள்கை அறிவிக்கப்படுவதற்கு முன்பு நடைபெற்ற முக்கிய கூட்டத்தில், விமானப் பயணத்தை ஜனநாயகப்படுத்த வேண்டியதன் அவசியத்தை அவர் வலியுறுத்தினார். மக்கள் செருப்பு அணிந்து விமானங்களில் ஏறுவதைப் பார்க்க விரும்புவதாக அவர் குறிப்பிட்டார், இந்த உணர்வு மிகவும் உள்ளடக்கிய விமானத் துறைக்கான பார்வையைத் தூண்டியது. சாமானிய மனிதனின் கனவுகள் மீதான இந்த அர்ப்பணிப்பு உடான் பிறப்பதற்கு வழிவகுத்தது. முதல் உடான் விமானம் ஏப்ரல் 27, 2017 அன்று புறப்பட்டது, இது, சிம்லாவின் அமைதியான மலைகளை, தில்லியின் பரபரப்பான பெருநகரத்துடன் இணைக்கிறது. இந்த முதல் விமானம், இந்திய விமானப் போக்குவரத்தில் ஒரு மாற்றத்தை ஏற்படுத்தும் பயணத்தின் தொடக்கத்தைக் குறித்தது, இது எண்ணற்ற குடிமக்களுக்கு வானில் பறக்கும் அனுபவத்தை அளித்தது. இந்தியாவில் சிவில் விமானப் போக்குவரத்துத் துறைக்கு புத்துயிர் அளிப்பதில்உடான் திட்டம் முக்கிய பங்கு வகித்துள்ளது. கடந்த ஏழு ஆண்டுகளில், இது பல புதிய மற்றும் வெற்றிகரமான விமான நிறுவனங்களின் தோற்றத்தை ஊக்குவித்துள்ளது. ஃபிளை பிக், ஸ்டார் ஏர், இந்தியா ஒன் ஏர் மற்றும் ஃபிளை91 போன்ற பிராந்திய நிறுவனங்கள் இந்த திட்டத்தின் மூலம் பயனடைந்து, நிலையான வணிக மாதிரிகளை உருவாக்கி, பிராந்திய விமானப் பயணத்திற்கான வளர்ந்து வரும் சூழலியலுக்கு பங்களித்துள்ளன. இந்தத் திட்டம், இரண்டு மற்றும் மூன்றாம் நிலை நகரங்களுக்கு கடைசி மைல் இணைப்பை வழங்குவதற்கு மட்டும் அர்ப்பணிக்கப்படவில்லை; வளர்ந்து வரும் சுற்றுலாத் துறைக்கு இது ஒரு முக்கிய பங்களிப்பாளராகவும் உள்ளது. உடான் 3.0 போன்ற முயற்சிகள் வடகிழக்கு பிராந்தியத்தில் பல இடங்களை இணைக்கும் சுற்றுலா பாதைகளை அறிமுகப்படுத்தியுள்ளன, அதே நேரத்தில் உடான் 5.1 சுற்றுலா, விருந்தோம்பல் மற்றும் உள்ளூர் பொருளாதார வளர்ச்சியைத் தூண்டுவதற்காக மலைப்பாங்கான பகுதிகளில் ஹெலிகாப்டர் சேவைகளை விரிவுபடுத்துவதில் கவனம் செலுத்துகிறது. குஜராத்தின் முந்த்ரா முதல் அருணாச்சலப் பிரதேசத்தின் தேசு வரை, இமாச்சலப் பிரதேசத்தின் குலு முதல் தமிழ்நாட்டின் சேலம் வரை, உடான் திட்டம் நாடு முழுவதும் 34 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களை இணைத்துள்ளது. இத்திட்டத்தின் கீழ் மொத்தம் 86 விமான நிலையங்கள் இயக்கப்பட்டுள்ளன, இதில் வடகிழக்கு பிராந்தியத்தில் பத்து மற்றும் இரண்டு ஹெலிபோர்ட்கள் அடங்கும். நாட்டில் பயன்பாட்டில் உள்ள விமான நிலையங்களின் எண்ணிக்கை 2014-ஆம் ஆண்டில் 74 ஆக இருந்தது, 2024-ஆம் ஆண்டில் 157 ஆக இரட்டிப்பாகியுள்ளது, மேலும் 2047 க்குள் இந்த எண்ணிக்கையை 350-400 ஆக உயர்த்த இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. கடந்த பத்தாண்டுகளில் உள்நாட்டு விமானப் பயணிகளின் எண்ணிக்கை இரு மடங்காக அதிகரித்துள்ளது, இந்திய விமான நிறுவனங்கள் தங்கள் விமானங்களை கணிசமாக விரிவுபடுத்தியுள்ளன. 71 விமான நிலையங்கள், 13 ஹெலிபோர்ட்கள் மற்றும் 2 நீர் ஏரோட்ரோம்கள் உட்பட மொத்தம் 86 விமான நிலையங்கள் செயல்படுகின்றன, இது 2.8 லட்சத்துக்கும் அதிகமான விமானங்களில் 1.44 கோடிக்கும் அதிகமான பயணிகள் பயணிக்க உதவுகிறது. உடான் என்பது வெறும் திட்டம் மட்டுமல்ல; இது ஒவ்வொரு இந்தியருக்கும் பறக்கும் அனுபவத்தை வழங்குவதை நோக்கமாகக் கொண்ட இயக்கமாகும். பிராந்திய இணைப்பை மேம்படுத்துதல் மற்றும் மலிவு விலையை உறுதி செய்தல் ஆகியவை எண்ணற்ற குடிமக்களின் அபிலாஷைகளை நிறைவேற்றியுள்ளன. அதே நேரத்தில் பொருளாதார வளர்ச்சி மற்றும் வேலை உருவாக்கத்தைத் தூண்டுகின்றன.வானம் உண்மையிலேயே அனைவருக்கும் எல்லை என்பதை உறுதி செய்கிறது. பின்தங்கிய பிராந்தியங்களை இணைப்பதற்கும் சுற்றுலாவை மேம்படுத்துவதற்கும் அதன் தொடர்ச்சியான அர்ப்பணிப்புடன், உடான் திட்டம் இந்திய விமானப் போக்குவரத்தில் ஒரு மாற்று சக்தியாக உள்ளது, இது இணைக்கப்பட்ட மற்றும் வளமான தேசம் என்ற குறிப்பிடத்தக்க பங்களிப்பை வழங்குகிறது.
Read More »