शुक्रवार, नवंबर 22 2024 | 01:52:36 AM
Breaking News
Home / Choose Language / Tamil / மாற்றுத்திறனாளிகளிடம் இந்தியாவின் நாகரிகம், தெய்வீகம், மேன்மை, ஆன்மீகம் ஆகியவற்றைக் காணமுடிகிறது: குடியரசு துணைத்தலைவர்

மாற்றுத்திறனாளிகளிடம் இந்தியாவின் நாகரிகம், தெய்வீகம், மேன்மை, ஆன்மீகம் ஆகியவற்றைக் காணமுடிகிறது: குடியரசு துணைத்தலைவர்

Follow us on:

“உலகில் நமது நாகரிகம் தனித்துவமானது, 5000 ஆண்டுகளுக்கும் மேலானது. அது எதைப் பிரதிபலிக்கிறது, மாற்றுத்திறனாளிகளிடம் நாம் தெய்வீகத்தைக் காண்கிறோம், நாம் உன்னதத்தைக் காண்கிறோம், ஆன்மீகத்தைப் பார்க்கிறோம்” என குடியரசுத் துணைத் தலைவர் திரு ஜக்தீப் தன்கர் தெரிவித்துள்ளார்.

புதுதில்லி தியாகராஜ் விளையாட்டரங்கில் இன்று நடைபெற்ற சிறப்பு ஒலிம்பிக் ஆசிய பசிபிக் போக்கே & பந்துவீச்சு போட்டியின் தொடக்க விழாவில் சிறப்பு விருந்தினராக பங்கேற்ற திரு தன்கர், “இந்த விளையாட்டுகளின் மூலம், நாம் மிக முக்கியமான ஒன்றைக் கொண்டாடுகிறோம், அது ஆசியா பசிபிக் முழுவதும் உள்ள மாற்றுத்திறனாளிகளுக்கான உள்ளடக்கம் மற்றும் கண்ணியம். இது இந்தியாவின் கலாச்சார நெறிமுறைகளை பிரதிபலிக்கிறது. சிறப்பு ஒலிம்பிக் உலகளாவிய உள்ளடக்கத்திற்கான எங்கள் உறுதிப்பாட்டை பிரதிபலிக்கிறது. “

நாட்டின் இளைஞர்களின் டிஜிட்டல் மோகம் குறித்து கவலை தெரிவித்த திரு தன்கர், “இந்த சந்தர்ப்பத்தில் ஒட்டுமொத்த சமூகத்தின் மீதான கவலையை நான் சுட்டிக்காட்ட விரும்புகிறேன், இது மிகவும் முக்கியமானது. இது கவலையளிக்கும் வகையில் உள்ளது. இன்றைய வேகமான டிஜிட்டல் உலகில், நமது இளைஞர்களும், குழந்தைகளும் சிறிய திரைகளான செல்போன்களை  பார்ப்பதால், அவர்கள் உண்மையான விளையாட்டு மைதானங்களிலிருந்து விலகி டிஜிட்டல் விளையாட்டு மைதானங்களுக்குள் தள்ளப்படுகிறார்கள் என்றும் கூறினார். இந்த சிறிய பிளாஸ்டிக் திரையால் குழந்தைகளுக்கு உண்மையான விளையாட்டு மைதானங்கள் கிடைக்காமல் போய்விடாமல் பார்த்துக் கொள்ள வேண்டும் என்று ஒவ்வொரு பெற்றோரையும் கேட்டுக் கொள்கிறேன். இந்த டிஜிட்டல் ஆவேசம் குழந்தைகளுக்கு, அந்த தலைமுறைக்கு உண்மையான விளையாட்டு மைதானத்தின் சிலிர்ப்பை, உற்சாகத்தை, அறிவொளியை பறிக்காமல் இருப்பதை உறுதி செய்வோம்.

मित्रों,
मातृभूमि समाचार का उद्देश्य मीडिया जगत का ऐसा उपकरण बनाना है, जिसके माध्यम से हम व्यवसायिक मीडिया जगत और पत्रकारिता के सिद्धांतों में समन्वय स्थापित कर सकें। इस उद्देश्य की पूर्ति के लिए हमें आपका सहयोग चाहिए है। कृपया इस हेतु हमें दान देकर सहयोग प्रदान करने की कृपा करें। हमें दान करने के लिए निम्न लिंक पर क्लिक करें -- Click Here


* 1 माह के लिए Rs 1000.00 / 1 वर्ष के लिए Rs 10,000.00

Contact us

Check Also

36 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களிலிருந்தும் 1.76 கோடிக்கும் அதிகமான பள்ளி மாணவர்கள் வீரக்கதை 4.0 திட்டத்தில் பங்கேற்றனர்

36 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களைச் சேர்ந்த 1.76 கோடிக்கும் அதிகமான பள்ளி மாணவர்கள் வீரக்கதை 4.0 திட்டத்தில் ஆர்வத்துடன் …