77-வது சுதந்திர தினத்தை முன்னிட்டு, பிரதமர் திரு நரேந்திர மோடி நாடு முழுவதும் உள்ள கைவினைஞர்களை ஊக்கப்படுத்துவதை நோக்கமாகக் கொண்டு பிரதமரின் விஸ்வகர்மா திட்டம் என்ற ஒரு குறிப்பிடத்தக்க முயற்சியை வெளியிட்டார். 2023 செப்டம்பர் 17 அன்று விஸ்வகர்மா ஜெயந்தியின் போது, புது தில்லியின் துவாரகாவில் உள்ள இந்திய சர்வதேச மாநாடு மற்றும் கண்காட்சி மையத்தில் இது தொடங்கப்பட்டது. இந்தத் திட்டம் பாரம்பரிய கைவினைத்திறனை ஆதரிப்பதற்கான அரசின் உறுதிப்பாட்டை பிரதிபலிக்கிறது. 2023 ஆகஸ்ட் 16 அன்று, பிரதமர் திரு மோடி தலைமையிலான பொருளாதார …
Read More »சிறந்த அறிமுக இயக்குநர்’ பிரிவுக்கான அதிகாரப்பூர்வ ‘இந்திய திரைப்பட தேர்வை இந்திய சர்வதேச திரைப்பட திருவிழா 2024-ஐ அறிவித்துள்ளது
நாட்டில் புதிய மற்றும் இளம் திறமையாளர்களை ஊக்குவிக்கும் நோக்கில், 55-வது இந்திய சர்வதேச திரைப்பட விழா ஒரு புதிய விருது பிரிவை உருவாக்கியுள்ளது. ‘இந்திய திரைப்படத்தின் சிறந்த அறிமுக இயக்குனர் பிரிவு, நாடு முழுவதிலுமிருந்து புதிய முன்னோக்குகள், மாறுபட்ட கதைகள் மற்றும் புதுமையான சினிமா பாணிகளை முன்னிலைப்படுத்தும் ஐந்து குறிப்பிடத்தக்க அறிமுக படங்களைக் காட்சிப்படுத்தும். 2024 நவம்பர் 20 முதல் 28 வரை நடைபெறவுள்ள இந்திய சர்வதேச திரைப்பட திருவிழா, இந்திய திரைப்படப் பிரிவின் சிறந்த அறிமுக இயக்குநருக்கான அதிகாரப்பூர்வ தேர்வை அறிவித்தது. இந்திய திரைப்பட பிரிவில் சிறந்த அறிமுக இயக்குனர்: அதிகாரப்பூர்வ தேர்வு …
Read More »இந்தியாவில் படைப்போம் சவால் – சீசன் 1- உலக ஒலி ஒளி பொழுதுபோக்கு (வேவ்ஸ்) உச்சி மாநாட்டிற்கான பணி வேகம் பெற்றுள்ளது
உலக ஒலி ஒளி பொழுதுபோக்கு (வேவ்ஸ்) உச்சி மாநாட்டிற்கு முன்னோடியான இந்தியாவில் படைப்போம் சவால் – சீசன் 1-க்கு பெரும் வரவேற்பு இருப்பதை அறிவிப்பதில் மத்திய தகவல் மற்றும் ஒலிபரப்பு அமைச்சகம் மகிழ்ச்சி அடைகிறது. இந்தியாவில் படைப்போம் சவால் (சி.ஐ.சி) என்பது இந்தியப் படைப்பாளர்களின் பொருளாதாரத்தில் ஆழமான தாக்கத்தை ஏற்படுத்துவதை நோக்கமாகக் கொண்டுள்ளது. உள்ளடக்க படைப்பாளர்கள் மற்றும் புதிய கண்டுபிடிப்பாளர்கள் தங்கள் திறமைகளை வெளிப்படுத்தவும், அவர்களின் திறன்களைப் பணமாக்கவும், இந்திய ஊடகம் மற்றும் பொழுதுபோக்கு …
Read More »நீர்வள அமைச்சகத்தின் குடிநீர் மற்றும் துப்புரவுத்துறை, சிறப்பு இயக்கம் 4.0 ஐ வெற்றிகரமாக நிறைவு செய்தது
