गुरुवार, नवंबर 07 2024 | 08:07:00 AM
Breaking News
Home / Tamil (page 6)

Tamil

Tamil

ரசாயனம் மற்றும் பெட்ரோ கெமிக்கல்ஸ் துறை சிறப்பு இயக்கம் 4.0 -ஐ, 2024 அக்டோபர் 2 முதல் அக்டோபர் 31 வரை மேற்கொள்கிறது

ரசாயனம் மற்றும் உரங்கள் அமைச்சகத்தின் கீழ் உள்ள ரசாயனம் மற்றும் பெட்ரோ கெமிக்கல்ஸ் துறை சிறப்பு இயக்கம் 4.0-ஐ மேற்கொண்டு அது நிர்ணயித்த இலக்கை முழுமையாக அடைகிறது. ரசாயனம் மற்றும் பெட்ரோலிய ரசாயனத் துறையும் அதன் அமைப்புகளும் இணைந்து 2.10.2024 முதல் 31.10.2024 வரை நடத்திய சிறப்பு இயக்கம் 4.0-ல் ஆர்வத்துடன் பங்கேற்று, அலுவலகங்களில் நிலுவையிலுள்ள பணிகளைக் குறைப்பதில் கவனம் செலுத்தியது. ஆவண அறையில் உள்ள 2443 நேரடி கோப்புகளையும் மறு ஆய்வு செய்ய இத்துறை இலக்கு நிர்ணயித்துள்ளது. பரிசீலனை முடிந்த நிலையில், மொத்தம் 1250 கோப்புகள் கழிக்கப்பட்டுள்ளன. 4656 மின்னணு கோப்புகள் மதிப்பாய்வு செய்யப்பட்டதில் 880 மின்-கோப்புகள் நீக்கப்பட்டது. தூய்மை …

Read More »

நமோ ட்ரோன் சகோதரி

மேம்பட்ட வேளாண் தொழில்நுட்பத்துடன் மகளிர் சுய உதவிக் குழுக்களுக்கு அதிகாரம் அளித்தல் நவம்பர் 4, 2024 நமோ ட்ரோன் சகோதரி என்பது பெண்கள் தலைமையிலான சுய உதவிக் குழுவினரை விவசாய சேவைகளை மேற்கொள்ள ட்ரோன் தொழில்நுட்பம் பயன்படுத்துவதற்கு ஆயத்தப்படுத்துவதன் மூலம், அவர்களுக்கு அதிகாரம் அளிப்பதை நோக்கமாகக் கொண்ட ஒரு மத்திய அரசின்  திட்டமாகும். 2024-25 முதல் 2025-2026 வரையிலான காலகட்டத்தில் தேர்ந்தெடுக்கப்பட்ட 15,000 மகளிர் சுய உதவிக் குழுக்களுக்கு, விவசாய நோக்கத்திற்காக …

Read More »

அல்மோரா சாலை விபத்தில் உயிரிழந்தவர்களுக்குப் பிரதமர் இரங்கல் தெரிவித்துள்ளார்

உத்தராகண்ட் மாநிலம் அல்மோராவில் ஏற்பட்ட கோரமான சாலை விபத்தில் பரிதாபமாக உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கும் அவர்களின் உறவினர்களுக்கும் பிரதமர் திரு நரேந்திர மோடி இரங்கல் தெரிவித்துள்ளார். @PMOIndia சமூக ஊடகத்தில்  பகிர்ந்துகொள்ள  அறிக்கையில், பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு தனது வருத்தத்தையும், விபத்தில் காயமடைந்த அனைவரும் விரைவாக குணமடைய தனது மனமார்ந்த பிரார்த்தனைகளையும் பிரதமர் தெரிவித்துள்ளார். “உத்தராகண்ட் மாநிலம் அல்மோராவில் ஏற்பட்ட துரதிர்ஷ்டவசமான சாலை விபத்தில் தங்கள் அன்புக்குரியவர்களை இழந்தவர்களுக்கு எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன். காயமடைந்த அனைவரும் …

Read More »

பாரதம் தற்போது காலனிய மனப்பான்மையை தூக்கி எறிந்துவிட்டு, முந்தைய முக்கிய காலனிய சிந்தனைகளை புறந்தள்ளுகிறது – குடியரசு துணைத்தலைவர்

