ரசாயனம் மற்றும் உரங்கள் அமைச்சகத்தின் கீழ் உள்ள ரசாயனம் மற்றும் பெட்ரோ கெமிக்கல்ஸ் துறை சிறப்பு இயக்கம் 4.0-ஐ மேற்கொண்டு அது நிர்ணயித்த இலக்கை முழுமையாக அடைகிறது.
ரசாயனம் மற்றும் பெட்ரோலிய ரசாயனத் துறையும் அதன் அமைப்புகளும் இணைந்து 2.10.2024 முதல் 31.10.2024 வரை நடத்திய சிறப்பு இயக்கம் 4.0-ல் ஆர்வத்துடன் பங்கேற்று, அலுவலகங்களில் நிலுவையிலுள்ள பணிகளைக் குறைப்பதில் கவனம் செலுத்தியது.
ஆவண அறையில் உள்ள 2443 நேரடி கோப்புகளையும் மறு ஆய்வு செய்ய இத்துறை இலக்கு நிர்ணயித்துள்ளது. பரிசீலனை முடிந்த நிலையில், மொத்தம் 1250 கோப்புகள் கழிக்கப்பட்டுள்ளன. 4656 மின்னணு கோப்புகள் மதிப்பாய்வு செய்யப்பட்டதில் 880 மின்-கோப்புகள் நீக்கப்பட்டது.
தூய்மை இயக்கம் மூலம் 28,128 சதுர அடி இடம் காலி செய்யப்பட்டது. துறை மற்றும் அதன் அமைப்புகளால் பழையப்பொருட்களை அகற்றியதன் மூலம் ரூ.15,82,889/- வருவாய் ஈட்டப்பட்டுள்ளது.
பொதுமக்கள் குறைகள் தவிர, 31.9.2024 அன்று நிலுவையில் இருந்த பல்வேறு நாடாளுமன்ற உறுப்பினர்களின் குறிப்புகள், பிரதமர் அலுவலக குறிப்புகளுக்கு தீர்வு காணப்பட்டது.