शुक्रवार, दिसंबर 27 2024 | 01:34:57 PM
Breaking News
Home / अन्य समाचार / மாநில மொழிகளை ஊக்குவித்தல்

மாநில மொழிகளை ஊக்குவித்தல்

Follow us on:

மாநில மொழிகள், பாரம்பரிய கலை வடிவங்கள், அழிவின் அபாயத்தில் உள்ள நிகழ்த்துக் கலைகள் உள்ளிட்ட இந்தியாவின் வளமான கலாச்சார பாரம்பரியத்தை பாதுகாத்தல், மேம்படுத்துதல் ஆகியவற்றிற்கு கலாச்சார அமைச்சகம் உறுதிபூண்டுள்ளது. அதன் தன்னாட்சி அமைப்புகள் மற்றும் மண்டல கலாச்சார மையங்கள் மூலம் பல முயற்சிகள் அமைச்சகத்தால் மேற்கொள்ளப்படுகின்றன.

அங்கீகரிக்கப்பட்ட 24 மொழிகள், பல்வேறு அங்கீகரிக்கப்படாத மற்றும் பழங்குடியினர்  மொழிகளில் இலக்கியத்தை மேம்படுத்துவதற்காக மொழி மாநாடுகளை ஏற்பாடு செய்வதன் மூலமும், ஹரியான்வி, கோஷாலி-சம்பல்புரி, பைட், மகஹி, துளு, குருக், லடாக்கி, ஹல்பி, சௌராஷ்டிரா, குமாவுனி, பில்லி, வார்லி, பஞ்சாரா / லம்பாடி, காசி, மிசிங், கொடவா, சக்மா, ராஜ்பன்ஷி, அவதி, புந்தேலி, கார்வாலி, கச்சி, ஹிமாச்சல், ஆவோ, கர்பி, அங்காமி, கோண்டி, ஹோ, சத்தீஸ்கரி, கோஜ்ரி, போஜ்புரி, அஹிரானி, லெப்சா, முண்டாரி, காரோ, பில்லி, குய், காசி, மிசோ, பஹாரி, கோக்போரோக் போன்ற அங்கீகரிக்கப்படாத மொழிகளுக்கான பங்களிப்புக்காக அறிஞர்களுக்கு விருது வழங்குவதன் மூலமும் சாகித்ய அகாதமி மேம்பாட்டுப் பணிகளை செய்கிறது.

சங்கீத நாடக அகாடமி , லலித் கலா அகாடமி ஆகியவை  பயிலரங்குகள், கண்காட்சிகளை ஏற்பாடு செய்வதன் மூலமும், பிராந்திய கலை மற்றும் திறமைகளை வெளிப்படுத்த நிகழ்த்துக் கலை அருங்காட்சியகம் மற்றும் பாரி திட்டம் போன்ற தளங்களை உருவாக்குவதன் மூலமும் அழியும் நிலையில் உள்ள நிகழ்த்துக் கலைகள் மற்றும் காட்சிக் கலைகளைப் பாதுகாப்பதற்கான முயற்சிகளை மேற்கொள்கின்றன.

திரைப்படங்கள், நூல்கள், டிஜிட்டல் காப்பகங்கள் மூலம் அழியும் நிலையில் உள்ள மொழிகள் மற்றும் கலை வடிவங்களை ஆவணப்படுத்துவதில் இந்திரா காந்தி தேசிய கலை மையம்  கவனம் செலுத்துகிறது. இந்திய அறிவுசார் அமைப்புகளின் பரந்த உள்ளாற்றலை வெளிக்கொணரவும், அறிஞர்கள், ஆராய்ச்சியாளர்கள் மற்றும் பொதுமக்கள் அரிய கையெழுத்துப் பிரதிகளை அணுகவும் கையெழுத்துப் பிரதிகளைப் பாதுகாக்கும் பணிகளை தேசிய சுவடிக் குழுமம் மேற்கொண்டு வருகிறது.

புகழ்பெற்ற குருக்களின் கீழ் சீடர்களுக்கு பயிற்சி அளிக்கும் குரு-சிஷ்ய பரம்பரை மற்றும் இளம் திறமைகளை ஊக்குவிக்க இளம் கலைஞர்கள் விருது போன்ற திட்டங்கள் மூலம் அரிய மற்றும் மறைந்து வரும் கலை வடிவங்களை புதுப்பிப்பதில் மண்டல கலாச்சார மையங்கள்  முக்கியப்  பங்கு வகிக்கின்றன.

மக்களவையில் இன்று கேள்வி ஒன்றுக்கு எழுத்து மூலம் அளித்த பதிலில் மத்திய கலாச்சாரம் மற்றும் சுற்றுலாத்துறை அமைச்சர் திரு கஜேந்திர சிங் ஷெகாவத் இந்தத் தகவலைத் தெரிவித்தார்.

मित्रों,
मातृभूमि समाचार का उद्देश्य मीडिया जगत का ऐसा उपकरण बनाना है, जिसके माध्यम से हम व्यवसायिक मीडिया जगत और पत्रकारिता के सिद्धांतों में समन्वय स्थापित कर सकें। इस उद्देश्य की पूर्ति के लिए हमें आपका सहयोग चाहिए है। कृपया इस हेतु हमें दान देकर सहयोग प्रदान करने की कृपा करें। हमें दान करने के लिए निम्न लिंक पर क्लिक करें -- Click Here


* 1 माह के लिए Rs 1000.00 / 1 वर्ष के लिए Rs 10,000.00

Contact us

Check Also

ઇન્સ્ટિટ્યૂટ ઓફ એરોસ્પેસ મેડિસિન ઇન્ડિયન સોસાયટી ઓફ એરોસ્પેસ મેડિસિન (આઇએસએએમ)ની 63મી વાર્ષિક પરિષદનું આયોજન કરશે

ઇન્ડિયન સોસાયટી ઓફ એરોસ્પેસ મેડિસિન (આઇએસએએમ) 05થી 07 ડિસેમ્બર 2024 દરમિયાન ઇન્સ્ટિટ્યૂટ ઓફ એરોસ્પેસ મેડિસિન (આઇએએમ), …