बुधवार, दिसंबर 04 2024 | 01:49:59 PM
Breaking News
Home / Tag Archives: National Industrial Highway Development Corporation

Tag Archives: National Industrial Highway Development Corporation

தேசிய தொழில் பெரு வழித்தட மேம்பாட்டுக் கழகம், பீகார் தொழில்பகுதி மேம்பாட்டு ஆணையம் இடையே ஒப்பந்தம் கையெழுத்து

பீகாரில் தொழில்துறை வளர்ச்சியை விரைவுபடுத்துவதற்கான ஒரு மைல்கல் நடவடிக்கையாக, தேசிய தொழில் பெருவழித்தட மேம்பாட்டுக் கழகம் (என்.ஐ.சி.டி.சி), பீகார் அரசின் பீகார் தொழில் பகுதி மேம்பாட்டு ஆணையம் (பியாடா) ஆகியவை அமிர்தசரஸ்-கொல்கத்தா தொழில் பெருவழித்தடத்தின் கீழ், கயாவில் ஒருங்கிணைந்த உற்பத்தி பகுதியை (ஐ.எம்.சி) நிறுவுவதற்கான மாநில ஆதரவு ஒப்பந்தம் மற்றும் பங்குதாரர் ஒப்பந்தத்தில் இன்று கையெழுத்திட்டன. மத்திய நிதியமைச்சர் தமது சமீபத்திய பட்ஜெட் உரையில் முன்னிலைப்படுத்தியபடி, பாரம்பரியத்துடன் கூடிய வளர்ச்சி என்னும் தொலைநோக்கிற்கு ஏற்ப, இந்தத் திட்டம் சர்வதேச யாத்திரை மற்றும் பாரம்பரிய சுற்றுலாவுக்கான புகழ்பெற்ற இடமான கயாவின் கலாச்சார பாரம்பரியத்தை மேம்படுத்தும். அதே நேரத்தில் பொருளாதார வளர்ச்சியை ஊக்குவிக்கும். கயா சர்வதேச விமான நிலையத்திலிருந்து தெற்கே 39 கிமீ தொலைவில் அமையும் ஐஎம்சி கயா, 1,670 ஏக்கர் பரப்பளவில், 16,524 கோடி ரூபாய் முதலீட்டு திறன் மற்றும் 1,339 கோடி ரூபாய் திட்ட செலவுடன் உருவாகும். இந்த லட்சியத் திட்டம் சுமார் 1,09,185 வேலைகளை உருவாக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இது உள்ளூர் சமூகத்திற்கு பொருளாதார ஊக்கத்தை அளிக்கும். கட்டுமானப் பொருட்கள், வேளாண்-உணவு பதப்படுத்துதல், தோல் பொருட்கள், ஆயத்த ஆடைகள், தளவாடங்கள், கைத்தறி மற்றும் கைவினைப்பொருட்கள், பொறியியல், ஆடைகள் மற்றும் மருத்துவ உபகரணங்கள் உள்ளிட்ட பல்வேறு துறைகளில் உள்ள தொழில்களை ஈர்க்கும் வகையில் ஐஎம்சி கயா உருவாக்கப்படும்.

Read More »