காலனிய மனப்பான்மையை பாரதம் விரைவாக தூக்கி எறிந்து வருகிறது என்றும் முந்தைய காலனிய சிந்தனைகள் மற்றும் சின்னங்களை தற்போது நாம் புறந்தள்ளி வருகிறோம் என்றும், இந்திய பொது நிர்வாகம் காலனிய மனப்பான்மையிலிருந்து விலகி, சுதந்திரத்திற்குப் பிந்தைய நமது விருப்பங்களுடன் ஒத்துப்போகும் வகையில் இந்திய பண்புகளைக் கொண்டிருக்க வேண்டும் என்றும் குடியரசுத் துணைத் தலைவர் திரு. ஜக்தீப் தன்கர் கூறினார். புதுதில்லியில் இன்று நடைபெற்ற இந்திய பொது நிர்வாகக் கழகப் பொதுக்குழுவின் 70-வது ஆண்டுக் கூட்டத்தில் …

Read More »

இந்திய விமானப் போக்குவரத்துத் துறையின் பெண் சாதனையாளர்களுடன் குடியரசுத் தலைவர் கலந்துரையாடினார்

குடியரசுத் தலைவர் திருமதி திரௌபதி முர்மு, இன்று (நவம்பர் 4, 2024) குடியரசுத் தலைவர் மாளிகையில், இந்திய விமானப் போக்குவரத்துத் துறையில் சாதனை படைத்த பெண்கள் குழுவினருடன் கலந்துரையாடினார். மக்களுடன் ஆழமான தொடர்பை ஏற்படுத்துவதையும் அவர்களின் பங்களிப்புகளை அங்கீகரிப்பதையும் நோக்கமாகக் கொண்ட ‘மக்களுடன் குடியரசுத்தலைவர்” என்ற முன்முயற்சியின் கீழ் இந்த சந்திப்பு நடந்தது. நிகழ்ச்சியில் பேசிய குடியரசுத் தலைவர், இந்தியாவின் சிவில் விமானப் போக்குவரத்துத் துறையில் பல்வேறு செயல்பாட்டு மற்றும் தொழில்நுட்பத் துறைகளில், பெண்கள் முக்கியப் பங்காற்றி வருவதாகக் கூறினார். …

Read More »

‘கங்கையை சந்திக்கும் காவேரி ‘யின் 2-ம் நாள் நிகழ்வுகள்: அமிர்தப் பாரம்பரியத்தின் கீழ் இந்தியக் கலாச்சார பாரம்பரியத்தின் கண்கவர் விழா

