गुरुवार, नवंबर 07 2024 | 12:14:11 PM
Breaking News
Home / Choose Language / Tamil (page 7)

Tamil

Tamil

மொழி கெளரவிப்பு வார விழாவையொட்டி பிரதமர் திரு நரேந்திர மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார்

பிரதமர் திரு நரேந்திர மோடி இன்று அசாம் மக்களுக்கு தமது நல்வாழ்த்துகளைத் தெரிவித்ததோடு, மொழி கெளரவிப்பு வார விழாவின் #BhashaGauravSaptah முக்கியத்துவத்தையும் எடுத்துரைத்தார். சமூக ஊடக எக்ஸ் தள பதிவில், பிராந்தியத்தின் வளமான மொழி மற்றும் கலாச்சார பாரம்பரியத்தின் முக்கிய அங்கீகாரம் என்ற வகையில், அசாமம் மொழி அண்மையில்  செம்மொழியாக அறிவிக்கப்பட்டதைச் சுற்றியுள்ள உற்சாகத்தை அவர் கொண்டாடினார். அசாமின் வளமான மொழி பாரம்பரியத்தை வெளிப்படுத்தும் ஒரு வார கால கொண்டாட்டமான மொழி கெளரவிப்பு வாரம் தொடங்குவதாக அசாம் முதலமைச்சர் திரு ஹிமந்தா பிஸ்வா சர்மா இன்று வெளியிட்ட ட்விட்டர்  செய்திக்கு பதிலளித்துப் பிரதமர் கூறியிருப்பதாவது: “மொழி கெளரவிப்பு வாரம் #BhashaGauravSaptah ஒரு குறிப்பிடத்தக்க முயற்சியாகும். அசாம் மொழிக்கு  செம்மொழி அந்தஸ்து வழங்கப்பட்டதில் உள்ள மக்களின் ஆர்வத்தை இது எடுத்துக்காட்டுகிறது. என் வாழ்த்துகள். இந்த வாரம் திட்டமிடப்பட்டுள்ள நிகழ்ச்சிகள், மக்களுக்கும் அசாம் கலாச்சாரத்திற்கும் இடையேயான தொடர்பை ஆழப்படுத்தட்டும். அசாமுக்கு வெளியே உள்ள அசாமிய மக்களும் பங்கேற்க வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன்.”

Read More »

மோடி அரசின் கல்வி மறுசீரமைப்பு இந்தியாவை ‘விஸ்வ குரு’வாக மாற்றியுள்ளது: திரு சர்பானந்த சோனாவால்

அசாம் மாநிலம் திப்ருகரில் இன்று நடைபெற்ற அசாம் மருத்துவக் கல்லூரி மற்றும் மருத்துவமனையின் 78-வது நிறுவன தினம், திப்ரு கல்லூரியின் 62-வது நிறுவன தினம்  ஆகிய விழாவில் தலைமை விருந்தினராக கலந்து கொண்ட மத்திய துறைமுகங்கள், கப்பல் போக்குவரத்து, நீர்வழிப்பாதைகள் துறை அமைச்சர் திரு சர்பானந்த சோனாவால் மாணவர் சமூகத்துடன் பரவலாக கலந்துரையாடினார். நாட்டின் கல்வித் துறையை சீரமைக்க பிரதமர் திரு நரேந்திர மோடி தலைமையிலான அரசின்  பங்களிப்பை  திரு சோனாவால் எடுத்துரைத்தார். இது இந்தியாவை ‘விஸ்வ குரு’வாக மாற்றியுள்ளது என்று அவர் கூறினார். அசாம் மருத்துவக் கல்லூரியின் இளம் மனங்களுடன் பேசிய மத்திய அமைச்சர், “சமூகத்தில் அறிவியல் மனப்பான்மையை உருவாக்க எந்தவொரு மருத்துவரும் வகிக்கும் பங்கு முக்கியமானது. மக்களின் வாழ்க்கையை உடல் ரீதியாகவும், மன ரீதியாகவும் வளப்படுத்தும் அதே வேளையில், இந்த மனோபாவத்தை மேம்படுத்துவதற்கு அசாம் மருத்துவக் கல்லூரியின் வளமான பாரம்பரியம் உங்கள் அனைவரின் பாதுகாப்பான கைகளில் உள்ளது என்பது மிகவும் பெருமைக்குரியது. இன்று, பிரதமர் திரு நரேந்திர மோடியின்  ஆற்றல்மிக்க தலைமையின் கீழ், முழுமையான சிகிச்சை அளிக்கவும், முழுமையான நல்வாழ்வை வழங்கவும் சிறந்த பாரம்பரிய மருத்துவத்தை நவீன மருத்துவத்துடன் ஒருங்கிணைத்து வருகிறோம் என்றார். அசாம் மாநிலம் திப்ருகரில் உள்ள திப்ரு கல்லூரியின் 62-வது நிறுவன நாள் கொண்டாட்டத்திலும் திரு. சோனாவால் பங்கேற்றார். இந்த நிகழ்ச்சியில் பேசிய அவர், “21 ஆம் நூற்றாண்டு போட்டி நிறைந்ததாகும். அதில் கண்ணியத்துடன் வெற்றியை அடைய நாம் பங்கேற்க வேண்டும். அந்த சவாலுக்கு உங்களை தயார்படுத்த திப்ரு கல்லூரி இங்கே உள்ளது. வடகிழக்கு மாநிலங்கள் முழுவதிலுமிருந்து மாணவர்கள் இங்கு பயின்று வருகின்றனர், தேச நிர்மாணத்திற்கு சிறந்த பங்களிப்பை வழங்கும் மனித வளங்களை இது பயிற்றுவித்து  வருகிறது. அதற்காக நீங்கள் அனைவரும் நன்றி சொல்ல வேண்டும் என்றார்.

