गुरुवार, दिसंबर 19 2024 | 02:50:16 PM
Breaking News
Home / अन्य समाचार / அந்தமான் நிக்கோபார் தீவுகளின் மீன்வளம் மற்றும் நீர்வாழ் உயிரின வளர்ப்புத் துறையில் முதலீட்டு வாய்ப்புகள்’ – என்ற தலைப்பில் முதலீட்டாளர்கள் சந்திப்பு 2024 நடைபெற்றது

அந்தமான் நிக்கோபார் தீவுகளின் மீன்வளம் மற்றும் நீர்வாழ் உயிரின வளர்ப்புத் துறையில் முதலீட்டு வாய்ப்புகள்’ – என்ற தலைப்பில் முதலீட்டாளர்கள் சந்திப்பு 2024 நடைபெற்றது

Follow us on:

மத்திய மீன்வளம், கால்நடை பராமரிப்பு மற்றும் பால்வள அமைச்சகத்தின் மீன்வளத் துறையானது அந்தமான் & நிக்கோபார் தீவுகளின் மீன்வளம் மற்றும் நீர்வாழ் உயிரின துறையில் முதலீட்டு வாய்ப்புகள் குறித்த  முதலீட்டாளர்கள் சந்திப்பு 2024 நவம்பர் 14 அன்று அந்தமான் & நிக்கோபார் தீவுகளில் உள்ள ஸ்வராஜ் தீவில் நடைபெற்றது. பஞ்சாயத்து ராஜ் அமைச்சர் திரு ராஜீவ் ரஞ்சன் சிங் முன்னிலையில் இந்த சந்திப்பு கூட்டம் நடைபெற்றது. அந்தமான் நிக்கோபார் தீவுகளின் துணைநிலை ஆளுநர் அட்மிரல் டி.கே.ஜோஷி, மத்திய மீன்வளம், கால்நடை பராமரிப்பு மற்றும் பால்வளம் இணையமைச்சர் பேராசிரியர் எஸ்.பி.சிங் பாகேல், மத்திய மீன்வளத்துறை மற்றும் சிறுபான்மையினர் விவகாரங்கள் துறை இணையமைச்சர் திரு ஜார்ஜ் குரியன், அமைச்சகத்தின் செயலாளர், அந்தமான் நிக்கோபார் தீவுகளின் தலைமைச் செயலாளர் ஆகியோர் இதில் கலந்து கொண்டனர்.

சூரை மீன்பிடித்தல் மற்றும் கடற்பாசி தொடர்பான தொழில்நுட்பங்களில் நிபுணத்துவம் பெற்ற நாட்டின் பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த முதலீட்டாளர்களும் இந்த நிகழ்வில் பங்கேற்றனர், மெர்ச்சன்ட் வென்ச்சர்ஸ் பிரைவேட் லிமிடெட், மும்பை, உதய் அக்வா கனெக்ட்ஸ் பிரைவேட் லிமிடெட், ஹைதராபாத், சாம்ஸ் டிஸ்கஸ் இந்தியா, மும்பை, அக்வாலைன் எக்ஸ்போர்ட்ஸ், கெரேலா, அனெம்கோ பிரைவேட் லிமிடெட், ஸ்ரீ விஜயபுரம், சீ 6 எனர்ஜி பிரைவேட் லிமிடெட், பெங்களூரு, எஸ் ராஜா ராவ் சீ ஃபுட்ஸ், ஸ்ரீ விஜயபுரம், ஜோகான்ஸ் மரைன் எக்ஸ்போர்ட்ஸ் பிரைவேட் லிமிடெட், கோவா, நிலா மரைன் எக்ஸ்போர்ட், ஸ்ரீ விஜயபுரம், லோ நவ் கார்கோ இம்போர்ட் லிமிடெட், தாய்லாந்து, பாப்லா பியர்ல்ஸ், மும்பை, கான்டினென்டல் மரைன்ஸ், விசாகப்பட்டினம், கார்வேர் டெக்னிக்கல் ஃபைபர்ஸ் லிமிடெட், புனே, ஆர்பி பயோமரைன் எக்ஸ்ட்ராக்ட்ஸ் பிரைவேட் லிமிடெட், மைசூர், மதர்ஹூட் ஃபுட்ஸ், பெங்களூர், ஜீலானி மரைன் புராடக்ட்ஸ், ரத்னகிரி, இசட் ஏ ஃபுட் புராடக்ட்ஸ், கொல்கத்தா, கேனாரஸ் அக்வாகல்ச்சர் எல்.எல்.பி., கர்நாடகா மற்றும் ப்ளூ கேட்ச், மும்பை ஆகிய நிறுவனங்கள் இச்சந்திப்பு கூட்டத்தில்  பங்கேற்றன.

ஆண்டு தோறும் 40 பில்லியன் டாலருக்கும் அதிகமான மதிப்புள்ள உலகளாவிய சூரை மீன்பிடி தொழிலானது பொருளாதாரத்தில் முக்கிய பங்கு வகிக்கிறது. அந்தமான் & நிக்கோபார் தீவுகள் இந்தத் துறைக்கு ஒரு முக்கிய வாய்ப்பை பிரதிநிதித்துவப்படுத்துகின்றன. 6 லட்சம் சதுர கி.மீ பரப்பளவில் சூரை மீன் இனங்கள் பெருமளவில் காணப்படுகின்றன.

மத்திய அமைச்சர் திரு ராஜீவ் ரஞ்சன் சிங் பேசிய போது, 2015-ம் ஆண்டு முதல் முன்னெப்போதும் இல்லாத வகையில் ரூ.38,572 கோடி முதலீட்டு ஆதரவுடன் பிரதமரின்  மீனவள மேம்பாட்டுத் திட்டம் உள்ளிட்ட பல்வேறு திட்டங்களின் மூலம் மத்திய அரசு மேற்கொண்டு வரும் முன்முயற்சிகளை எடுத்துரைத்தார்.

मित्रों,
मातृभूमि समाचार का उद्देश्य मीडिया जगत का ऐसा उपकरण बनाना है, जिसके माध्यम से हम व्यवसायिक मीडिया जगत और पत्रकारिता के सिद्धांतों में समन्वय स्थापित कर सकें। इस उद्देश्य की पूर्ति के लिए हमें आपका सहयोग चाहिए है। कृपया इस हेतु हमें दान देकर सहयोग प्रदान करने की कृपा करें। हमें दान करने के लिए निम्न लिंक पर क्लिक करें -- Click Here


* 1 माह के लिए Rs 1000.00 / 1 वर्ष के लिए Rs 10,000.00

Contact us

Check Also

ઇન્સ્ટિટ્યૂટ ઓફ એરોસ્પેસ મેડિસિન ઇન્ડિયન સોસાયટી ઓફ એરોસ્પેસ મેડિસિન (આઇએસએએમ)ની 63મી વાર્ષિક પરિષદનું આયોજન કરશે

ઇન્ડિયન સોસાયટી ઓફ એરોસ્પેસ મેડિસિન (આઇએસએએમ) 05થી 07 ડિસેમ્બર 2024 દરમિયાન ઇન્સ્ટિટ્યૂટ ઓફ એરોસ્પેસ મેડિસિન (આઇએએમ), …