குடியரசு துணைத் தலைவர் திரு ஜக்தீப் தன்கர், “நமது வரலாற்றுப் புத்தகங்கள் நம் மாவீரர்களுக்கு அநீதி இழைத்துள்ளன. நமது வரலாறு கையாளப்பட்டு, திரிக்கப்பட்டு, சுதந்திரத்துக்குப் பின்னர், ஒரு சிலரின் ஏகபோகத்தை உருவாக்கி, நம் மனசாட்சியில் தாங்க முடியாத வேதனை. இது நம் ஆன்மா மற்றும் இதயத்தின் மீது ஒரு சுமை. மேலும் நாம் பெரிய மாற்றத்தை கொண்டு வர வேண்டும் என்பதில் நான் உறுதியாக இருக்கிறேன். 1915 ஆம் ஆண்டு அந்த நேரத்தில் முதல் இந்திய …
Read More »இளைஞர்கள் நாடாளுமன்ற ஜனநாயகத்தின் காவலர்களாக உள்ளனர்: குடியரசுத் துணைத் தலைவர் திரு ஜக்தீப் தன்கர்
நாட்டு மக்கள் நாடாளுமன்றத்தின் மீது வைத்துள்ள நம்பிக்கையைக் காப்பாற்றும் வகையில் ஒவ்வொரு நாடாளுமன்ற உறுப்பினரும் செயல்பட வேண்டும் என்று குடியரசுத் துணைத் தலைவர் திரு ஜக்தீப் தன்கர் வேண்டுகோள் விடுத்துள்ளார். அருணாச்சலப் பிரதேச மாநிலம் தோய்முகில் உள்ள ரோனோ ஹில்ஸில் உள்ள ராஜீவ் காந்தி பல்கலைக்கழகத்தின் 22-வது பட்டமளிப்பு விழாவில் மாணவர்களிடையே உரையாற்றிய திரு தன்கர், உறுப்பினர்களின் ஆக்கப்பூர்வமான செயல்பாடுகள் மூலம் மக்களின் விருப்பங்களும், கனவுகளும் நிறைவேற வேண்டும் என்று கூறினார். விவாதம், உரையாடல், பேச்சு ஆலோசனைகளிலிருந்து விலகி, இடையூறை ஆயுதமாகப் பயன்படுத்துவதை அவர் கடுமையாக விமர்சித்தார். நாட்டின் இளைஞர்கள் நாடாளுமன்றத்தை கண்காணித்து வருவதாகவும், ஜனநாயகத்தின் காவலர்களாக செயல்படுவதாகவும், திரு ஜக்தீப் தன்கர் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு நினைவூட்டினார். பாரபட்சம், ஊழல், குடும்ப ஆதிக்கம் ஆகியவை இளைஞர்களின் முன்னேற்றத்தைத் தடுக்கின்றன என்று அவர் தெரிவித்தார். உலக அரங்கில் இந்தியாவின் வரலாறு காணாத உயர்வை நினைவுகூர்ந்த குடியரசுத் துணைத் தலைவர், கடல், நிலம், வானம், விண்வெளி என அனைத்துத் துறைகளிலும் இந்தியா வளர்ந்து வருகிறது என்றார். இந்தியா ஏற்கனவே ஐந்தாவது பெரிய உலகப் பொருளாதாரமாக உள்ளது என்றும், மூன்றாவது பெரிய நாடாக மாறுவதற்கான பாதையில் தற்போது உள்ளது என்றும் அவர் எடுத்துரைத்தார். உள்ளூர் தயாரிப்புகளை ஊக்குவிப்பது குறித்துப் பேசிய குடியரசுத் துணைத் தலைவர், உள்நாட்டு தொழில்களுக்கு ஆதரவளிக்குமாறு மக்களை வலியுறுத்தினார். இயற்கை வளங்களை உகந்த முறையில் பயன்படுத்த வேண்டும் என்றும் திரு ஜக்தீப் தன்கர் கேட்டுக் கொண்டார்.