Read More »

பஞ்சாயத்து ராஜ் அமைச்சகம் சிறப்பு இயக்கம் 4.0-ன் கீழ் நிர்ணயிக்கப்பட்ட இலக்குகளை வெற்றிகரமாக நிறைவேற்றியுள்ளது

பஞ்சாயத்து ராஜ் அமைச்சகம் 2024 அக்டோபர் 2 முதல் 31 வரை நடத்தப்பட்ட சிறப்பு இயக்கம்  4.0-ஐ வெற்றிகரமாக முடித்துள்ளது. இது முக்கிய அளவுகளில் நிர்ணயிக்கப்பட்ட இலக்குகளை வெற்றிகரமாக நிறைவேற்றும் அதே வேளையில், பொதுமக்களின் குறைகளைத் தீர்ப்பது, தூய்மை இயக்கங்களை நடத்துவது, பதிவு மேலாண்மை போன்றவற்றை நோக்கமாகக் கொண்டது. பொதுமக்கள் குறைகள் மற்றும்  மேல்முறையீடுகளுக்குத் தீர்வுகாண்பது, நிலுவையிலுள்ள கோப்புகளைக் குறைப்பது ஆகியவற்றில்  4.0  நிர்ணயிக்கப்பட்ட இலக்கை 100% எட்டியுள்ளது. சிறப்பு இயக்கம்  4.0-ன் போது, 823 பொதுமக்கள் குறை தீர்ப்பு மனுக்களும், 155 மேல்முறையீட்டு மனுக்களும் முடிக்கப்பட்டு இலக்கு முழுமையாக எட்டப்பட்டுள்ளது. கோப்பு நிர்வாகத்தை சீராக்க, 1525 மின்-கோப்புகள் ஆய்வுக்காக அடையாளம் காணப்பட்டன. அவற்றில்  650 மின்-கோப்புகள் முழுமையாக ஆய்வு செய்யப்பட்டு 124 மின்-கோப்புகள் மூடப்பட்டன. குறைகளைப் போக்குவதில்  தீவிர நடவடிக்கைகளை மேற்கொண்ட பஞ்சாயத்து ராஜ் அமைச்சகம், சிறப்பு இயக்கம் 4.0-ன் போது, பொதுமக்கள் குறைகளை போக்குவதற்காக அதிகாரிகள் குழுக்களை அனுப்பி  மாநிலங்கள் / யூனியன் பிரதேசங்களுடனான தொடர் நடவடிக்கைகளை தீவிரப்படுத்தியது. இந்த அணுகுமுறை மிகவும் பயனுள்ளதாக அமைந்தது. இது குறித்து பல  மனுதாரர்கள் திருப்தி தெரிவித்தனர். பஞ்சாயத்து ராஜ் அமைச்சக செயலாளர் திரு விவேக் பரத்வாஜ் 15 அக்டோபர் 2024 அன்று பிரச்சாரத்தின் முன்னேற்றம் குறித்து ஆய்வு செய்ததன் மூலம் சிறப்பு இயக்கம் 4.0-ன் முன்னேற்றம் தொடர்ந்து கண்காணிக்கப்பட்டது. இந்தக் காலகட்டத்தில், “வாழ்க்கையை எளிதாக்குதல்: அடிமட்டத்தில் சேவை வழங்கலை மேம்படுத்துதல்” என்ற தலைப்பில் பஞ்சாயத்து மாநாடு ஐதராபாதில் நடைபெற்றது.  இது குடிமக்களை மையமாகக் கொண்ட ஆளுகைக்கு அமைச்சகத்தின் உறுதிப்பாட்டை வலுப்படுத்தியது. தூய்மை இருவார விழா (2024, அக்டோபர் 16 – 31 ) தேசிய கற்றல் வாரம் (2024, அக்டோபர் 19 – 25) ஆகியவையும் நடத்தப்பட்டன. இந்த இயக்கத்தின் போது, அமைச்சகத்தின் மூன்று அலுவலக வளாகங்களான கிருஷி பவன், ஜீவன் பாரதி கட்டிடம்,  ஜீவன் பிரகாஷ் கட்டிடம் ஆகியவற்றில் விரிவான தூய்மை இயக்கங்கள் நடத்தப்பட்டன.

