सोमवार, दिसंबर 23 2024 | 04:32:32 AM
Breaking News
Home / अन्य समाचार / டிராய் ஆலோசனை அறிக்கை மீதான கருத்துகள் / எதிர் கருத்துகளைப் பெறுவதற்கான கடைசி தேதி நீட்டிப்பு

டிராய் ஆலோசனை அறிக்கை மீதான கருத்துகள் / எதிர் கருத்துகளைப் பெறுவதற்கான கடைசி தேதி நீட்டிப்பு

Follow us on:

இந்திய தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணையம் (டிராய்) தொலைத்தொடர்புச் சட்டம், 2023-ன் கீழ் வழங்கப்பட வேண்டிய நெட்வொர்க் அங்கீகாரங்களின் விதிமுறைகள் மற்றும் நிபந்தனைகள் குறித்த ஆலோசனை அறிக்கையை 22.10.2024 அன்று வெளியிட்டது. ஆலோசனை அறிக்கையில் பங்குதாரர்களிடமிருந்து எழுப்பப்பட்ட பிரச்சனைகள் குறித்து எழுத்துப்பூர்வ கருத்துக்களைப் பெறுவதற்கான கடைசி தேதி 12.11.2024 ஆகவும், எதிர் கருத்துகளுக்கு 19.11.2024 ஆகவும் நிர்ணயிக்கப்பட்டது.

கருத்துகளை சமர்ப்பிப்பதற்கான கால அவகாசத்தை நீட்டிக்குமாறு சில பங்குதாரர்களின் கோரிக்கைகளை கருத்தில் கொண்டு, எழுத்துப்பூர்வ கருத்துகள் மற்றும் எதிர் கருத்துகளை சமர்ப்பிப்பதற்கான கடைசி தேதிகளை முறையே 19.11.2024 மற்றும் 26.11.2024 வரை நீட்டிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.

கருத்துகள் / எதிர் கருத்துக்களை மின்னணு வடிவில், முன்னுரிமை advmn@trai.gov.in -ல் அனுப்பலாம். ஏதேனும் விளக்கம் / தகவலுக்கு, டிராய் ஆலோசகர் (நெட்வொர்க்ஸ், ஸ்பெக்ட்ரம் மற்றும் உரிமம்) திரு அகிலேஷ் குமார் திரிவேதியை +91-11-20907758 என்ற தொலைபேசி எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.

मित्रों,
मातृभूमि समाचार का उद्देश्य मीडिया जगत का ऐसा उपकरण बनाना है, जिसके माध्यम से हम व्यवसायिक मीडिया जगत और पत्रकारिता के सिद्धांतों में समन्वय स्थापित कर सकें। इस उद्देश्य की पूर्ति के लिए हमें आपका सहयोग चाहिए है। कृपया इस हेतु हमें दान देकर सहयोग प्रदान करने की कृपा करें। हमें दान करने के लिए निम्न लिंक पर क्लिक करें -- Click Here


* 1 माह के लिए Rs 1000.00 / 1 वर्ष के लिए Rs 10,000.00

Contact us

Check Also

ઇન્સ્ટિટ્યૂટ ઓફ એરોસ્પેસ મેડિસિન ઇન્ડિયન સોસાયટી ઓફ એરોસ્પેસ મેડિસિન (આઇએસએએમ)ની 63મી વાર્ષિક પરિષદનું આયોજન કરશે

ઇન્ડિયન સોસાયટી ઓફ એરોસ્પેસ મેડિસિન (આઇએસએએમ) 05થી 07 ડિસેમ્બર 2024 દરમિયાન ઇન્સ્ટિટ્યૂટ ઓફ એરોસ્પેસ મેડિસિન (આઇએએમ), …