உலக சூரியசக்தி அறிக்கை தொடரின் 3-வது பதிப்பு சர்வதேச சூரிய கூட்டணியின் 7-வது பேரவைக் கூட்டத்தில் வெளியிடப்பட்டது. இந்த அறிக்கை, உலகளாவிய சூரியசக்தி வளர்ச்சி, முதலீட்டு போக்குகள், தொழில்நுட்ப முன்னேற்றங்கள் மற்றும் ஆப்பிரிக்காவின் பசுமை ஹைட்ரஜன் திறன் ஆகியவற்றை மையமாகக் கொண்டது. உலக சூரிய சந்தை அறிக்கை, உலக முதலீட்டு அறிக்கை, உலக தொழில்நுட்ப அறிக்கை மற்றும் ஆப்பிரிக்க நாடுகளுக்கான பசுமை ஹைட்ரஜன் தயார்நிலை மதிப்பீடு ஆகிய 4 அறிக்கைகள் …
Read More »சர்வதேச சூரியசக்தி கூட்டணியின் மூன்றாவது இயக்குநர் தேர்வு
புதுதில்லியில் நடைபெற்று வரும் சர்வதேச சூரியசக்தி கூட்டணி (ஐஎஸ்ஏ) பேரவையின் 7-வது கூட்டத்தில், இந்தியாவின் மூன்றாவது தலைமை இயக்குநராக திரு ஆஷிஷ் கன்னா தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். கானாவைச் சேர்ந்த திரு விஸ்டம் அஹியடாகு – டோகோபோ மற்றும் எத்தியோப்பியாவைச் சேர்ந்த திரு கோசாய் மெங்கிஸ்டி அபய்னே ஆகியோர் பிற பதவிகளுக்கு போட்டியிட்டனர். சர்வதேச சூரியசக்தி கூட்டணியின் குறிக்கோளை முன்னெடுத்துச் செல்வதில், ஐஎஸ்ஏ-வின் தலைமை இயக்குநர் முக்கிய பங்காற்றுகிறார். பொதுவான சவால்களை எதிர்கொள்வதில் உறுப்பு …
Read More »சர்வதேச சூரியசக்தி கூட்டணி 2024 – 2026-ம் ஆண்டிற்கான புதிய நிர்வாகிகளை அறிவித்துள்ளது
புதுதில்லியில் உள்ள பாரத் மண்டபத்தில் நடைபெற்று வரும் சர்வதேச சூரிய சக்தி கூட்டமைப்பின் ஏழாவது அமர்வு, 2024 முதல் 2026 வரையிலான இரண்டாண்டு காலத்திற்கு அதன் தலைவர் மற்றும் இணைத் தலைவரைத் தேர்ந்தெடுத்துள்ளது. தலைவர் பதவிக்கு இந்தியா மட்டுமே போட்டியிட்டாலும், இணைத் தலைவர் பதவிக்கு பிரான்ஸ் மற்றும் கிரெனடா இடையே போட்டி ஏற்பட்டது. இதில் பிரான்ஸ் வெற்றி பெற்றது. சர்வதேச சூரியசக்தி கூட்டமைப்பின் நடைமுறை விதிகளின்படி, தலைவர், இணைத் தலைவர், துணைத் தலைவர்கள் தேர்வு செய்யப்படலாம். சமமான புவியியல் பிரதிநிதித்துவத்திற்கு உரிய மதிப்பளித்து, தலைவரும், இணைத் தலைவரும் தேர்ந்தெடுக்கப்படுகின்றனர். உறுப்பு நாடுகளின் நான்கு பிராந்திய குழுக்களில், ஆப்பிரிக்கா, ஆசியா, பசிபிக், ஐரோப்பா மற்றும் லத்தீன் அமெரிக்கா, கரீபிய நாடுகள் …
Read More »சர்வதேச சூரியசக்தி கூட்டணியின் ஏழாவது பேரவைக் கூட்டத்தில் மத்திய புதிய மற்றும் புதுப்பிக்கத்தக்க எரிசக்தித் துறை அமைச்சர் திரு பிரல்ஹாத் ஜோஷி ஆற்றிய உரை
மாண்புமிகு அமைச்சர்களே, ஐஎஸ்ஏ பேரவையின் துணைத் தலைவர்களே, தூதர்கள், கௌரவ தூதர்கள், தலைமை இயக்குநர், ஏனைய மதிப்பிற்குரிய பிரதிநிதிகளே, சர்வதேச சூரியசக்தி கூட்டணியின் 7-வது பேரவைக் கூட்டத்தில் இன்று உங்கள் முன் நிற்பதில் நான் மகிழ்ச்சி அடைகிறேன். உலகளாவிய எரிசக்தி எதிர்காலத்தை மாற்றியமைக்கும் நமது இயக்கத்தின் முக்கியமான கட்டத்தில் தற்போது நாம் இருக்கிறோம். தற்போது நாமும் சூரியனின் சக்தியைக் கொண்டாடுகிறோம். பல நூற்றாண்டுகளாக உலகளவில் சூரிய சக்தியைப் பயன்படுத்துவது எவ்வாறு ஒரு முக்கிய அம்சமாக பகுதியாக இருந்து வருகிறது என்பதை பிரதிபலிப்பது வியப்பாக இருக்கிறது. பண்டைய எகிப்தில் சூரியக் கடவுள் ராவாஸ்-ஐ …
Read More »