Read More »

தேசியத் தலைநகர் தில்லிப் பிரதேசத்தில் காற்று மாசுபாட்டைக் கட்டுப்படுத்தவும் தணிக்கவும் தரப்படுத்தலுக்கான செயல் திட்டம் விதிக்கப்பட்ட பின் பல்வேறு முகமைகளால் இலக்கு நிர்ணயிக்கப்பட்ட நடவடிக்கைகளின் அமலாக்கம்

தேசியத் தலைநகர் தில்லியிலும்  அருகிலுள்ள பகுதிகளிலும் காற்று தர மேலாண்மை ஆணையத்தால்  திருத்தப்பட்ட தரப்படுத்தலுக்கான செயல் திட்டத்தை 15.10.2024 முதல் செயல்படுத்துவதன் மூலம், காற்று மாசுபாட்டைக் கட்டுப்படுத்தும் சம்பந்தப்பட்ட நிறுவனங்களால் நடவடிக்கைகள் எடுக்கப்படுகின்றன. ஆணையத்தில் தரப்படுத்தலுக்கான செயல் திட்ட கண்காணிப்பு கட்டுப்பாட்டு அறை அமைத்தல்,  மாநிலங்களால் இலக்கு நிர்ணயிக்கப்பட்ட நடவடிக்கைகளை பின்தொடர்வதற்கும் கண்காணிப்பதற்கும், 15.10.2024 முதல் ஆணையத்தில் தரப்படுத்தலுக்கான செயல் திட்ட கண்காணிப்பு கட்டுப்பாட்டு அறை அமைக்கப்பட்டுள்ளது. இது தர மேலாண்மை ஆணைய உறுப்பினர்  தலைமையில் உள்ளது. கட்டுப்பாட்டு அறை மற்றும் சம்பந்தப்பட்ட மாநிலங்களின் நோடல் அதிகாரிகள் இடையே தகவல்களை சுமூகமாக பரிமாற்றுவதற்காக ஒரு பிரத்யேக வாட்ஸ்அப் குழு உருவாக்கப்பட்டுள்ளது. தேசியத் தலைநகர் தில்லி முழுவதும் 7000-க்கும் அதிகமான  கட்டுமானம் மற்றும் கட்டிட இடிப்புத் தளங்கள் ஆய்வு செய்யப்பட்டன.  597 இணக்கமில்லா  தளங்களுக்கு சுற்றுச்சூழல் இழப்பீடு  விதிக்கப்பட்டுள்ளது மற்றும் 56 தளங்களுக்கு மூடுவதற்கான உத்தரவுகள் பிறப்பிக்கப்பட்டுள்ளன. சாலை தூசியைக் கட்டுப்படுத்த சாலை துப்புரவு இயந்திரங்கள், நீர் தெளிப்பான்கள், புகை எதிர்ப்பு தண்ணீர் துப்பாக்கிகள் ஆகியவை வற்றை நிறுவுதல்: தில்லியில் மட்டும் தினமும் சராசரியாக 81 சாலை துப்புரவு இயந்திரங்கள் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளன . ஹரியானா மற்றும் உத்தரப்பிரதேச  சாலைகளில் இருந்து வரும் தூசி மாசுபாட்டைக் கட்டுப்படுத்த தினமும் 36 சாலை துப்புரவு இயந்திரங்கள் பயன்படுத்தப்படுகின்றன. தேசியத் தலைநகர் தில்லி முழுவதும் தினமும் சராசரியாக சுமார் 600 நீர் தெளிப்பான்கள் மற்றும் புகை எதிர்ப்பு தண்ணீர் துப்பாக்கிகள் பயன்படுத்தப்பட்டன. ஏறத்தாழ 1400 தொழிற்சாலைகள் மற்றும் 1300 மின் உற்பத்திக்கான டீசல் என்ஜின்கள் ஆய்வு செய்யப்பட்டு, இணங்காத தொழிற்சாலைகள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டது.