பகிரப்பட்ட கலை மற்றும் கலாச்சார பாரம்பரியத்தின் மூலம் இந்தியாவை ஒன்றிணைக்கும் ஒரு மாபெரும் முயற்சியான அமிர்தப் பாரம்பரியம் என்ற சிறப்பு விழா தொடரை கலாச்சார அமைச்சகம் தொடர்கிறது. நவம்பர் 2-ம் தேதி வெற்றிகரமாக தொடங்கப்பட்டதைத் தொடர்ந்து, அமிர்தப் பாரம்பரியம் தொடரில் முதலாவதான ‘கங்கையை சந்திக்கும் காவேரி ‘ நிகழ்ச்சி – கடமைப் பாதை, கலாச்சார வளங்கள் மற்றும் பயிற்சிக்கான மையம் ஆகியவற்றில்  இரண்டாவது நாளில் பார்வையாளர்களை மீண்டும் கவர்ந்தது. இந்தியாவின் பாரம்பரிய, நாட்டுப்புறக் கலைகளை ஒரே இந்தியா உன்னத இந்தியா  என்ற உணர்வை  முன்னிலைப்படுத்தும் நிகழ்ச்சிகள் இதில் இடம்பெற்றன. கலாச்சார அமைச்சகத்தின் தன்னாட்சி நிறுவனங்களான சங்கீத நாடக அகாடமி, கலாக்ஷேத்ரா,  கலாச்சார வளங்கள் மற்றும் பயிற்சிக்கான மையம்  (சி.சி.ஆர்.டி) ஆகியவற்றால் கூட்டாக ஏற்பாடு செய்யப்பட்ட இந்த விழா தொடர், வட இந்தியாவில் சிறந்த தென்னிந்திய இசை மற்றும் நடனத்தை ஒன்றிணைக்கிறது. அதே நேரத்தில் வடக்கில் உள்ள கலை மரபுகளையும் கொண்டாடுகிறது. 2024 நவம்பர் 2 முதல் 5 வரை நடைபெறும்  ‘கங்கையை சந்திக்கும் காவேரி’ திட்டம், சென்னையின் மதிப்பிற்குரிய மார்கழி திருவிழாவால் ஈர்ப்பைப் பெற்ற இது, இந்தியக் கலாச்சாரத்தின் பன்முகத்தன்மையை, அதன் பாரம்பரிய மற்றும் நாட்டுப்புற கலைகளுக்கு புகழ் சேர்ப்பதைப் பிரதிபலிக்கிறது. பாரம்பரிய கலை வடிவங்களுக்கு, குறிப்பாக மறைந்து வரும் கலை வடிவங்களுக்கு, புத்துயிர் அளிப்பதை மையமாகக் கொண்டு இந்தத் தொடரை வழங்குவதில் கலாச்சார அமைச்சகம் பெருமை கொள்கிறது. அதிவேக தொழில்நுட்பம், நவீன விளக்கக்காட்சியின் புதுமையான பயன்பாடு மூலம், அமிர்தப் பாரம்பரியம்  மறக்க முடியாத அனுபவங்களை உருவாக்குவதை நோக்கமாகக் கொண்டுள்ளது. இந்தியாவின் கலை பாரம்பரியத்தையும்  சர்தார் படேலின் வேற்றுமையில் ஒற்றுமை என்ற பார்வையையும்  கௌரவிக்கிறது. சர்தார் படேலின் 150 வது பிறந்த நாளின் இரண்டு ஆண்டு நினைவுகூரல், கொண்டாட்டங்களுக்கு தேசிய பெருமையில்  ஓர் அடுக்கையும்  திருவிழாவின் ஒற்றுமை செய்தியுடன் அவரது மரபையும்  இணைக்கிறது. இந்தியாவின் கலாச்சார பாரம்பரியத்தின்  உள்ளார்ந்த பன்முகத்தன்மையையும்  ஒற்றுமையையும்  வெளிப்படுத்திய கலைஞர்களின் வளமான வரிசையுடன் இரண்டாவது நாள் நிகழ்வுகள் இந்தக்  கொண்டாட்டத்தைத் தொடர்ந்தன. கடமைப் பாதையில், தில்லியைச் சேர்ந்த ஜகதீஷ் பிரகாஷ் குழுவினரின் உற்சாகமான ஷெனாய் இசை நிகழ்ச்சியுடன் மாலைநேர விழா தொடங்கியது. இது இன்றைய கொண்டாட்டங்களுக்கு மேடை அமைத்த மங்களகரமான ஒலிகளால் காற்றை நிரப்பியது. இதைத் தொடர்ந்து, சரஸ்வதி வீணையில் எஸ்.ராதாகிருஷ்ணனும், சரோடில் முகேஷ் சர்மாவும் தென்னிந்திய மற்றும் வட இந்தியாவின் பாரம்பரியங்களை இணைத்து ஒரு மயக்கும் இரட்டை இசைக்கருவி நிகழ்வை நடத்தினர். பின்னர் தமிழ்நாட்டைச் சேர்ந்த புகழ்பெற்ற இரட்டையர்களான ரஞ்சனி,  காயத்ரியின் நேர்த்தியான கர்நாடக குரலிசை நிகழ்ச்சியால்பார்வையாளர்களுக்கு விருந்தளிக்கப்பட்டது. வசந்த் கிரண் மற்றும் கர்நாடகாவைச் சேர்ந்த கலைஞர்களின் உற்சாகமான குச்சிபுடி நிகழ்ச்சியுடன் மாலை நிகழ்வுகள் நிறைவடைந்தன. பாரம்பரிய நடனத்தின் மூலம் துடிப்பான கதை சொல்லலை இது கொண்டு வந்தது. அதே நேரத்தில், சி.சி.ஆர்.டி துவாரகாவில் சென்னையைச் சேர்ந்த கலாக்ஷேத்ரா அறக்கட்டளையின் சிம்பொனி பார்வையாளர்களைக் கவர்ந்தது. இது கர்நாடக இசையின் செழுமையையும் தென்னிந்திய தாள வடிவங்களின் ஆழத்தையும் எடுத்துக்காட்டியது. சிம்பொனியைத் தொடர்ந்து சி.சி.ஆர்.டி.யின் பாரம்பரிய நடனக் குழுவினரான ஸ்ரீ ராகுல் வர்ஷ்னே மற்றும் தில்லியைச் சேர்ந்த டீம் சோச் ஆகியோர் நடன வடிவங்களை இணைத்து இந்தியப் பாரம்பரியத்தின் கலாச்சார முக்கியத்துவத்தை கொண்டாடினர். சி.சி.ஆர்.டி.யில் மாலை நிகழ்வுகள் சூரியகாயத்ரியின் ஆத்மார்த்தமான பஜனையுடன்நிறைவடைந்தது. அவர் தனது அமைதியான மற்றும் இதயப்பூர்வமான குரலால் பக்தி இசையை உயிர்ப்பித்தார். அமிர்தப் பாரம்பரியம் அம்ரித் பரம்பரா ஒரு குறிப்பிடத்தக்க திருவிழா அனுபவமாகத் தொடர்கிறது. இது தில்லி முழுவதும் உள்ள பார்வையாளர்களுக்கு இந்தியாவின் பாரம்பரிய மற்றும் நாட்டுப்புற கலைகளுடன் நவீன, ஈர்க்கக்கூடிய நடைமுறையில்  ஈடுபடுவதற்கான தனித்துவ வாய்ப்பை வழங்குகிறது. அடுத்த இரண்டு நாட்கள் இந்தியாவின் கலாச்சார நிலப்பரப்பில் மறக்கமுடியாத பயணத்தை உறுதியளிக்கும். புதுப்பிப்புகளுக்கு காத்திருங்கள்.