குடிநீர் மற்றும் துப்புரவுத் துறை மற்றும் அதன் திட்டப்பிரிவுகள், டாக்டர் சியாமா பிரசாத் முகர்ஜி தேசிய நீர் மற்றும் துப்புரவு நிறுவனம் ஆகியவற்றுடன் இணைந்து சிறப்பு இயக்கம் 4.0-ஐ வெற்றிகரமாக நிறைவு செய்தது. அலுவலகங்களின் தூய்மையை மேம்படுத்துவதும், நாடாளுமன்ற உறுப்பினர்களின் குறிப்புகள், மாநில அரசுகளின் குறிப்புகள், அமைச்சகங்களுக்கு இடையேயான குறிப்புகள், நாடாளுமன்ற உத்தரவாதங்கள், பிரதமர் அலுவலகக் குறிப்புகள், பொதுமக்கள் குறைதீர்ப்பு மனுக்கள், பொதுமக்கள் குறைதீர்ப்பு மேல்முறையீடுகள் போன்றவற்றில் நிலுவையில் உள்ள பணிகளுக்கு தீர்வு காண்பதும் இந்த இயக்கத்தின் நோக்கங்களாகும். இந்தக் காலகட்டத்தில் …
Read More »இந்தியா-வியட்நாம் கூட்டு ராணுவப் பயிற்சி வின்பாக்ஸ் 2024 ஹரியானாவின் அம்பாலாவில் தொடங்கியது
வியட்நாம்-இந்தியா இருதரப்பு ராணுவப் பயிற்சியின் 5 வது பதிப்பான “வின்பாக்ஸ் 2024” இன்று அம்பாலாவில் தொடங்கியது. இந்தப் பயிற்சியை 2024 நவம்பர் 04 முதல் 23 வரை அம்பாலா மற்றும் சண்டிமந்திரில் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. இந்தப் பயிற்சி 2023-ம் ஆண்டு வியட்நாமில் நடத்தப்பட்ட இருதரப்பு பயிற்சியின் தொடர்ச்சியாகும். இந்தியா- வியட்நாம் இடையேயான இருதரப்பு உறவுகளை வலுப்படுத்துவதில் இது ஒரு முக்கிய மைல்கல்லாகும். இரு நாடுகளையும் சேர்ந்த ராணுவ, விமானப்படை வீரர்கள் முதல் முறையாகப் பயிற்சியில் பங்கேற்பதன் மூலம் இந்தப் பதிப்பு குறிப்பிடத்தக்க அளவில் இருதரப்புப் பங்கேற்பையும் அளிக்கிறது. 47 வீரர்களைக் …
Read More »முப்படைத் தளபதி ஜெனரல் அனில் சௌஹான் தனது நான்கு நாள் அல்ஜீரியா பயணத்தை நிறைவு செய்தார்
முப்படைத் தளபதி ஜெனரல் அனில் சௌஹான் தலைமையிலான இந்திய ராணுவ உயர்மட்டக் குழு, 2024 அக்டோபர் 31 முதல் நவம்பர் 03 வரை அல்ஜீரியா நாட்டில் அரசு முறைப் பயணம் மேற்கொண்டது. சமீபத்திய ஆண்டுகளில், குறிப்பாக வர்த்தகம், கல்வி, தொழில்நுட்பம் மற்றும் பாதுகாப்பு ஆகிய துறைகளில் ஒத்துழைப்பு அதிகரித்து வருவது இந்தியா-அல்ஜீரியா உறவுகளை வலுப்படுத்துவதற்கான பரந்த முயற்சியின் ஒரு பகுதியாக இந்த பயணம் அமைந்தது. ஒரு குறிப்பிடத்தக்க நடவடிக்கையாக, ஜெனரல் …
Read More »ஆசிய பௌத்த உச்சி மாநாடு 2024
பல்வேறு கலாச்சாரங்கள் மற்றும் மத நம்பிக்கைகளின் துடிப்பான கட்டமைப்பைக் கொண்ட இந்தியா, நீண்ட காலமாக புத்த மதத்தின் இதயப்பகுதியாக திகழ்ந்து வருகிறது. இந்தப் பண்டைய பாரம்பரியம் அதன் எல்லைகளுக்குள் செழித்து வளர்ந்தது மட்டுமல்லாமல், பல்வேறு நாடுகளுக்கும் பரவியது. இந்த வளமான பாரம்பரியத்தைக் கொண்டாட, மத்திய அரசின் கலாச்சார அமைச்சகம், சர்வதேச பௌத்த கூட்டமைப்புடன் (IBC) இணைந்து, முதல் ஆசிய பௌத்த உச்சி மாநாட்டை (ABS) 2024 நவம்பர் 5-6 தேதிகளில் …