Read More »

உயிரியல் பன்முகத்தன்மை குறித்த மாநாட்டிற்கான சி.ஓ.பி16 இல் புதுப்பிக்கப்பட்ட தேசிய பல்லுயிர் உத்தி மற்றும் செயல் திட்டத்தை இந்தியா அறிமுகப்படுத்தியது

 உயிரியல் பன்முகத்தன்மை குறித்த மாநாட்டிற்கான 16-வது சி.ஓ.பி கூட்டத்தில் இந்தியாவின் புதுப்பிக்கப்பட்ட தேசிய பல்லுயிர் உத்தி மற்றும் செயல்திட்டத்தை  மத்திய சுற்றுச்சூழல், வனம் மற்றும் காலநிலை மாற்றத்துக்கான இணை அமைச்சர் திரு கீர்த்தி வர்தன் சிங் வெளியிட்டார். கொலம்பியாவின் காலியில், அக்டோபர் 30, 2024 அன்று, ‘குன்மிங்-மாண்ட்ரீல் குளோபல் பல்லுயிர் கட்டமைப்பின் இலக்குகளை அடைவதற்கான செயல்திட்டம்  மற்றும் இந்தியாவின் புதுப்பிக்கப்பட்ட தேசிய பல்லுயிர் உத்தி மற்றும் செயல் திட்டம்’ என்ற சிறப்பு நிகழ்வின் போது இந்த ஆவணம் வெளியிடப்பட்டது. கொலம்பியாவின் சுற்றுச்சூழல் மற்றும் நிலையான அபிவிருத்திக்கான துணை அமைச்சர் மொரிசியோ கப்ரேரா, பலதரப்பு விவகாரங்களுக்கான துணை அமைச்சர் திருமிகு கண்டியா ஒபேசோ, உயிரியல் பன்முகத்தன்மை குறித்த மாநாட்டிற்கான நிர்வாக செயலாளர் திருமிகு ஆஸ்ட்ரிட் ஸ்கோமேக்கர், இந்திய அரசின் சுற்றுச்சூழல், வனம் மற்றும் காலநிலை மாற்ற அமைச்சகத்தின் சிறப்புச் செயலாளர் திரு தன்மய் குமார் மற்றும் தேசிய பல்லுயிர் ஆணையத்தின் தலைவர் திரு சி.அச்சலேந்தர் ரெட்டி உள்ளிட்டோர் இந்த நிகழ்வில் கலந்துகொண்டனர். நிகழ்ச்சியில் பேசிய அமைச்சர் திரு கீர்த்தி வர்தன் சிங், குன்மிங்-மாண்ட்ரீல் குளோபல் பல்லுயிர் கட்டமைப்புடன் இணைந்த புதுப்பிக்கப்பட்ட தேசிய பல்லுயிர் உத்தி மற்றும் செயல் திட்டமானது, 2030-ஆம் ஆண்டளவில் பல்லுயிர் இழப்பைத் தடுத்து நிறுத்துவதற்கும், 2050-ஆம் ஆண்டளவில் இயற்கையோடு இயைந்து வாழ்வது என்ற நீண்ட காலப் பார்வையுடன், உத்திகளைக் கையாள்வதற்கான ஒரு முக்கிய திட்டமாகும் என்று கூறினார். இந்தியா தனது செயல்திட்டத்தைப் புதுப்பிப்பதில் ‘முழுமையானஅரசு’ மற்றும் ‘முழுமையான சமூக’ அணுகுமுறையை ஏற்றுக்கொண்டதாக அவர் எடுத்துரைத்தார். புதுப்பிக்கப்பட்ட செயல்திட்டம் சுற்றுச்சூழல் சவால்களை ஏற்றுக்கொள்வதுடன் சுற்றுச்சூழல் மறுசீரமைப்பு, இனங்கள் மீட்பு திட்டங்கள் மற்றும் சமூகத்தால் இயக்கப்படும் பாதுகாப்பு முயற்சிகள் மூலம் சீரழிந்த சுற்றுச்சூழல் அமைப்புகளின் மறுசீரமைப்பு, சதுப்பு நிலங்களைப் பாதுகாத்தல் மற்றும்  கடலோரப் பகுதிகள் மற்றும் கடல்சார் மேலாண்மை ஆகியவற்றில் கவனம் செலுத்துவதற்கான உத்திகளை கோடிட்டுக் காட்டுகிறது என்று அமைச்சர் மேலும் குறிப்பிட்டார்.

