बुधवार, अक्तूबर 30 2024 | 04:59:41 PM
Breaking News
Home / Choose Language / tamil / கர்மயோகி வாரமும் கர்மயோகி இயக்கமும் – இந்தியாவின் குடிமைப் பணி சேவைகளின் சூழல்களைச் சிறப்பாக மாற்றி அமைக்கின்றன

கர்மயோகி வாரமும் கர்மயோகி இயக்கமும் – இந்தியாவின் குடிமைப் பணி சேவைகளின் சூழல்களைச் சிறப்பாக மாற்றி அமைக்கின்றன

Follow us on:

 இந்தியாவின் குடிமைப் பணிகளை நவீனமயமாக்குவதற்கான ஒரு முக்கிய முயற்சியாக, பிரதமர் திரு நரேந்திர மோடி 2024 அக்டோபர் 19 அன்று புதுதில்லியில் உள்ள டாக்டர் அம்பேத்கர் சர்வதேச மையத்தில் “கர்மயோகி வாரம்” – தேசிய கற்றல் வாரத்தைத் தொடங்கி வைத்தார். தொடர்ச்சியான கற்றல், திறன் வளர்ப்பு கலாச்சாரத்தை அடைவதற்கு அரசு ஊழியர்களை ஊக்குவித்து உற்சாகப்படுத்தும் ஒரு முயற்சியாக இது உள்ளது. மேலும் இது நமது தேசிய சேவை இலக்குகளை மறுசீரமைப்பதற்கான தளமாகவும் செயல்படும். 30 லட்சத்துக்கும் மேற்பட்ட மத்திய அரசு ஊழியர்களுக்கு வாழ்நாள் முழுவதும் கற்றல், சுய முன்னேற்றத்திற்கான உறுதிப்பாட்டை ஊக்குவிப்பதன் மூலம் ‘ஒரே அரசு’ என்ற பார்வையை ஏற்படுத்துவதை இந்த வாரம் நோக்கமாகக் கொண்டுள்ளது.

கர்மயோகி வாரம்: வாழ்நாள் முழுவதும் கற்றலுக்கான அர்ப்பணிப்பு

2025 அக்டோபர் 19 முதல் 25, 2024 வரை ஒரு வார காலம் கர்மயோகி வாரம் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்ட நிலையில் இப்போது அக்டோபர்  27 நீட்டிக்கப்பட்டுள்ளது. இது அரசு ஊழியர்களுக்கான தொடர்ச்சியான கற்றலின் வருடாந்திர கொண்டாட்டமாக கருதப்படுகிறது.

இந்த முயற்சியின் ஒரு பகுதியாக, கர்மயோகி வாரத்தில் பங்கேற்கும் ஒவ்வொரு பங்கேற்பாளரும் தேசிய கற்றல் வாரத்தில் குறைந்தபட்சம் 4 மணிநேர திறன் கற்றலை மேற்கொள்வார்கள்.

இந்த இயக்கம் ஒரு வலுவான டிஜிட்டல் சூழல் அமைப்பை நிறுவுவதன் மூலம் இந்திய குடிமைப் பணி சேவைகளில் திறன் மேம்பாட்டை  அதிகரிக்கும்.

சீர்திருத்தத்தின் அவசியம்:

கொள்கைகளை வகுப்பதிலும், அவற்றை விரைவாக செயல்படுத்துவதிலும் அரசு ஊழியர்கள் முக்கிய பங்கு வகிக்கின்றனர். எனினும், தற்போதைய குடிமைப் பணிகள் திறன் மேம்பாட்டு சூழல், சில சவால்களை எதிர்கொண்டுள்ளன.

இந்த பணி ஒரு விதிகள் அடிப்படையிலான மனிதவள மேலாண்மை அமைப்பிலிருந்து பாத்திரங்கள் அடிப்படையிலான மனிதவள மேலாண்மை அமைப்புக்கு ஒரு இயக்கத்தை ஆதரிக்கிறது .

