शुक्रवार, नवंबर 22 2024 | 03:43:44 AM
Breaking News
Home / Choose Language / Tamil / தர்மங்களால் ஆசீர்வதிக்கப்பட்ட பூமி இந்தியா; தலைசிறந்த நாயகர்கள், மறைஞானிகள் மற்றும் வழிகாட்டுவோரிடையே புத்தர் ஒரு தனித்துவமான இடத்தைப் பெற்றுள்ளார்: திருமதி திரௌபதி முர்மு

தர்மங்களால் ஆசீர்வதிக்கப்பட்ட பூமி இந்தியா; தலைசிறந்த நாயகர்கள், மறைஞானிகள் மற்றும் வழிகாட்டுவோரிடையே புத்தர் ஒரு தனித்துவமான இடத்தைப் பெற்றுள்ளார்: திருமதி திரௌபதி முர்மு

Follow us on:

புதுதில்லியில் இன்று சர்வதேச புத்த மதக் கூட்டமைப்புடன் (IBC) இணைந்து மத்திய அரசின் கலாச்சார அமைச்சகம் ஏற்பாடு செய்திருந்த முதலாவது ஆசிய புத்த மத உச்சி மாநாட்டில் குடியரசுத் தலைவர் திருமதி திரௌபதி முர்மு கலந்து கொண்டார்.

நிகழ்ச்சியில் பேசிய குடியரசுத் தலைவர், இந்தியா தர்மங்களால் ஆசீர்வதிக்கப்பட்ட பூமி என்றும் ஒவ்வொரு காலகட்டத்திலும், இந்தியாவில் தலைசிறந்த நாயகர்கள் மற்றும் ஆன்மீகவாதிகள், ஞானிகள் இருந்துள்ளனர்; அவர்கள் மனிதகுலத்திற்கு உள்ளே அமைதியையும் வெளியே நல்லிணக்கத்தையும் காண ஒரு வழியைக் காட்டியுள்ளனர்; இத்தகையோரில் புத்தர் ஒரு தனித்துவமான இடத்தைப் பிடித்துள்ளார் என்று தெரிவித்தார்.புத்த கயாவில் போதி மரத்தடியில் சித்தார்த்த கௌதமர் ஞானம் பெற்றது வரலாற்றில் இணையற்ற நிகழ்வாகும். மனித மனத்தின் செயல்பாட்டில் ஒப்பிட முடியாத வளமான உள்ளொளியை அவர் அடைந்தது மட்டுமல்லாமல், மக்களின் நலனுக்காக “பஹுஜன சுகாய பஹுஜன ஹிதாய ச” என்ற உணர்வில் அனைத்து மக்களுடனும் அதை அவர் பகிர்ந்து கொள்ளவும் செய்தார் .

இந்த மாநாட்டில் உரையாற்றிய மத்திய சுற்றுலா மற்றும் கலாச்சாரத்துறை அமைச்சர் திரு கஜேந்திர சிங் ஷெகாவத், “உண்மையான அர்த்தத்தில், புத்த தம்மம் ஒரு வாழ்க்கை முறையாகும். அமைதியுடனும், மகிழ்ச்சியுடனும்,  நல்லிணக்கத்துடனும், கருணையுடனும், அன்புடனும்,  சமூகத்துடன் சமநிலையுடனும் வாழ்வது எப்படி என்பதை இது போதிக்கிறது. மனிதர்களாகிய நாம் அனைவரும், பௌத்தர்களாக இருந்தாலும் சரி, பௌத்தரல்லாதவர்களாக இருந்தாலும் சரி, புத்தரின் நேர்மை, இரக்கம் மற்றும் அனைத்து உயிரினங்களுக்கும் மரியாதை என்ற செய்தியில் உத்வேகம் பெற முடியும்.

