शुक्रवार, नवंबर 22 2024 | 11:52:31 AM
Breaking News
Home / Tag Archives: Dr. L. Murugan

Tag Archives: Dr. L. Murugan

माहिती आणि प्रसारण राज्यमंत्री डॉ.एल.मुरुगन यांनी इफ्फी 2024 च्या तयारीचा घेतला आढावा

गोव्यामध्ये 20 ते 28 नोव्हेंबर 2024 दरम्यान होणार असलेल्या 55व्या भारतीय आंतरराष्ट्रीय चित्रपट महोत्सवाच्या तयारीचा आढावा घेण्यासाठी माहिती आणि प्रसारण राज्यमंत्री डॉ.एल.मुरुगन यांनी आज प्रमुख हितधारकांसोबत एक बैठक घेतली. या बैठकीदरम्यान, डॉ. मुरुगन यांनी या महोत्सवाचे आयोजन नीटनेटके आणि सुरळीत होण्यासाठी एकत्रित प्रयत्नांच्या आवश्यकतेवर भर दिला.गोव्याचा उत्सव साजरा करण्याचा सळसळता उत्साह …

Read More »

கோவாவில் நவம்பர் 20 முதல் 28 வரை நடைபெறவுள்ள இந்திய சர்வதேச திரைப்பட விழாவில் பெருந்திரளாகப் பங்கேற்க தெனிந்திய திரைத்துறையினருக்கு மத்திய இணையமைச்சர் டாக்டர் எல். முருகன் அழைப்பு விடுத்துள்ளார்

கோவாவில் இம்மாதம் 20ம் தேதி முதல் 28-ம் தேதி வரை நடைபெற உள்ள 55 வது இந்திய சர்வதேச திரைப்பட விழாவில் தென்னகத்தைச் சேர்ந்த திரைத்துறையினர் பெருந்திரளாக கலந்துகொள்ள வேண்டும் என்று மத்திய தகவல் ஒலிபரப்புத் துறை இணையமைச்சர் டாக்டர் எல். முருகன் அழைப்பு விடுத்துள்ளார். சென்னையில் இன்று தமிழ், தெலுங்கு, மலையாளம் மற்றும் கன்னடத்  திரைத்துறையைச் சேர்ந்த தயாரிப்பாளர்கள், இயக்குநர்கள் உள்ளிட்ட அனைத்துத் தரப்பினரையும்  சந்தித்து அவர் கலந்துரையாடினார். மேலும் இந்த விழா தொடர்பான முன்னேற்பாடுகள், செய்யப்பட்டுள்ள வசதிகள் குறித்தும் விவரித்தார். இந்த நிகழ்வில் தென்னிந்திய திரைப்பட தொழில் வர்த்தக சபையின் தலைவர் ரவி கொட்டாரக்கரா உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். திரைப்பட விழா பற்றி எடுத்துரைத்த மத்திய அமைச்சர், இந்திய திரைத்துறை ஆளுமைகளான ராஜ்கபூர், தபன் சின்ஹா, முகமது ரஃபி, நாகேஸ்வரராவ் ஆகியோரின் நூற்றாண்டு விழாவும்  கொண்டாடப்படுவதாக கூறினார். இந்த ஆண்டு திரைப்பட விழாவில்  கவனக் குவிப்பு நாடாக ஆஸ்திரேலியா தெரிவு செய்யப்பட்டுள்ளது. ஆஸ்திரேலியாவைச் சேர்ந்த திரைப்பட இயக்குநர் பிலிப் நோயிஸுக்கு சத்யஜித்ரே வாழ்நாள் சாதனையாளர் விருது வழங்கப்பட உள்ளது. இந்த நாட்டிலிருந்து  தயாரிப்பாளர்கள் , இயக்குநர்கள் உட்பட 40 திரை ஆளுமைகள்  விழாவில் பங்கேற்க உள்ளனர்.  திரைப்பட விழாவின் தொடக்க திரைப்படமாக  ஆஸ்திரேலியாவின் பெட்டர் மேன் திரையிடப்படும் என்று அமைச்சர் அவர் கூறினார். இந்தியாவின் சிறந்த முதல்முறை இயக்குனர் விருது இந்த ஆண்டு புதிதாக அறிமுகம் செய்யப்பட்டுள்ளது என்றும் அவர் கூறினார். திரைப்பட விழாவில் நாடு முழுவதிலும் இருந்து 400 திரைப்பள்ளிகளைச் சேர்ந்த மாணவர்கள் பங்கேற்க உள்ளனர் என்று அவர் தெரிவித்தார். இந்த ஆண்டு திரைப்பட விழாவில் பெருந்திரளாக மக்கள்  பங்கேற்கும் வகையில் திரையரங்குகளின்  இருக்கைகள்  50 சதவீதம் அதிகரிக்கப்பட்டுள்ளன என்று அவர் கூறினார். வேவ்ஸ் எனும் உலகளாவிய ஒலி, ஒளி, பொழுதுபோக்கு உச்சி மாநாடு வரும் பிப்ரவரி மாதம் 5-ம் தேதி முதல் 9-ம் தேதி வரை புதுதில்லியில் உள்ள பாரத் மண்டபத்தில் நடைபெற உள்ளதாக அமைச்சர் தெரிவித்தார். வானொலி, தொலைக்காட்சி, ஓடிடி, டிஜிட்டல், சினிமா, அனிமேஷன், கேமிங்  உள்ளிட்டவற்றை உள்ளடக்கியதாக இந்த உச்சிமாநாட்டு நிகழ்வுகள் அமையும். படைப்பாக்கப் பொருளாதாரத்தின்  குவிமையமாக இந்தியா மாறிவரும் சூழ்நிலையில் அதனை மேலும் விரிவுபடுத்துவதை நோக்கமாகக் கொண்டு இந்த உச்சிமாநாடு நடத்தப்படுவதாக அவர் தெரிவித்தார். இந்த மாநாட்டிலும் பங்கேற்றுப் பயன்பெறவேண்டும் என்று பங்கேற்பாளர்களை அமைச்சர் டாக்டர் எல். முருகன் கேட்டுக்கொண்டார். அமைச்சரின் இந்த சந்திப்பில் மத்திய தகவல் ஒலிபரப்பு துறையின் இணைச்செயலாளரும் தேசிய  திரைப்பட வளர்ச்சிக் கழகத்தின் தலைவருமான திரு பிரித்துல் குமார், மத்திய திரைப்பட சான்றளிப்பு வாரியத்தின் தலைமை நிர்வாக அதிகாரி திரு ராஜேந்திர சிங்  ஆகியோர் உடனிருந்தனர்.            

Read More »