Read More »தூய்மை இந்தியா இயக்கத்தை வலுப்படுத்தும் சிறப்பு இயக்கம் 4.0-ல் அஞ்சல் துறை முக்கிய மைல்கற்களை எட்டியுள்ளது
அஞ்சல் துறை அதன் நாடு தழுவிய வலைப்பின்னலில் பல நடவடிக்கைகளை மேற்கொண்டதுடன், நிர்ணயிக்கப்பட்ட காலத்திற்குள், கொடுக்கப்பட்ட அளவுருக்களில் அதன் இலக்குகளையும் எட்டியுள்ளது. சிறப்பு இயக்கம் 4.0-ன் கீழ், தூய்மை இந்தியாவுக்கான தேசிய இயக்கப் பணிகள் மேற்கொள்ளப்பட்டன.செப்டம்பர் 15 முதல் 30, 2024 வரை ஆயத்த நடவடிக்கைகளுடன் தொடங்கி, அக்டோபர் 2 முதல் 31 வரை இந்த இயக்கம் செயல்படுத்தப்பட்டது. அப்போது அஞ்சல் துறை அசல் இலக்கான 1 லட்சத்தை தாண்டி, அனைத்து 1.65 லட்சம் நெட்வொர்க் தளங்களையும் உள்ளடக்கியது. இந்தப் பரவலான தூய்மை முன்முயற்சி நாடு முழுவதும் தொலைதூர மற்றும் கிராமப்புற இடங்களைச் சென்றடைவதை உறுதி …
Read More »அரசு மின்னணு சந்தை (GeM) 170 விதை வகைகளை இணையதளத்தில் அறிமுகப்படுத்தியுள்ளது
தரமான வேளாண் மற்றும் தோட்டக்கலை விதைகள் கிடைப்பதை எளிதாக்கும் நோக்கில், அரசு 170 விதை வகைகளை புனரமைத்து இணையதளம் மூலமாக மின்னணு சந்தையில் (GeM) அறிமுகப்படுத்தியுள்ளது. வரவிருக்கும் பயிர் பருவத்திற்காக உருவாக்கப்பட்ட இந்தப் புதிய வகைகளில் கிட்டத்தட்ட 8,000 விதை ரகங்கள் உள்ளன. அவை மத்திய / மாநில பொதுத்துறை நிறுவனங்கள் மற்றும் பிற ஆளும் அமைப்புகளால், நாடு முழுவதும் கிடைப்பதற்காக வாங்கப்படலாம். மாநில விதை நிறுவனங்கள் மற்றும் ஆராய்ச்சி …
Read More »கோல் இந்தியா நிறுவனம் 50-வது நிறுவன தினத்தை எதிர்காலத்திற்கான தொலைநோக்குடன் கொண்டாடுகிறது – வளர்ச்சியடைந்த இந்தியா
நிலக்கரி அமைச்சகத்தின் கீழ் செயல்படும் கோல் இந்தியா நிறுவனம் (சிஐஎல்), தனது 50-வது நிறுவன தினத்தை கொல்கத்தாவில் உள்ள கோல் இந்தியா தலைமையகத்தில் கொண்டாடியது. இந்தக் கொண்டாட்டத்தில், மத்திய நிலக்கரி மற்றும் சுரங்கத்துறை அமைச்சர் திரு ஜி.கிஷன் ரெட்டி தலைமை விருந்தினராகவும், நிலக்கரி அமைச்சகத்தின் செயலாளர் திரு விக்ரம் தேவ் தத் கௌரவ விருந்தினராகவும் கலந்து கொண்டனர். முக்கியத்துவம் வாய்ந்த இந்த நிகழ்வு கடந்த ஐந்து தசாப்தங்களாக நாட்டின் எரிசக்தித் துறைக்கு சிஐஎல் ஆற்றியுள்ள பங்களிப்புகளைக் …
Read More »