शुक्रवार, नवंबर 22 2024 | 03:01:00 PM
Breaking News
Home / Choose Language / Tamil / வாகனங்களின் வேகத்தை அளவிடுவதற்கான ரேடார் கருவியானது சட்டமுறை எடையளவு விதிகள்-2011-ல் சேர்ப்பு

வாகனங்களின் வேகத்தை அளவிடுவதற்கான ரேடார் கருவியானது சட்டமுறை எடையளவு விதிகள்-2011-ல் சேர்ப்பு

Follow us on:

நுகர்வோர் விவகாரத் துறையின் சட்டமுறை எடையியல் பிரிவானதூ அளவிடல் மற்றும் எடைகள், அளவீடுகளின் துல்லியம் ஆகியவற்றின் உத்தரவாதத்தை உறுதி செய்கிறது. வாகனங்களின் வேகத்தை அளவிடுவதற்கான ரேடார் கருவிகளுக்கான வரைவு விதிகள், பொது ஆலோசனைக்காக துறையின் இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளன.

இந்திய சட்ட அளவியல் நிறுவனம் (ஐ.ஐ.எல்.எம்), பிராந்திய குறிப்பு ஆய்வகங்கள் (ஆர்.ஆர்.எஸ்.எல்), உற்பத்தியாளர்கள் மற்றும் வி.சி.ஓ.க்களின் பிரதிநிதிகள் ஆகியோரைக் கொண்ட துறையால் அமைக்கப்பட்ட குழுவால் வரைவு விதிகள் வகுக்கப்பட்டன. பங்குதாரர்கள் வழங்கிய உள்ளீடுகளைக் கருத்தில் கொண்டும், பொதுமக்களின் கருத்துக்களைப் பெற்ற பின்னரும் வரைவு விதிகள் இறுதி செய்யப்பட்டன. ஆலோசனைகள் கவனமாக பரிசீலிக்கப்பட்டு விதிகள் விரைவில் அறிவிக்கை செய்யப்பட உள்ளன.

இந்த விதிகள் போக்குவரத்து வேக அளவீட்டில் துல்லியம், நம்பகத்தன்மை மற்றும் தரப்படுத்தலை மேம்படுத்துவதுடன், சட்ட முறை எடையளவு விதிகளுக்கு இணங்குவதை உறுதி செய்யும். இந்த விதிகள் சாலைகளில் போக்குவரத்து வேகத்தை அளவிடுவதற்கான மைக்ரோவேவ் டாப்ளர் ரேடார் கருவிகளுக்கு பொருந்தும். அவை சுருக்கமாக “ரேடார்” என்று அழைக்கப்படுகின்றன. மனிதர்களின் பாதுகாப்பிற்காக அத்தகைய உபகரணங்கள் அனைத்தும் சரிபார்க்கப்பட்டு முத்திரையிடப்பட வேண்டும் என்று விதிகள் கூறுகின்றன.

முத்திரையிடப்பட்ட மற்றும் சரிபார்க்கப்பட்ட ரேடார் உபகரணங்கள் தொழில்துறை தரநிலைகள் மற்றும் விவரக்குறிப்புகளை பூர்த்தி செய்வதை உறுதி செய்யும். இது செயலிழப்புகள் அல்லது பிழைகளின் அபாயத்தைக் குறைக்கும்.  பொதுமக்களின் நம்பிக்கையை உருவாக்க விபத்துக்களைத் தடுப்பதற்கான போக்குவரத்து அமலாக்கம், சாலைகளின் தேய்மானம் போன்ற பயன்பாடுகளுக்கு இந்த துல்லியம் முக்கியமானது.  துல்லியமற்ற வேக அளவீடுகள் வேக மீறல்களை அடையாளம் காணத் தவறுவதால் சாலை பாதுகாப்பு கேள்விக்குள்ளாகிறது. பாதுகாப்பற்ற ஓட்டுநர் நடத்தையைத் தடுப்பதன் மூலமும் சாலை பாதுகாப்பை மேம்படுத்தலாம்.

சரிபார்க்கப்பட்ட ரேடார் வேக துப்பாக்கிகள் வாகன வேகத்தை துல்லியமாக அளவிடுவதன் மூலம் மீறல்களை அடையாளம் காணும்.  இதனால் போக்குவரத்து சட்டங்கள் திறம்பட செயல்படுத்தப்படும் என்பதால்  பொதுமக்கள் பயனடைவார்கள்.   சரிபார்க்கப்பட்ட ரேடார் உபகரணங்கள் வேக வரம்புகளை திறம்பட கண்காணிக்க உதவும். இது வேகம் தொடர்பான விபத்துக்களின் நிகழ்வுகளைக் குறைப்பதுடன் சாலை பாதுகாப்பை அதிகரிக்கிறது.

मित्रों,
मातृभूमि समाचार का उद्देश्य मीडिया जगत का ऐसा उपकरण बनाना है, जिसके माध्यम से हम व्यवसायिक मीडिया जगत और पत्रकारिता के सिद्धांतों में समन्वय स्थापित कर सकें। इस उद्देश्य की पूर्ति के लिए हमें आपका सहयोग चाहिए है। कृपया इस हेतु हमें दान देकर सहयोग प्रदान करने की कृपा करें। हमें दान करने के लिए निम्न लिंक पर क्लिक करें -- Click Here


* 1 माह के लिए Rs 1000.00 / 1 वर्ष के लिए Rs 10,000.00

Contact us

Check Also

வணிக நிலக்கரி சுரங்க ஏலத்தின் 10-வது சுற்று முதல் நாளில் ஐந்து நிலக்கரி சுரங்கங்கள் ஏலத்திற்கு விடப்பட்டது

மத்திய நிலக்கரி அமைச்சகம் 2024 ஜூன் 21 அன்று 10-வது சுற்றின் கீழ் வணிக சுரங்கத்திற்கான நிலக்கரி சுரங்கங்களின் ஏலத்தை தொடங்கியது. ஏலங்கள் மதிப்பீடு செய்யப்பட்ட பிறகு, ஒன்பது …