Read More »

கான்பூர் துப்பாக்கித் தொழிற்சாலையில் பாதுகாப்புத் துறை அமைச்சர் திரு ராஜ்நாத் சிங் ஆய்வு

பாதுகாப்புத் துறை அமைச்சர் திரு ராஜ்நாத் சிங், இன்று (02 நவம்பர் 2024), உத்தரப்பிரதேசத்தில் உள்ள மேம்பட்ட ஆயுதங்கள், உபகரணங்கள் இந்தியா லிமிடெட் (AWEIL) நிறுவனத்தின் பிரிவான கான்பூரில் உள்ள கள துப்பாக்கித் (ஃபீல்ட் கன்) தொழிற்சாலைக்குச் சென்றார்.  இது டேங்க் டி -90, தனுஷ் கன் உள்ளிட்ட பல்வேறு பீரங்கி துப்பாக்கிகள், டாங்கிகளின் பீப்பாய் போன்றவை தயாரிப்பதில் நிபுணத்துவம் பெற்ற நிறுவனம் ஆகும். இந்தப் பயணத்தின்போது, வெப்ப சுத்திகரிப்பு, தொழிற்சாலையின் புதிய பகுதி உள்ளிட்ட முக்கிய வசதிகளை பாதுகாப்புத் துறை அமைச்சர் ஆய்வு செய்தார். அவருடன் பாதுகாப்பு உற்பத்தித் துறைச் செயலாளர் திரு சஞ்சீவ் குமார், பாதுகாப்பு ஆராய்ச்சி – மேம்பாட்டுத் துறை செயலாளரும், டிஆர்டிஓ தலைவருமான டாக்டர் சமீர் வி காமத் ஆகியோரும் சென்றனர்.  கான்பூரில் உள்ள பாதுகாப்பு பொதுத்துறை நிறுவனங்களான (டிபிஎஸ்யூ) – ஏவெய்ல், ட்ரூப் கம்ஃபோர்ட்ஸ் இந்தியா லிமிடெட், கிளைடர்ஸ் இந்தியா லிமிடெட் மற்றும் கான்பூரில் அமைந்துள்ள டிஆர்டிஓ ஆய்வகத்தின் அதிகாரிகள் திரு ராஜ்நாத் சிங்கிடம் விளக்கங்களை அளித்தனர். அமைச்சரின் இந்த ஆய்வின் போது, இந்த நிறுவனங்களின் உற்பத்தி விவரம், தற்போதைய முக்கிய திட்டங்கள், ஆராய்ச்சி – மேம்பாட்டு முயற்சிகள் குறித்து அவருக்கு விளக்கப்பட்டது. ஏடபிள்யூஇஐஎல் (AWEIL) சிறிய, நடுத்தர, பெரிய காலிபர் துப்பாக்கி அமைப்புகளை தயாரிப்பதில் நிபுணத்துவம் பெற்றது.

