இந்திய தர நிர்ணய அமைவனம் (பிஐஎஸ்) ஒவ்வொரு ஆண்டும் அக்டோபர் மாதம், ISO,IEC மற்றும் ITU உறுப்பினர்கள் ஒன்றிணைந்து உலக தர தினத்தை கொண்டாடுகிறது. சர்வதேச தரங்களாக வெளியிடப்படும் தன்னார்வ தொழில்நுட்ப ஒப்பந்தங்களை உருவாக்கும் ஆயிரக்கணக்கான நிபுணர்களின் கூட்டு முயற்சிகளுக்கு கௌரவப்படுத்தும் ஒரு வழிமுறையாக இது உள்ளது. அதன்படி, பிஐஎஸ் சென்னை கிளை அலுவலகம், அக்டோபர் மாதத்தில் , பல்வேறு பங்குதாரர்களுக்காக மானக் மஹோத்சவ் உலக தரநிலை நாள் நிகழ்ச்சிகளை நடத்தியது.
அதன் தொடர்ச்சியாக இன்று (09.11.24) மாலை, இந்திய தர நிர்ணய அமைவனத்தின் (பிஐஎஸ்) சென்னை கிளை அலுவலகம் சார்பில், மானக் மஹோத்சவ் – கலாச்சார நிகழ்ச்சிகள் மற்றும் விளையாட்டுகள் மூலம் பொதுமக்களுக்கு தர விழிப்புணர்வு ஏற்படுத்தும் நிகழ்ச்சியை , சென்னை கத்திப்பாரா அர்பன் ஸ்கொயரில் (URBAN SQUARE) நடைபெற்றது. இந்நிகழ்ச்சி மாலை 6 மணி முதல் இரவு 9 மணி வரை நடைபெற்றது.
இந்த நிகழ்ச்சியில் பிஐஎஸ் அதிகாரிகளின் பொது மக்கள் இடையே பிஐஎஸ் செயல்பாடுகள் குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்தினர். சாய்ராம் பொறியியல் கல்லூரி, ஸ்ரீ வெங்கடேஸ்வரா பொறியியல் கல்லூரி மாணவ மாணவியரின் பல்வேறு நடனம், இசை நிகழ்ச்சிகளும் நடைபெற்றன.
இது மட்டுமன்றி நிகழ்வில், தகவல் மற்றும் கேமிங் ஸ்டால்கள், செல்ஃபி கார்னர், 360 டிகிரி கேமரா-ஃபோட்டோ பூத் ஆகியவை பொது மக்களின் பார்வைக்காக ஏற்பாடு செய்யப்பட்டன.