गुरुवार, नवंबर 14 2024 | 12:03:05 PM
Breaking News
Home / Choose Language / Tamil / 2024 ஏப்ரல் – செப்டம்பர் மாதங்களில் கலப்புப் பயன்பாட்டிற்கான நிலக்கரி இறக்குமதி 8.5% குறைந்துள்ளது

2024 ஏப்ரல் – செப்டம்பர் மாதங்களில் கலப்புப் பயன்பாட்டிற்கான நிலக்கரி இறக்குமதி 8.5% குறைந்துள்ளது

Follow us on:

உலகின் 5-வது பெரிய நிலக்கரி இருப்புக்களைக் கொண்ட இந்தியா, விரைவாக வளர்ந்து வரும் பொருளாதாரத்தால் உத்வேகம் பெற்று நிலக்கரி உற்பத்தியில் 2-வது பெரிய நுகர்வோராக உள்ளது. எனினும், தற்போதைய நுகர்வு நிலப்பரப்பு இறக்குமதிக்கான ஒரு முக்கியமான தேவையை வெளிப்படுத்துகிறது. குறிப்பாக கோக்கிங் நிலக்கரி மற்றும் உயர்தர வெப்ப நிலக்கரி, உள்நாட்டு இருப்புகளுக்குள் போதுமான அளவு கிடைக்கவில்லை. இந்த பற்றாக்குறை எஃகு உள்ளிட்ட முக்கிய தொழில்களுக்காக இறக்குமதியை அவசியமாக்குகிறது.

2024-25-ம் நிதியாண்டின் ஏப்ரல் – ஆகஸ்ட் காலகட்டத்தில் நிலக்கரி இறக்குமதி 2.2% அதிகரித்து, முந்தைய ஆண்டில் 108.81 மில்லியன் டன்னுடன் ஒப்பிடும்போது 111.20 மில்லியன் டன்களை எட்டியது. இருப்பினும், ஒழுங்குபடுத்தப்படாத துறைகள் கடந்த ஆண்டின் இதே காலகட்டத்துடன் ஒப்பிடும்போது 2024 ஏப்ரல் – ஆகஸ்ட்  காலகட்டத்தில் 10.3% குறிப்பிடத்தக்க சரிவைக் கண்டன.

கடந்த ஆண்டு இதே காலகட்டதுடன் ஒப்பிடும்போது 2024 ஏப்ரல்  முதல் செப்டம்பர் வரை நிலக்கரி அடிப்படையிலான மின் உற்பத்தியில் 4.97% குறிப்பிடத்தக்க வளர்ச்சி இருந்தபோதிலும், கலப்பு நோக்கங்களுக்கான இறக்குமதி கடந்த ஆண்டு 10.70 மெட்ரிக் டன்னாக இருந்த நிலையில் தற்போது 9.79 மெட்ரிக் டன்னாக குறைந்துள்ளது. இது 8.5% சரிவைக் குறிக்கிறது.

இந்த சரிவு நிலக்கரி உற்பத்தியில் தன்னிறைவை அடைவதற்கும், இறக்குமதியை நம்பியிருப்பதைக் குறைப்பதற்கும் இந்தியாவின் உறுதியான உறுதிப்பாட்டை சுட்டிக் காட்டுகிறது.

மேலும், 2024 ஏப்ரல் – செப்டம்பர் காலகட்டத்தில் நிலக்கரி உற்பத்தி சிறப்பான அதிகரிப்பைக் கண்டது. 2023-24-ம் நிதியாண்டின் இதே காலகட்டத்தில் 428.21 மெட்ரிக் டன்னுடன் ஒப்பிடும்போது 453 மெட்ரிக் டன்னை எட்டியது. இது 5.79% வளர்ச்சியைக் குறிக்கிறது.

இருப்பினும், மதிப்பு அடிப்படையில், 2024-25 ஏப்ரல் – ஆகஸ்ட் மாதங்களில் ஒட்டுமொத்த இறக்குமதி செய்யப்பட்ட நிலக்கரியின் விலை ரூ.120,532.21 கோடியாக உள்ளது. அதே நேரத்தில் கடந்த ஆண்டு (2023-24) இதே காலகட்டத்தில் ஒட்டுமொத்த இறக்குமதி செய்யப்பட்ட நிலக்கரியின் விலை ரூ.133,461.65 கோடியாக இருந்தது. இதன் விளைவாக ரூ.12,929.44 கோடி சேமிக்கப்படுகிறது, இது கடந்த ஆண்டுடன் ஒப்பிடும்போது மதிப்பு அடிப்படையில் சுமார் 9.69% சேமிப்பாகும்.

நிலக்கரி உற்பத்தியை அதிகரிப்பது மற்றும் நிலக்கரி கிடைப்பதை மேம்படுத்துவதை நோக்கமாகக் கொண்ட உத்திசார்ந்த முன்முயற்சிகளை நிலக்கரி அமைச்சகம் தொடர்ந்து செயல்படுத்தி வருகிறது. இந்த முயற்சிகள் அந்நிய செலாவணி இருப்புக்களை பாதுகாப்பதில் கவனம் செலுத்துவது மட்டுமல்லாமல், நாட்டின் எரிசக்திப் பாதுகாப்பை மேம்படுத்துவதிலும் கவனம் செலுத்துகின்றன. உள்நாட்டு நிலக்கரி உற்பத்தியை அதிகரிக்க அரசு மேற்கொண்டுள்ள நடவடிக்கைகள் இறுதியில் இறக்குமதியை சார்ந்திருப்பதைக் குறைக்கும் மற்றும் இந்தியாவின் எரிசக்தி நிலப்பரப்பின் ஒட்டுமொத்த நிலைத்தன்மைக்கு பங்களிக்கும்.

मित्रों,
मातृभूमि समाचार का उद्देश्य मीडिया जगत का ऐसा उपकरण बनाना है, जिसके माध्यम से हम व्यवसायिक मीडिया जगत और पत्रकारिता के सिद्धांतों में समन्वय स्थापित कर सकें। इस उद्देश्य की पूर्ति के लिए हमें आपका सहयोग चाहिए है। कृपया इस हेतु हमें दान देकर सहयोग प्रदान करने की कृपा करें। हमें दान करने के लिए निम्न लिंक पर क्लिक करें -- Click Here


* 1 माह के लिए Rs 1000.00 / 1 वर्ष के लिए Rs 10,000.00

Contact us

Check Also

வட மாநிலங்கள் / யூனியன் பிரதேசங்களில் கால்நடை பராமரிப்பு, பால்வளத் துறையை வலுப்படுத்துவதில் ஏற்பட்டுள்ள முன்னேற்றம் குறித்து புதுதில்லியில் பிராந்திய ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது

மீன்வளம், கால்நடை பராமரிப்பு மற்றும் பால்வள அமைச்சகத்தின் கீழ் உள்ள கால்நடை பராமரிப்பு மற்றும் பால்வளத் துறையின்  செயலாளர் திருமதி அல்கா …