Read More »

மத்திய / மாநில மற்றும் தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி (EPFO) ஓய்வூதியதாரர்களுக்கு தபால்காரர் மூலம் வீடு தேடி வரும் டிஜிட்டல் உயிர்வாழ் சான்றிதழ்

சென்னை வட கோட்ட முதுநிலை அஞ்சல்  கண்காணிப்பாளர் திரு. கி.  லட்சுமணன் பிள்ளை அவர்கள் விடுத்துள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது: மத்திய/மாநில அரசு ஓய்வூதியதாரர்கள், ராணுவ ஓய்வூதியதாரர்கள், மற்றும் இதர ஓய்வூதியதாரர்களுக்கு அவர்களின் வீட்டிற்கே சென்று இந்தியா போஸ்ட் பேமெண்ட்ஸ் வங்கி மூலமாக டிஜிட்டல் முறையில் உயிர்வாழ் சான்றிதழைச் சமர்ப்பிக்கும் சேவையை அஞ்சல் துறை, தபால்காரர்கள் மூலம் வழங்கிவருகிறது. ஒவ்வொரு ஆண்டும் ஓய்வூதியதாரர்கள் தங்கள் ஓய்வூதியத்தை தொடர்ந்து பெற தங்கள் …

Read More »

தேசிய இளைஞர் விருதுக்கு (2022-23) விண்ணப்பிக்குமாறு டாக்டர் மன்சுக் மாண்டவியா இளைஞர்களுக்கு வலியுறுத்தல்

இந்தியாவின் வளர்ச்சி மற்றும் சமூக முன்னேற்றத்திற்குச் சிறப்பாகப் பங்களித்தவர்களை அங்கீகரிக்கும் வகையில் வழங்கப்படும் மதிப்புமிக்க தேசிய இளைஞர் விருதுகள் 2022-23-க்கு விண்ணப்பிக்குமாறு இளம் இந்தியர்களுக்கு மத்திய இளைஞர் விவகாரங்கள் மற்றும் விளையாட்டு, தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்புத் துறை அமைச்சர் டாக்டர் மன்சுக் மாண்டவியா அழைப்பு விடுத்துள்ளார். விளையாட்டு, சமூக சேவை, அறிவியல் அல்லது ஆராய்ச்சி என அனைத்துத் துறைகளிலும் இந்திய இளைஞர்களின் ஈடு இணையற்ற உணர்வை எடுத்துரைத்த டாக்டர் மாண்டவியா, இந்த விருதுகள் வெறும் பாராட்டாக மட்டுமல்லாமல், முற்போக்கான …

Read More »

தன்னிச்சையான நிறை பொருட்களுக்கான குவாண்டம் கோட்பாட்டின் வரம்புகளை ஆராய புதிய சோதனை

