திரு அசோக் குமார் கலுராம் மீனா, 31.10.2024 அன்று புதுதில்லியின் சி.ஜி.ஓ வளாகத்தில் ஜல் சக்தி அமைச்சகத்தின் குடிநீர் மற்றும் துப்புரவுத் துறையின் செயலாளராக பொறுப்பேற்றார். இவர், கான்பூர் இந்திய தொழில்நுட்பக் கழகத்தில் (ஐ.ஐ.டி) கணினி அறிவியலில் பி.டெக் மற்றும் அண்ணாமலை பல்கலைக்கழகத்தில் பொருளாதாரத்தில் முதுகலை பட்டம் பெற்றுள்ளார்.
டியூக் பல்கலைக்கழகத்தின் சான்ஃபோர்ட் ஸ்கூல் ஆஃப் பப்ளிக் பாலிசியில் பொது நிதியில் சர்வதேச மேம்பாட்டுக் கொள்கையில் (எம்.ஐ.டி.பி) முதுகலைப் பட்டம் பெற்றார்.
டி.டி.டபிள்யூ.எஸ்ஸில் சிறப்பு பணி அதிகாரியாக 2 மாதங்களுக்கும் மேலாக பணியாற்றிய திரு. மீனா, ஜல் சக்தி அமைச்சகத்தின் குடிநீர் மற்றும் துப்புரவுத் துறையின் செயலாளராக தமது புதிய பணியைத் தொடங்குகிறார்.இதற்கு முன், அவர் 29 ஆகஸ்ட் 2022 முதல் 16 ஆகஸ்ட் 2024 வரை இந்திய உணவுக் கழகத்தின் தலைவர் மற்றும் நிர்வாக இயக்குநராக பணியாற்றினார். மேலும் பல்வேறு துறைகளின் பொறுப்புகளிலும் அவர் பணியாற்றியுள்ளார்.
திரு. மீனா ஒடிசா மாநிலத்தில் நிதி, பஞ்சாயத்து ராஜ் மற்றும் ஊரக வளர்ச்சி துறை முதன்மைச் செயலாளர் உட்பட பல்வேறு பதவிகளில் பொறுப்பு வகித்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.