புதுதில்லியில் உள்ள பாரத் மண்டபத்தில் நடைபெற்று வரும் சர்வதேச சூரிய சக்தி கூட்டமைப்பின் ஏழாவது அமர்வு, 2024 முதல் 2026 வரையிலான இரண்டாண்டு காலத்திற்கு அதன் தலைவர் மற்றும் இணைத் தலைவரைத் தேர்ந்தெடுத்துள்ளது. தலைவர் பதவிக்கு இந்தியா மட்டுமே போட்டியிட்டாலும், இணைத் தலைவர் பதவிக்கு பிரான்ஸ் மற்றும் கிரெனடா இடையே போட்டி ஏற்பட்டது. இதில் பிரான்ஸ் வெற்றி பெற்றது. சர்வதேச சூரியசக்தி கூட்டமைப்பின் நடைமுறை விதிகளின்படி, தலைவர், இணைத் தலைவர், துணைத் தலைவர்கள் தேர்வு செய்யப்படலாம். சமமான புவியியல் பிரதிநிதித்துவத்திற்கு உரிய மதிப்பளித்து, தலைவரும், இணைத் தலைவரும் தேர்ந்தெடுக்கப்படுகின்றனர். உறுப்பு நாடுகளின் நான்கு பிராந்திய குழுக்களில், ஆப்பிரிக்கா, ஆசியா, பசிபிக், ஐரோப்பா மற்றும் லத்தீன் அமெரிக்கா, கரீபிய நாடுகள் …
Read More »