வழக்கமான நுண்ணிய இயற்பியல் பொருள்களை (அணுக்கள், மூலக்கூறுகள் போன்றவை) விட மிகப் பெரிய பொருட்களுக்கான குவாண்டம் கோட்பாட்டின் செல்லுபடியாகும் களத்தை சோதிக்க விஞ்ஞானிகள் ஒரு பரிசோதனையை உருவாக்கியுள்ளனர். அதற்கு அப்பால் கிளாசிக்கல் கோட்பாடு அவசியம் பயன்படுத்தப்பட வேண்டும். அதிநவீன குவாண்டம் தொழில்நுட்பங்களில் முக்கியமான கருவிகளான உயர் துல்லியமான குவாண்டம் சென்சார்களை உருவாக்கவும் இந்த ஆய்வு உதவும். நியூட்டனிய கிளாசிக்கல் மெக்கானிக்ஸின் கோட்பாடுகளுக்குப் பதிலாக குவாண்டம் இயந்திரவியல் கோட்பாடுகள் சுமார் 100 ஆண்டுகளுக்கு முன்பு உருவாக்கப்பட்டன. இருப்பினும், இதில் பல சிக்கல்கள் உள்ளன. அறிவியல் மற்றும் தொழில்நுட்பத் துறையின் (டி.எஸ்.டி) தன்னாட்சி நிறுவனமான கொல்கத்தாவின் போஸ் நிறுவனத்தைச் சேர்ந்த பேராசிரியர் தீபங்கர் ஹோம், டி.தாஸ், எஸ்.போஸ் (யுனிவர்சிட்டி காலேஜ் லண்டன்) மற்றும் எச்.உல்பிரிச்ட் (யுனிவர்சிட்டி ஆஃப் சவுத்தாம்ப்டன், யுகே) ஆகியோருடன் இணைந்து ஊசலாடுதல் போன்ற பெரிய நிறை கொண்ட அலைவுறும் பொருளுக்கு குவாண்டம் நடத்தையின் கவனிக்கத்தக்க அடையாளத்தை நிரூபிப்பதற்கான ஒரு புதிய செயல்முறையை உருவாக்குவதன் மூலம் இந்த சவாலை எதிர்கொண்டனர். இந்த விஞ்ஞானிகள் ஒரு தன்னிச்சையான பெரிய குவாண்டம் இயந்திர ஊசலுக்கான அளவீட்டால் தூண்டப்பட்ட இந்த இடையூறுகளைக் கண்டறிய ஒரு புதிய வழியைக் கண்டுபிடித்துள்ளனர். தற்போதுள்ள அதிநவீன தொழில்நுட்பத்தை வைத்துப் பார்க்கும்போது, இந்த உத்தேசிக்கப்பட்ட பரிசோதனை வரும் ஆண்டுகளில் அலைவுறும் நானோ பொருள்கள் (ஹைட்ரஜன் அணுவை விட டிரில்லியன் மடங்கு கனமான தூசியைப் போன்றது) முதல் ஈர்ப்பு அலை கண்டறிதலுக்குப் பயன்படுத்தப்படும் சுமார் 10 கிலோ எடையுள்ள திறம்பட்ட நிறை கொண்ட அலைவுறும் கண்ணாடிகள் வரையிலான அமைப்புகளுக்கு சாத்தியமாகும். இந்தப் பணி பெரிய அளவிலான குவாண்டம்னெஸின் மிகவும் அழுத்தமான செயல்முறையை வழங்கும் சோதனைகளுக்கு வழி வகுக்கும்.

Read More »

2024-25 ஆம் நிதியாண்டின் முதல் பாதியில் முக்கிய தாதுக்கள் மற்றும் இரும்பு அல்லாத உலோகங்களின் உற்பத்தியில் திடமான வளர்ச்சி

2023-24 நிதியாண்டில் சாதனை உற்பத்தி அளவை எட்டிய பின்னர், நாட்டில் சில முக்கிய கனிமங்களின் உற்பத்தி 2024-25 நிதியாண்டில் தொடர்ந்து திடமான வளர்ச்சியைக் கண்டுள்ளது. தற்காலிக தரவுகளின்படி, இரும்புத் தாது உற்பத்தி 2023-24 நிதியாண்டில் (ஏப்ரல்-செப்டம்பர்) 128 எம்எம்டி-யிலிருந்து 2024-25 நிதியாண்டில் (ஏப்ரல்-செப்டம்பர்) 135 எம்எம்டியாக அதிகரித்துள்ளது. இது ஆரோக்கியமான 5.5% வளர்ச்சியைக் காட்டுகிறது. இரும்பு அல்லாத உலோகத் துறையில், 2024-25 நிதியாண்டில் (ஏப்ரல்-செப்டம்பர்) முதன்மை அலுமினிய உற்பத்தி கடந்த ஆண்டு இதே காலகட்டத்தை விட 1.2% வளர்ச்சியைப் பதிவு செய்தது. இந்தியா 2-வது பெரிய அலுமினிய உற்பத்தியாளராகவும், சுத்திகரிக்கப்பட்ட தாமிர உற்பத்தியில் முதல் 10 இடங்களில் உள்ளதுடன்,  இந்த வளர்ச்சிப் போக்குகள் …

Read More »