Sunday, July 26 2026 | 07:48:50 AM
Breaking News

சென்னையில் தொடங்கிய “லெட்ஸ் கோவா 2026 ஆட்டோரிக்‌ஷா பேரணி (Let’s Goa 2026 Rickshaw Rally)”

Connect us on:

சென்னை,மார்ச் 2:

இங்கிலாந்தைச் சேர்ந்த 35 பெண்தொழில்முனைவோர் பங்கேற்ற “லெட்ஸ் கோவா 2026 ஆட்டோரிக்‌ஷா பேரணி  (Let’s Goa 2026 Rickshaw Rally)” இன்று சென்னையில் உற்சாகமாக தொடங்கியது. பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கான கல்வி , திறன் மேம்பாடு மற்றும் நிலையான முன்னேற்ற திட்டங்களுக்காக ₹1 முதல் ₹3 கோடி வரை நிதி திரட்டுவதே இந்த பேரணியின் முக்கிய நோக்கமாகும்.

இந்த சர்வதேச நிதி திரட்டும் முயற்சி, மெட்ராஸ் மிட்டவுன் ரவுண்டு டேபிள் 42 (MMRT42) மற்றும் லேடீஸ் சர்க்கிள் 7 (LC7) ஆகியவை, இங்கிலாந்தைச் சேர்ந்த தி சிஸ்டர்ஹூட் குழு(The Sisterhood Group) உடன் இணைந்து நடத்துகின்றன.

தி லேடி ஆண்டல் ஓபன் ஸ்கூல் வளாகத்தில் நடைபெற்ற தொடக்க விழாவில், ரவுண்டு டேபிள் ஏரியா தலைவர் (2025–26) கரண் கோயல் , MMRT42 தலைவர்(2025–26) சித்தார்த் ஷங்கர் , லேடீஸ் சர்க்கிள் ஏரியா தலைவர் (2025–26) மோனிகா தர்ஷினி மற்றும் MMLC7 தலைவர் (2025–26)நந்திதா விக்ரம் கொடியை அசைத்து பேரணியைத் தொடங்கிவைத்தனர் . இந்த ஆட்டோரிக்‌ஷா  பேரணி , சென்னை  நகரிலிருந்து புறப்பட்டு வேலூர் ,பெங்களூரு ,மைசூரு, பத்கல் ஆகிய நகரங்கள் வழியாக பயணம் செய்து, இறுதியாக கோவாவை சென்றடையும். மொத்தம் 1,000 கிலோமீட்டர் பயணமாக நடைபெறும் இந்த பேரணி , பெண்கள் தலைமையிலான சர்வதேச ஒத்துழைப்பின் முக்கிய எடுத்துக்காட்டாக விளங்குகிறது.

2006ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட தி சிஸ்டர்ஹூட் குழு , இதற்கு முன் பல கடின சவால்கள்மூலம் தொண்டு நோக்கில் நிதி திரட்டி வந்துள்ளது. கடந்த ஆண்டில் நடைபெற்ற இதே ஆட்டோரிக்‌ஷா பேரணி முயற்சியின் மூலம், பெண்களுக்கான திறன் பயிற்சி மையம்  அமைத்தல் மற்றும் மாற்றுத் திறனாளி மாணவர்களுக்கான  வகுப்பறைகள் கட்டுதல் போன்ற பயனுள்ள திட்டங்கள் நடைமுறைப்படுத்தப்பட்டன.

இந்த பேரணி , ஒரு பயணம் மட்டுமல்ல; சமூக மாற்றத்தை உருவாக்கும் பெண்களின் உறுதியான முயற்சியாகவும் கருதப்படுகிறது.

Featured Article

About Matribhumi Samachar

Check Also

மேற்கு வங்க மாநில உதய தினம் 2026: வரலாறும் பிரதமர் நரேந்திர மோடியின் நெகிழ்ச்சியான வாழ்த்துகளும்!

இந்தியாவின் கலாச்சாரம், கலை மற்றும் தேசிய உணர்வின் தொட்டிலாக விளங்கும் மேற்கு வங்க மாநிலம், தனது வரலாற்றுச் சிறப்புமிக்க தோற்ற …