Read More »

2024-2025 கரீஃப் சந்தைப் பருவத்தில் நவம்பர் 2 நிலவரப்படி, பஞ்சாபில் 85.41 லட்சம் மெட்ரிக் டன் நெல்லை இந்திய உணவுக் கழகமும் மாநில முகமைகளும் கொள்முதல் செய்துள்ளன

2024, நவம்பர் 2 நிலவரப்படி, மொத்தம் 90.69 லட்சம் மெட்ரிக் டன் நெல் பஞ்சாப் மண்டிகளுக்கு வந்துள்ளது.  இதில் 85.41லட்சம் மெட்ரிக் டன் மாநில முகமைகள் மற்றும் இந்திய உணவுக் கழகத்தால் கொள்முதல் செய்யப்பட்டுள்ளது. முதல் ரக நெல்லுக்கு மத்திய அரசு தீர்மானித்தபடி ரூ .2320 என்ற குறைந்தபட்ச ஆதரவு விலைக்கு நெல் கொள்முதல் செய்யப்படுகிறது.  மேலும் நடப்பு 2024-25 கரீஃப் சந்தைப் பருவத்தில் இன்றுவரை அரசால் வாங்கப்பட்ட நெல்லின் மொத்த  மதிப்பு ரூ .19800 கோடியாகும். இதனால்  4 லட்சம் விவசாயிகள் பயனடைந்துள்ளனர்.  4640 ஆலை உரிமையாளர்கள் நெல் அரைவைக்கு விண்ணப்பித்துள்ளனர். 4132 ஆலை உரிமையாளர்களுக்கு பஞ்சாப் மாநில அரசு பணி ஒதுக்கீடு செய்துள்ளது. கரீஃப் சந்தைப் பருவம் 2024-25 க்கான நெல் கொள்முதல் பஞ்சாபில் 2024,  அக்டோபர் 1 முதல் தொடங்கப்பட்டுள்ளது.  விவசாயிகளிடமிருந்து சுமூகமாக கொள்முதல் செய்வதற்காக மாநிலம் முழுவதும் 2927 மண்டிகள் மற்றும் தற்காலிக களங்கள் செயல்பட்டு வருகின்றன. 2024-25-ம் ஆண்டிற்கான நெல் கொள்முதலுக்கு 185 லட்சம் மெட்ரிக் டன் நெல் கொள்முதல் செய்ய மத்திய அரசு இலக்கு நிர்ணயித்துள்ளது, இது 30.11.2024 வரை தொடரும். செப்டம்பரில் பெய்த கனமழை மற்றும் நெல்லில் அதிக ஈரப்பதம் காரணமாக கொள்முதல் சற்று தாமதமாகத் தொடங்கினாலும், தற்போது மீண்டும் முழு வீச்சில் நடைபெற்றுவருகிறது.

