गुरुवार, दिसंबर 19 2024 | 11:47:19 AM
Breaking News
Home / Tag Archives: IIT Palakkad

Tag Archives: IIT Palakkad

ஐஐடி மெட்ராஸ், ஐஐடி பாலக்காடு ஆகியவை இணைந்து கூட்டுக் கல்வி முன்முயற்சியைத் தொடங்கியுள்ளன

சென்னையில் உள்ள இந்திய தொழில்நுட்பக் கழகம் (ஐஐடி மெட்ராஸ்), இந்திய தொழில்நுட்பக் கழகம் பாலக்காடு ஆகிய இரு கல்வி நிறுவனங்களும் பகிரப்பட்ட வளங்கள், ஆராய்ச்சிக்கான உள்ளகப் பயிற்சிகள், கோடைகாலப் பாடத்திட்டங்கள் என மாணவர்களுக்கு கல்வி வாய்ப்புகளை வழங்குவதற்காக கைகோர்த்துள்ளன. ஐஐடி மெட்ராஸ்-ல் இளங்கலை அறிவியல் (பிஎஸ்) பட்டப்படிப்பு, ஐஐடி பாலக்காட்டில் இளங்கலைப் பட்டப்படிப்பு ஆகியவற்றில் சேரும் மாணவர்களுக்கு கற்றல் அனுபவத்தை விரிவுபடுத்துவதன் மூலம் இரு கல்வி நிறுவனங்களின் பலத்தையும் மாணவர்கள் பயன்படுத்திக் கொள்ள இந்த ஒப்பந்தம் வகைசெய்கிறது. இக்கல்வி நிறுவனம் கடந்த ஜூன் 2020-ல் டேட்டா சயின்ஸ் அண்ட் அப்ளிகேஷன்ஸ் என்ற நான்காண்டு பிஎஸ் பட்டப்படிப்பு பாடத்திட்டத்தை அறிமுகப்படுத்தியது. தனித்துவமான இப்பாடத்திட்டத்தில் உயர்தரமான பயிற்சியுடன் பாடங்களின் உள்ளடக்கங்கள் ஆன்லைன் மூலமும், தனிநபர் மதிப்பீடுகள் நேரடியாகவும் வழங்கப்படுகிறது. இதுவரை 30,000-க்கும் மேற்பட்ட மாணவ-மாணவிகள் இந்த பாடத்திட்டத்தில் தீவிரமாகப் பங்கேற்று துடிப்பான மற்றும் கலந்தாலோசிக்கும் நடைமுறையை வளர்த்துக் கொண்டிருக்கின்றனர். ஐஐடி மெட்ராஸ் இயக்குநர் பேராசிரியர் வி.காமகோடி, ஐஐடி பாலக்காடு இயக்குநர் பேராசிரியர் ஏ.சேஷாத்ரி சேகர் ஆகியோர் முன்னிலையில் இருதரப்பு ஒத்துழைப்பிற்கான புரிந்துணர்வு ஒப்பந்தம் இன்று (14 நவம்பர் 2024) கையெழுத்தானது. இரு கல்வி நிறுவனங்களின் ஆசிரியர்களும் இந்நிகழ்வின்போது உடனிருந்தனர். இந்த கூட்டுமுயற்சிக்கு வரவேற்புத் தெரிவித்துப் பேசிய ஐஐடி மெட்ராஸ் இயக்குநர் பேராசிரியர் வி.காமகோடி கூறுகையில், “நமது நாட்டில் உள்ள தகுதியான ஒவ்வொரு மாணவருக்கும் தரமான கல்வி சென்றடைய வேண்டும் என ஐஐடி மெட்ராஸ் உறுதிபூண்டுள்ளது. ஐஐடி பாலக்காடுடனான இம்முயற்சி நமது இலக்குகளை அடைவதற்கான மிக முக்கியமான நடவடிக்கையாக அமைந்துள்ளது” எனக் குறிப்பிட்டார். ஐஐடி பாலக்காடு இயக்குநர் பேராசிரியர் ஏ.