Read More »“युवक हे संसदीय लोकशाहीचे पहारेकरी आहेत” – उपराष्ट्रपती
जनतेने आपल्यावर टाकलेला विश्वास सिद्ध करण्याचे आणि त्या विश्वासाला न्याय देण्याचे आवाहन उपराष्ट्रपती जगदीप धनखड यांनी खासदारांना केले आहे. देशातील जनतेच्या अपेक्षा आणि स्वप्नं ही सकारात्मक कृतीद्वारे साकारली पाहिजेत, असे त्यांनी सांगितले. राजकीय रणनीती म्हणून कामकाजात व्यत्यय आणण्याचा अस्त्र म्हणून उपयोग करण्यावर त्यांनी कठोर टीका केली. उपराष्ट्रपतींनी संसद सदस्यांना जाणीव करून …
Read More »ஆரோக்கியம் மிக முக்கியமானது; அது தனிநபர், சமூக உற்பத்தித்திறனுடன் நேரடியாக தொடர்புடையது: குடியரசுத் துணைத் தலைவர் திரு ஜக்தீப் தன்கர்
ஒரு தனிநபரின் ஆரோக்கியம், தனிநபரின் உற்பத்தித்திறனுடனும் சமூகத்தின் ஒட்டுமொத்த திறனுடனும் நேரடி தொடர்பு உடையது என குடியரசுத் துணைத் தலைவர் திரு ஜக்தீப் தன்கர் கூறியுள்ளார். நல்ல ஆரோக்கியம் என்பது தனிநபருக்கு மட்டுமல்லாமல் ஒட்டுமொத்த சமூக நலத்திற்கும் அவசியம் என்பதால் ஆரோக்கியம் மிக முக்கியமானது, முன்னுரிமை அளிக்கப்பட வேண்டியது என அவர் குறிப்பிட்டார். ஜோத்பூரில் உள்ள எய்ம்ஸ் மருத்துவமனையில் தேசிய மருத்துவ அறிவியல் அகாடமியின் 64-வது பட்டமளிப்பு விழாவில் உரையாற்றிய திரு ஜக்தீப் தன்கர், மருத்துவ வல்லுநர்கள் பாதுகாவலர்களாக பணியாற்றுகிறார்கள் என்றார். மேலும் மனிதகுலத்தில் ஆறில் ஒரு பகுதி மக்கள் வசிக்கும் பாரதத்தில் மருத்துவர்களின் பங்கு மிகவும் முக்கியமானது என்று அவர் கூறினார். சுகாதாரம் என்பது ஒரு தெய்வீக பங்களிப்பு எனவும் அது ஒரு சேவை என்றும் அவர் தெரிவித்தார். சுகாதாரப் பராமரிப்பு என்பது வர்த்தகத்திலிருந்து விலகி இருக்க வேண்டும் என்று அவர் மேலும் கூறினார். 2047-ல் வளர்ச்சி அடைந்த பாரதம் என்ற இலக்கை எட்ட ஆரோக்கியமான சமுதாயத்தின் அவசியத்தை சுட்டிக் காட்டிய குடியரசுத் துணைத் தலைவர், நாம் அதிவேக பொருளாதார எழுச்சியையும், வியக்கத்தக்க உள்கட்டமைப்பு வளர்ச்சியையும் பெற்று வருகிறோம் என்றார். ஒரு காலத்தில் பலவீனமான ஐந்து பொருளாதாரங்களின் ஒன்றாக இருந்த பாரதம், இப்போது ஐந்து பெரிய உலகளாவிய பொருளாதாரங்களில் ஒன்றாக மாற்றியுள்ளது எனவும் இது விரைவில் மூன்றாவது பெரிய உலகப் பொருளாதாரமாக மாறும் பாதையில் உள்ளது என்றும் அவர் குறிப்பிட்டார். இந்த லட்சியத்தை நிறைவேற்ற நமது தனிநபர் வருமானத்தை 8 மடங்கு அதிகரிக்க வேண்டும் என