உயிரி தொழில்நுட்பத்துறையானது தனது தன்னாட்சி நிறுவனங்கள் மற்றும் பொதுத்துறை நிறுவனங்களுடன் இணைந்து சிறப்பு பிரச்சாரம் 4.0ஐ வெற்றிகரமாக நிறைவு செய்துள்ளது. நிர்வாகச் சீர்திருத்தம் மற்றும் பொதுமக்கள் குறைதீர்ப்புத் துறையால் ஏற்பாடு செய்யப்பட்ட சிறப்புப் பிரச்சாரம் 4.0-இல் அறிவியல் சார்ந்த பிரிவுகள் குறிப்பிடத்தக்க பங்களிப்பை வழங்கின.
அலுவலகங்களின் தூய்மையை மேம்படுத்துதல் மற்றும் பாராளுமன்ற உறுப்பினர்களின் குறிப்புகள், மாநில அரசுகளின் குறிப்புகள், அமைச்சகங்களுக்கு இடையேயான குறிப்புகள், பாராளுமன்ற உத்தரவாதங்கள், பிரதமர் அலுவலக குறிப்புகள், பொதுமக்கள் குறைகள் மற்றும் பி.ஜி. மேல்முறையீடுகள் போன்றவற்றில் நிலுவையில் உள்ளவற்றை நீக்குவது, பிரச்சாரத்தின் நோக்கங்கள் ஆகும். மேலும், அலுவலகங்களின் பதிவுகள் மதிப்பாய்வு செய்யப்பட்டு, ‘சி.எஸ்.எம்.ஓ.பி, ஜி.எஃப்.ஆர் மற்றும் பொதுப் பதிவுச் சட்டம், 1993-ஐப் பின்பற்றி’ அப்புறப்படுத்த/ தக்கவைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டது. சுமார் 108 தூய்மைப் பிரச்சாரங்கள் நடத்தப்பட்டு நிலுவையில் உள்ள குறிப்புகள் அகற்றப்பட்டன. பொதுமக்கள் குறைகள் தொடர்பான 59 மனுக்களும், 10 குறைகேட்பு மனுக்களும் தள்ளுபடி செய்யப்பட்டன. தேவையற்ற பொருட்களை அகற்றியதன் மூலம் அலுவலகங்கள் ரூ.15,16,404/- வருவாயை ஈட்டியுள்ளன. 84,200 சதுர அடி இடம் விடுவிக்கப்பட்டுள்ளது. தவிர, 8 விதிகள்/செயல்முறைகள் எளிமைப்படுத்தப்பட்டுள்ளன. பதிவு நிர்வாகத்தைப் பொறுத்தவரை, இந்தத் துறையானது அதன் நிறுவனங்களுடன் இணைந்து, 9152 இயல் மற்றும் 814 மின்னணு கோப்புகளை மதிப்பாய்வு செய்து, அவற்றில் 5200 இயல் கோப்புகள் களையெடுக்கப்பட்டு 328 மின்னணு கோப்புகள் அப்புறப்படுத்தப்பட்டுள்ளன.
உயிரி தொழில்நுட்பத் துறை, நிலுவையில் உள்ள பொருட்களை தூய்மைப்படுத்தி அகற்றியது மட்டுமல்லாமல், சிறப்பு பிரச்சாரம் 4.0 இன் போது பல்வேறு சிறந்த நடைமுறைகளையும் வெளிபடுத்தியது. தீ விபத்திலிருந்து பாதுகாத்தல் மற்றும் தடுப்பு குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி, கட்டுமான தளங்களில் அப்புறப்படுத்தாமல் இருந்த கழிவு இரும்பு கம்பிகளிலிருந்து உபயோகமான பொருட்களை (“கழிவிலிருந்து செல்வம்” ) உருவாக்குதல் போன்ற செயல்பாடுகள் இதில் அடங்கும்.