அஞ்சல் துறை அதன் நாடு தழுவிய வலைப்பின்னலில் பல நடவடிக்கைகளை மேற்கொண்டதுடன், நிர்ணயிக்கப்பட்ட காலத்திற்குள், கொடுக்கப்பட்ட அளவுருக்களில் அதன் இலக்குகளையும் எட்டியுள்ளது. சிறப்பு இயக்கம் 4.0-ன் கீழ், தூய்மை இந்தியாவுக்கான தேசிய இயக்கப் பணிகள் மேற்கொள்ளப்பட்டன.செப்டம்பர் 15 முதல் 30, 2024 வரை ஆயத்த நடவடிக்கைகளுடன் தொடங்கி, அக்டோபர் 2 முதல் 31 வரை இந்த இயக்கம் செயல்படுத்தப்பட்டது. அப்போது அஞ்சல் துறை அசல் இலக்கான 1 லட்சத்தை தாண்டி, அனைத்து 1.65 லட்சம் நெட்வொர்க் தளங்களையும் உள்ளடக்கியது. இந்தப் பரவலான தூய்மை முன்முயற்சி நாடு முழுவதும் தொலைதூர மற்றும் கிராமப்புற இடங்களைச் சென்றடைவதை உறுதி செய்தது. சிறப்பு இயக்கம் மற்றும் தூய்மை இந்தியா இயக்கம் ஏற்கனவே சேர்க்கப்பட்டதைக் காட்டிலும், செறிவூட்டப்பட்ட மற்றும் நிறுவனமயமாக்கல் என்ற இலக்கை அடைய இத்துறை முயற்சித்ததால், இந்த அளவிலான திட்டம் சாத்தியமானது.
சிறப்பு இயக்கம் 4.0-ன் தொடக்கத்தில், அஞ்சல் துறை “தூய்மையே இயற்கை, கலாச்சாரத் தூய்மை” என்ற குறிக்கோளை ஏற்றுக்கொண்டு, தூய்மையை ஒரு முக்கிய மதிப்பாக வலியுறுத்தியது. இந்த குறிக்கோள், செறிவூட்டல், நிறுவனமயமாக்கல் மற்றும் உள்முகப்படுத்தல் ஆகிய நோக்கங்களுடன் ஒத்துப்போகிறது, தூய்மை இயக்கம் அதன் நெட்வொர்க்கின் ஒவ்வொரு மூலையையும் சென்றடைவதை உறுதி செய்வதற்காக துறையால் ஏற்றுக்கொள்ளப்படுகிறது, இது ஒரு உட்பொதிக்கப்பட்ட நடைமுறையாக மாறுகிறது. மேலும் தூய்மையின் நீடித்த கலாச்சாரத்தை வளர்க்கிறது.
இந்த அணுகுமுறையின் மூலம், இத்துறை பரவலான தூய்மையை அடைந்துள்ளது மட்டுமல்லாமல், தினசரி நடைமுறைகள் மற்றும் செயல்பாட்டு செயல்முறைகளில் தூய்மையை ஒரு மதிப்பாகவும் மேம்படுத்தியுள்ளது. இந்த கொள்கைகளில் கவனம் செலுத்துவதன் மூலம், இயக்கம் நிலையான மாற்றத்திற்கான அடித்தளத்தை உருவாக்கியுள்ளது. அதன் நடைமுறைகளை தேசிய நோக்கங்கள் மற்றும் சமூக எதிர்பார்ப்புகளுடன் சீரமைத்துள்ளது.
சிறப்பு முகாம் 4.0வின் சாதனைகள்:
326 மின் கோப்புகள் மூடப்பட்டன.
சுமார் ஒரு லட்சம் கோப்புகள் ஆய்வு செய்யப்பட்டு, 66,650 கோப்புகள் அகற்றப்பட்டுள்ளன.
அக்டோபர் 2024-ல் 1.65 லட்சம் தளங்கள் சுத்தம் செய்யப்பட்டன.
கழிவுகளை அப்புறப்படுத்துவதன் மூலம், சுமார் 69 லட்சம் ரூபாய் வருவாய் ஈட்டப்பட்டுள்ளது.
ஒரு லட்சத்துக்கும் மேற்பட்ட பொதுமக்களின் குறைகளுக்குத் தீர்வு காணப்பட்டுள்ளது.
சுமார் 40,600 சதுர அடி இடம் விடுவிக்கப்பட்டுள்ளது.
தொழிலாளர்களின் உற்சாக பங்கேற்புடன், இந்த இயக்கம் எதிர்கால முயற்சிகளை ஆதரிக்கும் பல நல்ல நடைமுறைகளையும் வளர்த்துள்ளது. இந்த வெற்றிகளை கட்டியெழுப்புவதற்கும், அனைத்து தபால் அலுவலகங்களிலும் ஒரு சுத்தமான மற்றும் நன்கு ஒழுங்கமைக்கப்பட்ட வலையமைப்பை பராமரிக்க ஊழியர்கள் மற்றும் குடிமக்களை ஈடுபடுத்துவதற்கும் தபால் துறை உறுதிபூண்டுள்ளது.