அவர் கூறினார். மக்கள் ஆரோக்கியமாகவும் உடல் நலத்துடனும் இருந்தால் மட்டுமே இதை அடைய முடியும் என அவர் குறிப்பிட்டார். இந்தியாவில் மருத்துவ உபகரணங்கள் உற்பத்திக்கு ஆதரவளிக்குமாறு தொழில்துறையினரை வலியுறுத்திய திரு ஜக்தீப் தன்கர், உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட மருத்துவ உபகரணங்களை நாம் வலுவாக ஆதரிக்க வேண்டும் என்றார். இறக்குமதி செய்யப்பட்ட பொருட்கள் உயர்ந்தவை என்ற கட்டுக்கதையை உடைக்க வேண்டும் என்று அவர் கூறினார். நமது புனித நூல்களில் நல்ல ஆரோக்கியம் குறித்து கூறப்பட்டுள்ள கருத்துகளை சுட்டிக் காட்டிய திரு ஜக்தீப் தன்கர், நமது வேதங்கள், நமது புராணங்கள், நமது உபநிடதங்கள் ஞானத்தின் தங்கச் சுரங்கம் என்றார். ஜோத்பூரில் உள்ள எய்ம்ஸ் மருத்துவமனையில் தேசிய மருத்துவ அறிவியல் அகாடமியின் தலைவர் டாக்டர் ஷிவ் சரின், மத்திய அரசின் சுகாதாரம் – குடும்ப நலத்துறை செயலாளர் டாக்டர் புண்யா சலிலா ஸ்ரீவஸ்தவா, மத்திய அரசின் உயிரி தொழில்நுட்பத் துறை செயலாளர் டாக்டர் ராஜேஷ் சுதிர் கோகலே, ஜோத்பூர் எய்ம்ஸ் இயக்குநர் டாக்டர் ஜி.டி.பூரி உள்ளிட்ட பலர் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்.
Read More »உலக அமைதி சிதைந்து, மனிதகுலம் ஒரு செங்குத்தான பாதையில் தள்ளாடும்போது, நல்லிணக்கம், சகிப்புத்தன்மை, சகவாழ்வு என்ற பாரதத்தின் பண்டைய ஞானத்தை ஏற்றுக்கொள்வதில் தான் தீர்வு உள்ளதாக குடியரசுத் துணைத் தலைவர் வலியுறுத்துகிறார்
பாரதத்தின் பண்டைய ஞானம் குறித்து கவனத்தை ஈர்த்த குடியரசுத் துணைத் தலைவர் திரு ஜக்தீப் தன்கர், “உலக அமைதி குலைந்து, போர்கள் தீவிரமடையும் போது, பகைமைகள் கோட்பாடுகளாக மாறி வரும் நிலையில், பருவநிலை நெருக்கடி மேலோங்கி நிற்கும் போது, மனிதகுலம் ஒரு செங்குத்தான பாதையில் தள்ளாடுகிறது. நல்லிணக்கம், சகிப்புத்தன்மை மற்றும் சகவாழ்வு ஆகியவற்றின் ஆயிரக்கணக்கான ஆண்டுகள் பழமையான கொள்கைகளான இந்தியாவின் பண்டைய ஞானத்தைத் தழுவுவதில் விமோசனம் இருக்கலாம். உலகின் மிகப்பெரிய ஜனநாயக நாடான இந்தியா, சுதந்திரம் மற்றும் சமத்துவத்தை …
Read More »மாற்றத்திற்கான மிகப்பெரிய வினையூக்கியாக கல்வி திகழ்கிறது – குடியரசுத் துணைத் தலைவர்