சேஷாத்ரி சேகர் கூறும்போது, “ஐஐடி மெட்ராஸ்-ல் பிஎஸ் டேட்டா சயின்ஸ் அண்ட் அப்ளிகேஷன்ஸ் பாடத்திட்டத்தில் படிக்கும் சிறப்புமிக்க மாணவர்கள், எங்கள் கல்வி நிறுவனத்தில் சேருவது குறித்து மகிழ்ச்சி அடைவதுடன், எங்களது கிரடிட் படிப்புகளை நேரடியாகப் படித்து, உள்ளகப் பயிற்சியை மேற்கொள்வதை வரவேற்கிறேன். சிறந்த மாணவர்களை வழிநடத்துவதில் நாங்கள் ஆர்வமாக இருக்கிறோம். எங்கள் கல்வி நிறுவனத்தின் படிப்புகள் மற்றும் உள்ளகப் பயிற்சிகள் கற்றல், கண்டுபிடிப்புகளுக்கு வலுமான முக்கியத்துவத்தை வழஙகி வருகின்றன. ஐஐடி மெட்ராஸ் உடனான இக் கூட்டுமுயற்சி வாயிலாக மாணவர்கள் சிறந்து விளங்குவதற்குத் தேவையான திறன்கள், நுண்ணறிவுகள், நெட்வொர்க்குகளுடன் வலுவான அடித்தளம் ஆகியவற்றை உருவாக்கும்” எனத் தெரிவித்தார். இந்த ஒத்துழைப்பின் முக்கிய அம்சங்கள் வருமாறு:           ஐஐடி பாலக்காடு படிப்புகளில் இருந்து கிரடிட் பரிமாற்றம்: ஐஐடி மெட்ராஸ் பிஎஸ் (டேட்டா சயின்ஸ் அண்ட் அப்ளிகேஷன்ஸ்) மாணவ-மாணவிகள், ஐஐடி பாலக்காட்டில் படிப்புகளை மேற்கொள்வதன் மூலம் கல்வி வளங்கள் மற்றும் நிபுணத்துவத்தின் பரிமாற்றத்தை ஊக்குவிப்பதுடன், மாணவர்கள் தங்கள் கிரடிட் தேவைகளையும் பூர்த்தி செய்துகொள்ள முடியும். அத்துடன் கல்வி வளங்கள் மற்றும் நிபுணத்துவத்தைப் பரிமாறிக் கொள்ளவும் ஏதுவாக இருக்கும்           ஐஐடி பாலக்காடு மாணவர்கள் ஐஐடி மெட்ராஸ்-ஐ அணுகுதல்: ஐஐடி பாலக்காடு இளங்கலைப் பட்டப்படிப்பு மாணவர்கள் ஐஐடி மெட்ராஸ்-ல் பிஎஸ் டேட்டா சயின்ஸ் அண்ட் புரோகிராமிங் பாடத்திட்டத்தில் சேர்ந்து படிக்க இந்த புரிந்துணர்வு ஒப்பந்தம் வகை செய்கிறது.அத்துடன் ஐஐடி பாலக்காடு மாணவர்கள் இங்குள்ள அதிநவீனத் திறன்களுக்கான அணுகலையும் பெற முடியும்.           கூடுதல் முன்முயற்சிகளுக்கான ஆதரவு: மாணவ-மாணவிகள் பரிமாற்றத் திட்டங்கள், வேலைவாய்ப்புகள், இதர கூட்டு முயற்சிகளுக்கும் இந்த இருதரப்பு ஒத்துழைப்புக்கான புரிந்துணர்வு உதவிகரமாக இருக்கும். இருதரப்பு பாடத்திட்டங்களை அறிந்துகொள்ளல், நடைமுறைக் கற்றல் மற்றும் ஆராய்ச்சிக்கான வாய்ப்புகள் மூலம் மாணவர்கள் தங்கள் அனுபவங்களை வளப்படுத்திக் கொள்ள இரு கல்வி நிறுவனங்கள் மேற்கொண்டிருக்கும் அர்ப்பணிப்புக்கு இந்த ஒத்துழைப்பு வகைசெய்கிறது. இரண்டு ஐஐடிகளின் நிபுணத்துவம் மற்றும் உள்கட்டமைப்பைப் பயன்படுத்தி ஒரு வலுவான கல்விச் சூழலை உருவாக்குவதை இக்கூட்டுமுயற்சி நோக்கமாகக் கொண்டுள்ளது. ஐஐடி மெட்ராஸ் பிஎஸ் பாடத்திட்டத்தின் இறுதியாண்டு மாணவ-மாணவிகளுக்கு கற்றல் வாய்ப்புகளை வழங்க நாட்டின் பிற முன்னணி கல்வி நிறுவனங்களோடு ஒத்துழைப்பு முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. ஐஐடி காந்திநகர், ஐஐஐடி ஹைதராபாத், சென்னை கணிதவியல் நிறுவனம் (சிஎம்ஐ) ஆகிய கல்வி நிறுவனங்கள் ஐஐடி மெட்ராஸ் பிஎஸ் (டேட்டா சயின்ஸ்) பட்டப்படிப்பு பாடத்திட்டத்தில் இருந்து தகுதியான மாணவர்களுக்கு தங்கள் வளாகப் படிப்புகளை வழங்கியுள்ளன.   

Read More »