Read More »

பாய் தூஜ் பண்டிகையை முன்னிட்டு நாட்டு மக்களுக்கு பிரதமர் வாழ்த்து தெரிவித்தார்

பாய் தூஜ் பண்டிகையை முன்னிட்டு நாட்டு மக்களுக்கு பிரதமர் திரு நரேந்திர மோடி வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளார். சமூக ஊடக எக்ஸ் தளத்தில் பிரதமர் பதிவிட்டுள்ளதாவது: “நாட்டு மக்கள் அனைவருக்கும் பாய் தூஜ் நல்வாழ்த்துகள். இந்த மங்களகரமான நாள், சகோதர சகோதரிகளுக்கு இடையேயான பாசத்தை மேலும் ஆழப்படுத்த வேண்டும் என்று விரும்புகிறேன்.”

Read More »

போட்ஸ்வானா அதிபராக தேர்ந்தெடுக்கப்பட்டதையொட்டி திரு டூமா போகோவுக்கு பிரதமர் திரு நரேந்திர மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார்

 போட்ஸ்வானா அதிபராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள திரு டூமா போகோவுக்குப்  பிரதமர் நரேந்திர மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார். சமூக ஊடக எக்ஸ் தளத்தில் வெளியிட்டிருக்கும் செய்தியில், புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்ட அதிபருக்கு வெற்றிகரமான பதவிக்காலம் அமையும் என்ற தமது நம்பிக்கையை வெளிப்படுத்தியுள்ள பிரதமர், போட்ஸ்வானாவுடனான இருதரப்பு உறவுகளை வலுப்படுத்துவதில் இந்தியாவின் உறுதிப்பாட்டை வலியுறுத்தியுள்ளார். தமது பதிவில் பிரதமர் கூறியிருப்பதாவது: “போட்ஸ்வானாவின் அதிபராக நீங்கள் தேர்ந்தெடுக்கப்பட்டதற்கு வாழ்த்துகள் @duma_boko. வெற்றிகரமான பதவிக்காலம் அமைய வாழ்த்துகள். நமது இருதரப்பு உறவுகளை மேலும் வலுப்படுத்த உங்களுடன் நெருக்கமாக பணியாற்றுவதை  எதிர்நோக்குகிறேன்.”

Read More »

காசநோய்க்கு எதிரான போராட்டத்தில் இந்தியாவின் முன்னேற்றத்திற்கு பிரதமர் திரு நரேந்திர மோடி பாராட்டு தெரிவித்துள்ளார்

காசநோயை ஒழிப்பதில் இந்தியா மேற்கொண்டு வரும் முயற்சிகளுக்கு குறிப்பிடத்தக்க அங்கீகாரம் அளித்த பிரதமர் திரு நரேந்திர மோடி, காசநோய் பாதிப்பைக் குறைப்பதில் நாடு அடைந்துள்ள சாதனைகளை எடுத்துரைத்துள்ளார். 2015 முதல் 2023 வரை காசநோயை 17.7% குறைப்பதில் இந்தியாவின் குறிப்பிடத்தக்க முன்னேற்றத்தை உலக சுகாதார அமைப்பு அங்கீகரித்திருப்பது பற்றி மத்திய சுகாதார அமைச்சர் திரு ஜெகத் பிரகாஷ் நட்டா வெளியிட்ட பதிவுக்கு பதிலளித்து  பிரதமர்,  தமது சமூக ஊடக எக்ஸ் தளத்தில் கூறியிருப்பதாவது : “பாராட்டத்தக்க முன்னேற்றம்! காசநோய் பாதிப்பு குறைந்திருப்பது இந்தியாவின் அர்ப்பணிப்பு மற்றும் புதிய கண்டுபிடிப்பு  முயற்சிகளின் விளைவாகும். ஒரு கூட்டு உணர்வின் மூலம், காசநோய் இல்லாத இந்தியாவை நோக்கி நாங்கள் தொடர்ந்து பணியாற்றுவோம்.”

Read More »