மாற்றத்திற்கான மிகப்பெரிய வினையூக்கியாகவும், சமூகத்தில் சமத்துவத்தை நிலைநாட்டுவதற்கான அடித்தளமாகவும் கல்வி திகழ்கிறது என்று குடியரசுத் துணைத் தலைவர் திரு ஜக்தீப் தன்கர் கூறியுள்ளார். “கல்வி சமத்துவத்தை ஊக்குவிக்கிறது மற்றும் ஏற்றத்தாழ்வை நீக்குகிறது. கல்வி நமக்குள் ஏற்படுத்தும் பண்பு நாம் யார் என்பதை வரையறுக்கிறது என்றும் அவர் தெரிவித்துள்ளார். உலக குழந்தைகள் தினத்தை முன்னிட்டு ராஜஸ்தான் மாநிலம் ஜுன்ஜுனுவில் கஜ்ராவில் உள்ள ஜவஹர் நவோதயா வித்யாலயா பள்ளி மாணவர்களிடையே இன்று உரையாற்றிய …
Read More »மாற்றுத்திறனாளிகளிடம் இந்தியாவின் நாகரிகம், தெய்வீகம், மேன்மை, ஆன்மீகம் ஆகியவற்றைக் காணமுடிகிறது: குடியரசு துணைத்தலைவர்
“உலகில் நமது நாகரிகம் தனித்துவமானது, 5000 ஆண்டுகளுக்கும் மேலானது. அது எதைப் பிரதிபலிக்கிறது, மாற்றுத்திறனாளிகளிடம் நாம் தெய்வீகத்தைக் காண்கிறோம், நாம் உன்னதத்தைக் காண்கிறோம், ஆன்மீகத்தைப் பார்க்கிறோம்” என குடியரசுத் துணைத் தலைவர் திரு ஜக்தீப் தன்கர் தெரிவித்துள்ளார். புதுதில்லி தியாகராஜ் விளையாட்டரங்கில் இன்று நடைபெற்ற சிறப்பு ஒலிம்பிக் ஆசிய பசிபிக் போக்கே & பந்துவீச்சு போட்டியின் தொடக்க விழாவில் சிறப்பு விருந்தினராக பங்கேற்ற திரு தன்கர், “இந்த விளையாட்டுகளின் மூலம், நாம் மிக முக்கியமான ஒன்றைக் கொண்டாடுகிறோம், அது ஆசியா பசிபிக் முழுவதும் உள்ள மாற்றுத்திறனாளிகளுக்கான உள்ளடக்கம் மற்றும் கண்ணியம். …
Read More »भारताची संस्कृती दिव्यांगजनात देवत्व, उदात्तता आणि अध्यात्म पाहते – उपराष्ट्रपती
“5000 वर्षांहून अधिक प्राचीन असलेली आपली संस्कृती जगात अद्वितीय आहे असे सांगतानाच, ही संस्कृती दिव्यांगजनात देवत्व, उदात्तता आणि अध्यात्म पाहते असे उपराष्ट्रपती जगदीप धनखड यांनी म्हटले आहे. आज नवी दिल्लीतील त्यागराज स्टेडियमवर विशेष ऑलिम्पिक एशिया पॅसिफिक बॉची आणि बॉलिंग स्पर्धेच्या उद्घाटन समारंभात प्रमुख पाहुणे म्हणून संबोधित करताना उपराष्ट्रपती म्हणाले की, …
Read More »பழங்குடியின சமூகம் நமது நாட்டின் பெருமை: குடியரசுத் துணைத் தலைவர்
பழங்குடியின சமூகம் நாட்டின் பெருமை என்று குடியரசுத் துணைத் தலைவர் திரு. ஜக்தீப் தன்கர் கூறியுள்ளார். “பழங்குடியின கலாச்சாரம் தேசிய மற்றும் சர்வதேச மட்டங்களில் மதிக்கப்பட வேண்டும்” என்று குடியரசுத் துணைத் தலைவர் கூறினார். “நான் எங்கு சென்றாலும், பழங்குடியின வாழ்க்கை முறை, அவர்களின் கலாச்சாரம், அவர்களின் இசை, அவர்களின் பழங்குடி பண்புகள், அவர்களின் திறமை ஆகியவை என்னை மயக்குகிறது” என்று அவர் மேலும் கூறினார். பகவான் பிர்சா முண்டாவின் …
Read More »பகவான் பிர்சா முண்டாவுக்கு நாடாளுமன்ற வளாகத்தில் குடியரசுத்தலைவர், குடியரசு துணைத்தலைவர், மக்களவைத் தலைவர் ஆகியோர் மலர் தூவி மரியாதை செலுத்தினர்
