புதிய தொலைத் தொடர்புக் கொள்கை 1999-ம் ஆண்டில், உலகளாவிய சேவை கடப்பாட்டு நிதியின் கீழ், அனைத்து மக்களுக்கும் குறைந்த மற்றும் நியாயமான கட்டணத்தில் அடிப்படை தொலைத் தொடர்பு சேவைகளுக்கான அணுகலை வழங்குவதற்கான தனது உறுதிப்பாட்டை அரசு வெளிப்படுத்தியது. டிஜிட்டல் பாரத் நிதியம் இந்திய தந்தி (திருத்தம்) சட்டம், 2003-ன் கீழ் 01.04.2002 முதல் நிறுவப்பட்டது. ‘தொலைத்தொடர்புச் சட்டம், 2023-ன் படி, உலகளாவிய சேவை கடமை நிதியம், டிஜிட்டல் பாரத் நிதியமாக மாறியுள்ளது. பின்தங்கிய கிராமப்புற, தொலைதூர மற்றும் நகர்ப்புற பகுதிகளில் தொலைத்தொடர்பு சேவையின் அணுகல் மற்றும் விநியோகத்தை ஊக்குவிப்பதன் மூலம் உலகளாவிய சேவையை ஆதரிக்க டிஜிட்டல் பாரத் நிதியம் செயல்படுத்தப்படுகிறது.
கடந்த ஐந்து நிதியாண்டுகளில் (2019-20 முதல் 2023-24 வரை), மொத்தம் 5,262 கோபுரங்கள் நிறுவப்பட்டு, ரூ.8,311 கோடி செலவிடப்பட்டுள்ளது. இதில் உத்தரபிரதேசத்திற்கு வழங்கப்பட்ட ரூ.144 கோடி உள்ளடங்கும். கடந்த ஐந்து ஆண்டு காலகட்டத்தில் உலகளாவிய சேவை கடப்பாட்டு நிதியத்திலிருந்து மேற்கொண்ட செலவுத் தொகை குறித்த மாநில, யூனியன் பிரதேச வாரியான விவரங்களை யுஎஸ்ஓஎஃப் இணையதளத்தில் (httpsusof.gov.in) காணலாம்.
மாநிலங்களவையில் இன்று கேள்வி ஒன்றுக்கு எழுத்து மூலம் அளித்த பதிலில் தகவல் தொடர்புத் துறை இணையமைச்சர் டாக்டர் பெம்மசானி சந்திரசேகர் இந்தத் தகவலைத் தெரிவித்துள்ளார்.
Matribhumisamachar


