ரஷ்ய அதிபர் மேதகு திரு. விளாடிமிர் புட்டின் விடுத்த அழைப்பின் பேரில், 16-வது பிரிக்ஸ் உச்சிமாநாட்டில் பங்கேற்பதற்காக, இரண்டு நாள் பயணமாக நான் இன்று கசான் புறப்படுகிறேன்.
பிரிக்ஸ் அமைப்பு நாடுகளுக்கு இடையேயான நெருங்கிய ஒத்துழைப்பை இந்தியா மதிக்கிறது. உலகளாவிய வளர்ச்சித் திட்டம், சீர்திருத்தப்பட்ட பன்முகத்தன்மை, பருவநிலை மாற்றம், பொருளாதார ஒத்துழைப்பு, நிலைமைக்குத் தக்கபடி தகவமைத்துக் கொள்ளக்கூடிய விநியோகச் சங்கிலிகளை உருவாக்குதல், கலாச்சாரம் மற்றும் மக்களுக்கு இடையேயான இணைப்பை ஊக்குவித்தல் உள்ளிட்ட பல்வேறு விஷயங்கள் தொடர்பான பிரச்சினைகள் குறித்த கலந்துரையாடல் மற்றும் விவாதத்திற்கான முக்கியமான தளமாக இந்த பிரிக்ஸ் மாநாடு உருவெடுத்துள்ளது. கடந்த ஆண்டு புதிய உறுப்பினர்களின் சேர்க்கையுடன் பிரிக்ஸ் அமைப்பு விரிவாக்கப்பட்டது. இந்த விரிவாக்கம் அனைவரையும் உள்ளடக்கும் தன்மையால் ஏற்பட்டது ஆகும். உலகளாவிய நன்மைக்கான செயல்திட்டமும் சேர்க்கப்பட்டுள்ளது.
மாஸ்கோவில் 2024 ஜூலையில் நடைபெற்ற வருடாந்திர உச்சிமாநாட்டின் அடிப்படையில், கசான் நகருக்கான எனது பயணம் இந்தியா மற்றும் ரஷ்யாவுக்கு இடையேயான சிறப்பு மற்றும் முன்னுரிமை பாதுகாப்பு கூட்டாண்மையை மேலும் வலுப்படுத்தும்.
பிரிக்ஸ் அமைப்பின் மற்ற தலைவர்களையும் சந்திக்க ஆவலாக உள்ளேன்.