பழங்குடியினர் கவுரவ தினத்தில் பகவான் பிர்சா முண்டாவின் 150-வது பிறந்த நாளையொட்டி, நாடாளுமன்ற வளாகத்தில் உள்ள பிரேரணா ஸ்தலத்தில் அவரது திருவுருவச் சிலைக்கு குடியரசுத்தலைவர் திருமதி திரௌபதி முர்மு இன்று மலர் தூவி மரியாதை செலுத்தினார். இந்த நிகழ்ச்சியில், குடியரசு துணைத்தலைவரும், மாநிலங்களவைத் தலைவருமான திரு ஜகதீப் தன்கர்; மக்களவைத் தலைவர் திரு ஓம் பிர்லா உள்ளிட்ட முக்கிய பிரமுகர்களும் மலர் தூவி மரியாதை செலுத்தினர். “பழங்குடியின அடையாளம், கலாச்சாரத்தின் பெருமை மற்றும் உல்குலனின் சிற்பியான தர்த்திஆபா பகவான் பிர்சா முண்டாவின் பிறந்த நாளை முன்னிட்டு, நான் எனது தாழ்மையான அஞ்சலியை செலுத்துகிறேன். பகவான் பிர்சா முண்டாவின் 150-வது பிறந்த தினம் இன்று தொடங்குகிறது. இந்தப் பழங்குடியினர் கவுரவ தினத்தில் நான் நாட்டு மக்களுக்கு நல்வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன். பகவான் பிர்சா முண்டா தனது வாழ்நாள் முழுவதையும் தேசத்திற்காக, சமூகத்திற்காக, கலாச்சாரத்திற்காக அர்ப்பணித்த மாவீரர். அவரது வாழ்க்கையும், கொள்கைகளும் எப்போதும் நமக்கு உத்வேகம் அளிக்கும். #BirsaMunda150.” என்று மக்களவைத் தலைவர் சமூக ஊடக எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார். 2021 முதல், நவம்பர் 15 ஆம் தேதி பழங்குடி சுதந்திர போராட்ட வீரர்களின் தியாகங்களை கௌரவிக்கும் வகையில் பழங்குடியினர் கவுரவ தினமாகக் கொண்டாடப்படுகிறது. இந்திய சுதந்திரப் போராட்டத்தில் பழங்குடியின சமூகங்கள் பல்வேறு புரட்சிகர இயக்கங்கள் மூலம் முக்கிய பங்கு வகித்தன. பழங்குடி சமூகங்களின் வரலாறு, கலாச்சாரம் மற்றும் பாரம்பரியத்தை இந்த நாள் கௌரவிக்கிறது. நாடு தழுவிய நிகழ்வுகள், ஒற்றுமை, பெருமை மற்றும் இந்தியாவின் சுதந்திரம் மற்றும் முன்னேற்றத்திற்கு அவர்களின் குறிப்பிடத்தக்க பங்களிப்புகளை அங்கீகரித்து ஊக்குவிக்கின்றன. ஆங்கிலேய ஆட்சிக்கு எதிராக உல்குலானை (புரட்சியை) வழிநடத்திய பகவான் பிர்சா முண்டா எதிர்ப்பின் அடையாளமாக மாறினார். பகவான் முண்டாவின் தலைமை ஒரு தேசிய விழிப்புணர்வை ஊக்குவித்தது. மேலும் அவரது மரபு பழங்குடி சமூகங்களால் ஆழமாக மதிக்கப்படுகிறது. பிரமுகர்களை வரவேற்று, பல்வேறு மாநிலங்களைச் சேர்ந்த பழங்குடியின நாட்டுப்புறக் கலைஞர்கள் நாடாளுமன்ற வளாகத்தில் உள்ள பிரேரணா ஸ்தலத்தில் நிகழ்ச்சிகளை நடத்தினர்.
Read More »