शुक्रवार, नवंबर 22 2024 | 01:43:54 PM
Breaking News
Home / Choose Language / Tamil / வணிக நிலக்கரி சுரங்க ஏலத்தின் 10-வது சுற்று முதல் நாளில் ஐந்து நிலக்கரி சுரங்கங்கள் ஏலத்திற்கு விடப்பட்டது

வணிக நிலக்கரி சுரங்க ஏலத்தின் 10-வது சுற்று முதல் நாளில் ஐந்து நிலக்கரி சுரங்கங்கள் ஏலத்திற்கு விடப்பட்டது

Follow us on:

மத்திய நிலக்கரி அமைச்சகம் 2024 ஜூன் 21 அன்று 10-வது சுற்றின் கீழ் வணிக சுரங்கத்திற்கான நிலக்கரி சுரங்கங்களின் ஏலத்தை தொடங்கியது. ஏலங்கள் மதிப்பீடு செய்யப்பட்ட பிறகு, ஒன்பது சுரங்கங்களுக்கான முன்னோக்கு மின்னணு ஏலம் 21.11.2024 முதல் தொடங்கியது.

முதல் நாளில், 5 நிலக்கரி சுரங்கங்கள் ஏலத்திற்கு விடப்பட்டன.ஐந்து நிலக்கரி சுரங்கங்களில் ஒன்று முழுமையாக ஆராயப்பட்ட நிலக்கரி சுரங்கமாகும், 4 நிலக்கரி சுரங்கங்கள் ஓரளவு ஆராயப்பட்ட நிலக்கரி சுரங்கங்கள். இந்த 5 நிலக்கரி சுரங்கங்களின் மொத்த புவியியல் இருப்பு 2,630.77 மில்லியன் டன்களாகும். இந்த நிலக்கரி சுரங்கங்களுக்கான ஒட்டுமொத்த உச்ச மதிப்பிடப்பட்ட திறன் (PRC) ஆண்டுக்கு 12.00 MT ஆகும். முதல் நாள் ஏலத்தின் முடிவில் ஒடிசாவில் நியு பத்ராபரா தெற்கு சுரங்கத்தை நெய்வேலி என்எல்சி  இந்தியா நிறுவனம் ஏலத்திற்கு எடுக்க விருப்பம் தெரிவித்துள்ளது.

இதேபோன்று மத்தியப்பிரதேசத்தின் மார்வதோலா தெற்கு சராய் கிழக்கு (தெற்கு), ஜார்க்கண்டின் கவா (கிழக்கு) ஒடிசாவின் பர்தாப் சுரங்கங்களை  ஏலத்தில் எடுக்கவும் 4 நிறுவனங்கள் விண்ணப்பித்துள்ளன.

இந்த நிலக்கரி சுரங்கங்கள் செயல்பாட்டுக்கு வரும்போது இந்த நிலக்கரி சுரங்கங்களின் பி.ஆர்.சி.யில் கணக்கிடப்பட்ட ~ரூ.1106.91 கோடி ஆண்டு வருவாயை உருவாக்கும் (பகுதியளவு ஆராயப்பட்ட நிலக்கரி சுரங்கங்கள் நீங்கலாக). இந்த சுரங்கங்கள் ~ரூ.1800.00 கோடி மூலதன முதலீட்டை ஈர்ப்பதுடன், 16,224 பேருக்கு வேலைவாய்ப்பை வழங்கும்.

मित्रों,
मातृभूमि समाचार का उद्देश्य मीडिया जगत का ऐसा उपकरण बनाना है, जिसके माध्यम से हम व्यवसायिक मीडिया जगत और पत्रकारिता के सिद्धांतों में समन्वय स्थापित कर सकें। इस उद्देश्य की पूर्ति के लिए हमें आपका सहयोग चाहिए है। कृपया इस हेतु हमें दान देकर सहयोग प्रदान करने की कृपा करें। हमें दान करने के लिए निम्न लिंक पर क्लिक करें -- Click Here


* 1 माह के लिए Rs 1000.00 / 1 वर्ष के लिए Rs 10,000.00

Contact us

Check Also

2-வது இந்தியா-கரிகாம் உச்சிமாநாட்டில் பிரதமர் ஆற்றிய நிறைவுரை

மேதகு தலைவர்களே, உங்கள் அனைவரின் மதிப்புமிக்க ஆலோசனைகளையும், நேர்மறையான எண்ணங்களையும் நான் வரவேற்கிறேன். இந்தியாவின் முன்மொழிவுகளுக்கு மதிப்பளித்து, எனது குழுவினர் …