கர்மயோகி இயக்கத்தின் மையமாக ஐஜிஓடி (iGOT-ஒருங்கிணைந்த அரசு ஆன்லைன் பயிற்சி) என்ற தளம் உள்ளது. இது பல்வேறு தலைப்புகளில் 1,400 க்கும் மேற்பட்ட படிப்புகளின் இணையதள களஞ்சியத்தை வழங்குகிறது.

 கர்மயோகி இயக்கம். வழங்கிய கட்டமைக்கப்பட்ட, நிலையான கற்றல் சசூழல் அமைப்பு இந்திய அரசின் செயல்திறனையிம் பொறுப்புணர்வையிம் மேம்படுத்தி, 2047 க்குள் “வளர்ச்சி அடைந்த பாரதம்” என்பதை நோக்கி நாட்டை வழிநடத்தும்.

मित्रों,
मातृभूमि समाचार का उद्देश्य मीडिया जगत का ऐसा उपकरण बनाना है, जिसके माध्यम से हम व्यवसायिक मीडिया जगत और पत्रकारिता के सिद्धांतों में समन्वय स्थापित कर सकें। इस उद्देश्य की पूर्ति के लिए हमें आपका सहयोग चाहिए है। कृपया इस हेतु हमें दान देकर सहयोग प्रदान करने की कृपा करें। हमें दान करने के लिए निम्न लिंक पर क्लिक करें -- Click Here


* 1 माह के लिए Rs 1000.00 / 1 वर्ष के लिए Rs 10,000.00

Contact us

Check Also

வருமானவரிப் பிடித்தம் குறித்த விழிப்புணர்வுக் கருத்தரங்கம் சென்னையில் நடைபெற்றது

சென்னை சரகம்-3 வருமானவரி கூடுதல் ஆணையர் திரு எம் கார்த்திகேயன் வழிகாட்டுதலின் அடிப்படையில், அம்பத்தூர் தொழிற்பேட்டை உற்பத்தியாளர் சங்கத்தில் அமைந்துள்ள கருத்தரங்கக் கூடத்தில், வருமானவரி பிடித்தம் செய்பவர்களின் நலன் கருதி, வருமானவரிப் பிடித்தம் குறித்த விழிப்புணர்வுக் கருத்தரங்கம் நடைபெற்றது. இந்த வருமானவரி பிடித்தம் குறித்த கருத்தரங்கத்தில்   70-க்கும் மேற்பட்ட பல்வேறு தொழில் செய்யும் வருமானவரி பிடித்தம் செய்பவர்கள் கலந்து கொண்டு பயன் பெற்றனர். ஏஐஇஎம்ஏ (AIEMA) சங்க  துணைத் தலைவர் திரு ரவிச்சந்திரன் வரவேற்புரை ஆற்றினார். வருமானவரி துணை ஆணையர் திரு  ராஜாமனோகர்  தலைமை ஏற்று கருத்துரை வழங்கினார். அவர் தமது உரையில், வருமானவரி பிடித்தம் செய்பவர்கள் , முறையாக வருமான வரிப்பிடித்தம் / வரிவசூல் செய்வதன் அடிப்படை கடமை, வரிப்பிடித்தம் செய்த தொகையினை, காலத்தே  மத்திய அரசின் கணக்கில் செலுத்த வேண்டிய கட்டாயம், காலாண்டு படிவங்களை பிழையின்றி காலத்திற்குள் தாக்கல் செய்யவேண்டிய முக்கியத்துவம், வரிப்பிடித்தம் செய்யப்பட்டவர்களுக்கு சான்றிதழ் வழங்கவேண்டிய அவசியம் போன்றவை குறித்து தெளிவாக விளக்கினார். வருமானவரி வரி அலுவலர்கள் திரு ராஜாராமன், திரு தீபன் குமார், திரு செந்தில் குமார்,  வரிப்பிடித்தம் குறித்த தலைப்புகளில் எளிய முறையில் விளக்கினர். வருமானவரித் துறையால், வருமானவரி பிடித்தம் செய்பவர்களுக்கு உதவும் பொருட்டு முன்னெடுக்கப்பட்ட பல்வேறு வகையான நடவடிக்கைகள், கருத்தரங்கத்தில் பங்குபெற்றவர்களுக்கு பகிரப்பட்டது.