“இந்த வலுவான பாரம்பரியத்தின் வாரிசுகளாக இன்று நாம் ஒன்றுபட்டு நிற்கிறோம். புத்த தம்மத்தின் பிறப்பிடமான இந்தியா, ஆசிய நாடுகளை இணைக்கும் பௌத்த பாலமான ‘தம்ம சேது’வை வலுப்படுத்துதல், பௌத்த பாரம்பரிய தலங்களைப் பாதுகாத்தல் மற்றும் மேம்படுத்துதல், பௌத்தம், பாலி ஆய்வுகள் மற்றும் ஆராய்ச்சிகளை ஊக்குவித்தல், சர்வதேச பௌத்த கலாச்சார பரிமாற்றத்திற்கு ஆதரவளித்தல் மற்றும் பௌத்த  சுற்றுப்பயணங்களுக்கு வசதி செய்தல் ஆகியவற்றுக்கான அதன் உறுதிப்பாட்டை மீண்டும் உறுதிப்படுத்துகிறது. ஆசிய நாடுகள் முழுவதிலுமிருந்து பௌத்த தலைவர்களின் அறிவார்ந்த  இருப்பு, அமைதி, ஞானம் மற்றும் இரக்கத்தை நோக்கி மனிதகுலத்தை தொடர்ந்து வழிநடத்தும் புத்த தர்மத்தின் வாழும் பாரம்பரியத்தை அடையாளப்படுத்துகிறது என்றார்.

இந்த நிகழ்ச்சியின் முக்கியத்துவத்தை எடுத்துரைத்த அமைச்சர், “உலகளாவிய சவால்களை நாம் எதிர்கொண்டுவரும் நிலையில், புத்தரின் மத்தியமான பாதை மற்றும் நான்கு உன்னத உண்மைகள் காலத்தால் அழியாத தீர்வுகளை வழங்குகின்றன. இந்த உச்சிமாநாடு பௌத்த ராஜதந்திர உறவுகளை வளர்ப்பது, பௌத்த முன்னோக்குகள் மூலம் சமகால சமூக பிரச்சினைகளை தீர்ப்பது, பௌத்த நாடுகளுக்கிடையேயான கலாச்சார பிணைப்புகளை வலுப்படுத்துவது, பௌத்த சுற்றுலா மற்றும் புனித யாத்திரையை ஊக்குவித்தல் மற்றும் பண்டைய பௌத்த கையெழுத்துப் பிரதிகள் மற்றும் கலைப்பொருட்களைப் பாதுகாத்தல் ஆகியவற்றை நோக்கமாகக் கொண்டுள்ளது.

“முதல் ஆசிய பௌத்த உச்சி மாநாடு 2024, உரையாடலை வளர்ப்பதன் மூலமும், சமகால சவால்களை எதிர்கொள்வதன் மூலமும், புத்த தம்மத்தின் வளமான கலாச்சார பாரம்பரியத்தை ஊக்குவிப்பதன் மூலமும் ஆசியா முழுவதும் உள்ள புத்த தம்மத்தின் மாறுபட்ட குரல்களை ஒன்றிணைப்பதற்கான ஒரு தனித்துவமான வாய்ப்பை பிரதிநிதித்துவப்படுத்துகிறது, கூட்டு பிரதிபலிப்பு மற்றும் செயல்கள் மூலம் மிகவும் இரக்கமுள்ள, நிலையான மற்றும் அமைதியான உலகத்திற்கு பங்களிப்பதை உச்சிமாநாடு நோக்கமாகக் கொண்டுள்ளது. நவீன யுகத்தில் புத்த தம்மத்தின் பங்கை வலுப்படுத்தவும், எதிர்கால சந்ததியினருக்கு அதன் நீடித்த பொருத்தத்தை உறுதி செய்யவும் இந்த உச்சிமாநாடு விரும்புகிறது.

மத்திய நாடாளுமன்ற விவகாரங்கள் மற்றும் சிறுபான்மையினர் நலத்துறை அமைச்சர் திரு கிரண் ரிஜிஜு உரையாற்றினார்.

मित्रों,
मातृभूमि समाचार का उद्देश्य मीडिया जगत का ऐसा उपकरण बनाना है, जिसके माध्यम से हम व्यवसायिक मीडिया जगत और पत्रकारिता के सिद्धांतों में समन्वय स्थापित कर सकें। इस उद्देश्य की पूर्ति के लिए हमें आपका सहयोग चाहिए है। कृपया इस हेतु हमें दान देकर सहयोग प्रदान करने की कृपा करें। हमें दान करने के लिए निम्न लिंक पर क्लिक करें -- Click Here


* 1 माह के लिए Rs 1000.00 / 1 वर्ष के लिए Rs 10,000.00

Contact us

Check Also

36 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களிலிருந்தும் 1.76 கோடிக்கும் அதிகமான பள்ளி மாணவர்கள் வீரக்கதை 4.0 திட்டத்தில் பங்கேற்றனர்

36 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களைச் சேர்ந்த 1.76 கோடிக்கும் அதிகமான பள்ளி மாணவர்கள் வீரக்கதை 4.0 திட்டத்தில் ஆர்வத்துடன் …