தேசிய மாணவர் படை (N.C.C.) தினத்தையொட்டி, சென்னையில் உள்ள போர் வீரர்கள் நினைவிடத்தில் இன்று (நவம்பர் 24) மலர் மரியாதை செலுத்தப்பட்டது. உலகிலேயே மிகவும் பெரிய இளைஞர் அமைப்பாகிய என்சிசி அமைப்பு 1948-ம் ஆண்டு நவம்பர்24-ம் தேதி உருவாக்கப்பட்டது. அதன் 76-வது ஆண்டுவிழா இன்று கொண்டாடப்படுகிறது. இதையொட்டி, சென்னை போர் வீரர்கள் நினைவிடத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் இந்திய ராணுவ தெற்கு பகுதி தளபதி லெப்டினண்ட் ஜெனரல் கரன்பீர்சிங் பிரார் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு, பாண்டு வாத்தியம் முழங்க மலர் வளையம் வைத்து, மரியாதை செலுத்தினார். முன்னதாக நிகழ்ச்சிக்கு வந்த லெப் ஜெனரல் கே. எஸ். பிராரை, தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் அந்தமான் & நிக்கோபார் உள்ளடக்கிய என்.சி. சி அமைப்பின் துணை தலைமை இயக்குநர் கமொடோர் எஸ்.ராகவ் வரவேற்றார். என் சி சி கமாண்டர்கள் மற்றும் உயரதிகாரிகளுக்கு, கே. எஸ். பிரார், அறிமுகம் செய்து வைக்கப்பட்டார். இந்த நிகழ்ச்சியின் ஒரு அம்சமாக சென்னையை மையமாகக்கொண்ட என்சிசி 13-வது பட்டாலியன் இளம் வீரர்கள் குழு, கம்பீரமான அணிவகுப்பு நடத்தினர்.
Read More »பகவான் பிர்சா முண்டாவுக்கு நாடாளுமன்ற வளாகத்தில் குடியரசுத்தலைவர், குடியரசு துணைத்தலைவர், மக்களவைத் தலைவர் ஆகியோர் மலர் தூவி மரியாதை செலுத்தினர்
பழங்குடியினர் கவுரவ தினத்தில் பகவான் பிர்சா முண்டாவின் 150-வது பிறந்த நாளையொட்டி, நாடாளுமன்ற வளாகத்தில் உள்ள பிரேரணா ஸ்தலத்தில் அவரது திருவுருவச் சிலைக்கு குடியரசுத்தலைவர் திருமதி திரௌபதி முர்மு இன்று மலர் தூவி மரியாதை செலுத்தினார். இந்த நிகழ்ச்சியில், குடியரசு துணைத்தலைவரும், மாநிலங்களவைத் தலைவருமான திரு ஜகதீப் தன்கர்; மக்களவைத் தலைவர் திரு ஓம் பிர்லா உள்ளிட்ட முக்கிய பிரமுகர்களும் மலர் தூவி மரியாதை செலுத்தினர். “பழங்குடியின அடையாளம், கலாச்சாரத்தின் பெருமை மற்றும் உல்குலனின் சிற்பியான தர்த்திஆபா பகவான் பிர்சா முண்டாவின் பிறந்த நாளை முன்னிட்டு, நான் எனது தாழ்மையான அஞ்சலியை செலுத்துகிறேன். பகவான் பிர்சா முண்டாவின் 150-வது பிறந்த தினம் இன்று தொடங்குகிறது. இந்தப் பழங்குடியினர் கவுரவ தினத்தில் நான் நாட்டு மக்களுக்கு நல்வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன். பகவான் பிர்சா முண்டா தனது வாழ்நாள் முழுவதையும் தேசத்திற்காக, சமூகத்திற்காக, கலாச்சாரத்திற்காக அர்ப்பணித்த மாவீரர். அவரது வாழ்க்கையும், கொள்கைகளும் எப்போதும் நமக்கு உத்வேகம் அளிக்கும். #BirsaMunda150.” என்று மக்களவைத் தலைவர் சமூக ஊடக எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார். 2021 முதல், நவம்பர் 15 ஆம் தேதி பழங்குடி சுதந்திர போராட்ட வீரர்களின் தியாகங்களை கௌரவிக்கும் வகையில் பழங்குடியினர் கவுரவ தினமாகக் கொண்டாடப்படுகிறது. இந்திய சுதந்திரப் போராட்டத்தில் பழங்குடியின சமூகங்கள் பல்வேறு புரட்சிகர இயக்கங்கள் மூலம் முக்கிய பங்கு வகித்தன. பழங்குடி சமூகங்களின் வரலாறு, கலாச்சாரம் மற்றும் பாரம்பரியத்தை இந்த நாள் கௌரவிக்கிறது. நாடு தழுவிய நிகழ்வுகள், ஒற்றுமை, பெருமை மற்றும் இந்தியாவின் சுதந்திரம் மற்றும் முன்னேற்றத்திற்கு அவர்களின் குறிப்பிடத்தக்க பங்களிப்புகளை அங்கீகரித்து ஊக்குவிக்கின்றன. ஆங்கிலேய ஆட்சிக்கு எதிராக உல்குலானை (புரட்சியை) வழிநடத்திய பகவான் பிர்சா முண்டா எதிர்ப்பின் அடையாளமாக மாறினார். பகவான் முண்டாவின் தலைமை ஒரு தேசிய விழிப்புணர்வை ஊக்குவித்தது. மேலும் அவரது மரபு பழங்குடி சமூகங்களால் ஆழமாக மதிக்கப்படுகிறது. பிரமுகர்களை வரவேற்று, பல்வேறு மாநிலங்களைச் சேர்ந்த பழங்குடியின நாட்டுப்புறக் கலைஞர்கள் நாடாளுமன்ற வளாகத்தில் உள்ள பிரேரணா ஸ்தலத்தில் நிகழ்ச்சிகளை நடத்தினர்.
Read More »राष्ट्रपती द्रौपदी मुर्मू, उपराष्ट्रपती जगदीप धनखड आणि लोकसभेचे अध्यक्ष ओम बिर्ला यांनी संसद परिसरात भगवान बिरसा मुंडा यांना पुष्पांजली अर्पण करून वाहिली आदरांजली
भगवान बिरसा मुंडा यांच्या 150 व्या जयंतीनिमित्त आज संसदेच्या प्रांगणात प्रेरणा स्थळ येथील त्यांच्या पुतळ्याला राष्ट्रपती द्रौपदी मुर्मू यांनी पुष्पहार अर्पण करून आदरांजली वाहिली. याप्रसंगी उपराष्ट्रपती तसेच राज्यसभेचे सभापती जगदीप धनखड; लोकसभा अध्यक्ष ओम बिर्ला आणि इतर मान्यवरांनीही भगवान बिरसा मुंडा यांना आदरांजली वाहिली. भगवान बिरसा मुंडा यांच्या 150 व्या जयंती वर्ष सोहळ्याला आजपासून …
Read More »