मंगलवार, नवंबर 05 2024 | 12:18:27 PM
Breaking News
Home / Choose Language / tamil / சர்வதேச சூரியசக்தி கூட்டமைப்பு அதன் ஆண்டு கூட்டத்தின் ஏழாவது அமர்வை 103 உறுப்பு நாடுகள், ஒப்பந்தத்தில் கையொப்பமிட்டுள்ள 17 நாடுகளின் பிரதிநிதிகளுடன் நடத்துகிறது

சர்வதேச சூரியசக்தி கூட்டமைப்பு அதன் ஆண்டு கூட்டத்தின் ஏழாவது அமர்வை 103 உறுப்பு நாடுகள், ஒப்பந்தத்தில் கையொப்பமிட்டுள்ள 17 நாடுகளின் பிரதிநிதிகளுடன் நடத்துகிறது

Follow us on:

சர்வதேச சூரியசக்தி கூட்டமைப்பில் ஏழாவது அமர்வு 29 நாடுகளைச் சேர்ந்த அமைச்சர்களுடன் தலைநகர் புதுதில்லியில் நடைபெற்று வருகிறது.

தொடக்க விழாவில் பேசிய மத்திய அரசின் புதிய மற்றும் புதுப்பிக்கத்தக்க எரிசக்தித் துறை அமைச்சர் திரு பிரல்ஹாத் ஜோஷி, “சர்வதேச சூரியசக்தி கூட்டமைப்பின் ஏழாவது அமர்வில் இன்று உங்கள் முன் நிற்பது எனக்குக் கிடைத்த மிகப் பெரிய கவுரவம் என்று குறிப்பிட்டார்.

உலகளாவிய எரிசக்தி எதிர்காலத்தை மாற்றியமைக்கும் நமது இயக்கத்தில்  தற்போது நாம் ஒரு முக்கிய திருப்புமுனையில் இருக்கிறோம். சூரிய சக்தி, ஒரு காலத்தில் வெறும் தொலைநோக்காக இருந்தது. இப்போது ஒரு சக்திவாய்ந்த அம்சமாக உள்ளது. இது உலகை தூய்மையான மற்றும் நிலையான பாதையை நோக்கி அழைத்துச் செல்கிறது. “120 உறுப்பு நாடுகள் மற்றும் கையொப்பமிட்ட நாடுகளின் கூட்டமைப்பு என்ற முறையில், ஆதாரங்களைத் திரட்டுவதிலும், உலகெங்கிலும், குறிப்பாக குறைந்த வளர்ச்சியடைந்த நாடுகள் மற்றும் சிறிய தீவுகள் வளரும் நாடுகள் ஆகியவற்றில் சூரிய சக்தி திட்டங்களை செயல்படுத்துவதற்கும் வாய்ப்புகளைத் திரட்டுவதில் சூர்ய கூட்டமைப்பின் முன்னணியில் உள்ளது. சர்வதேச சூரியசக்தி கூடமைப்பு, 27 செயல்விளக்கத் திட்டங்களில் 21-ஐ வெற்றிகரமாக நிறைவேற்றியுள்ளது என்பதை தெரிவிப்பதில் தான் பெருமிதம் கொள்வதாகவும் அமைச்சர் தெரிவித்தார்.

இது சூரியசக்தி பயன்பாட்டில் குறிப்பிடத்தக்க முன்னேற்றம் காணவும், உலகம் முழுவதும் நீடித்த வளர்ச்சிக்கு ஆதரவளிக்கவும் நமது கூட்டுத் திறனை வெளிப்படுத்துகிறது. இந்த வெற்றிகரமான திட்டங்கள் நமது பகிரப்பட்ட அர்ப்பணிப்புக்கு ஒரு சான்றாகும் என்றும் கூறினார். 11 செயல்விளக்கத் திட்டங்களையும், 7 ஸ்டார் மையங்களையும் இந்த நாட்டு மக்களுக்கு நான் பாராட்டி அர்ப்பணிக்கிறேன் என்று அவர் குறிப்பிட்டார்.

मित्रों,
मातृभूमि समाचार का उद्देश्य मीडिया जगत का ऐसा उपकरण बनाना है, जिसके माध्यम से हम व्यवसायिक मीडिया जगत और पत्रकारिता के सिद्धांतों में समन्वय स्थापित कर सकें। इस उद्देश्य की पूर्ति के लिए हमें आपका सहयोग चाहिए है। कृपया इस हेतु हमें दान देकर सहयोग प्रदान करने की कृपा करें। हमें दान करने के लिए निम्न लिंक पर क्लिक करें -- Click Here


* 1 माह के लिए Rs 1000.00 / 1 वर्ष के लिए Rs 10,000.00

Contact us

Check Also

மகாரத்னா பொதுத்துறை நிறுவனங்களான என்டிபிசி மற்றும் ஓஎன்ஜிசி இணைந்து ஒரு கூட்டு நிறுவனத்தை உருவாக்குகின்றன

மகாரத்னா பொதுத்துறை நிறுவனங்களான என்டிபிசி மற்றும் ஓஎன்ஜிசி ஆகியவை தங்கள் பசுமை எரிசக்தி துணை நிறுவனங்கள் (என்டிபிசி கிரீன் எனர்ஜி …