தொலைத்தொடர்பு சேவை வழங்கும் நிறுவனங்களின் வட்ட வாரியான கைபேசி பயனர்கள் பட்டியலை இந்திய தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணையம் அவ்வப்போது சேகரித்து வெளியிடுகின்றது. பி.எஸ்.என்.எல் வைஃபை சந்தாதாரர்களின் விவரங்களும் வெளியிடப்படுகின்றன.
பி.எஸ்.என்.எல் நிறுவனத்தின் தொலைத் தொடர்பு கோபுரங்களின் எண்ணிக்கை 67,340 ஆகும். 12,502 தொலைத் தொடர்பு கோபுரங்கள் தனியார் தொலைத் தொடர்பு சேவை வழங்குநர்களுக்கு குத்தகைக்கு விடப்பட்டுள்ளது.
தற்சார்பு இந்தியா முயற்சிக்கு இணங்க, பிஎஸ்என்எல் இந்தியா முழுவதும் சேவை வழங்க உள்நாட்டில் உருவாக்கப்பட்ட 4 ஜி தளங்களுக்கான பணி ஆணைகளை வைத்துள்ளது. 4ஜி உபகரணங்களின் விநியோகம் 2023 செப்டம்பர் முதல் தொடங்கியது. 31.10.2024 நிலவரப்படி, மொத்தம் 50,708 4ஜி தளங்கள் நிறுவப்பட்டுள்ளன. 41,957 தளங்கள் தொடர்பான பணிகள் மேற்கொள்ளப்படுகின்றன. 4ஜி தளங்கள் 5ஜி-க்கு வசதியாக மேம்படுத்தக்கூடிய தன்மை கொண்டவை.
மக்களவையில் இன்று கேள்வி ஒன்றுக்கு எழுத்து மூலம் அளித்த பதிலில் தகவல் தொடர்புத் துறை இணையமைச்சர் திரு பெம்மசானி சந்திரசேகர் இந்தத் தகவலைத் தெரிவித்துள்ளார்.