நிர்வாக சீர்திருத்தம், பொதுமக்கள் குறைதீர்ப்புத் துறையின் வழிகாட்டுதலின்படி, இளைஞர் நலன், விளையாட்டு அமைச்சகம் ஆகியவை 2024 அக்டோபர் 2 முதல் 31 வரை தூய்மை இயக்கத்தையும், நிலுவையில் உள்ள பணிகளை நிறைவு செய்வதற்கான சிறப்பு இயக்கம் 4.0-வையும் நடத்தியது. புதுதில்லியில் உள்ள அதன் அலுவலகங்களில் இந்த இயக்கம் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டது.
ஆயத்த கட்டத்தில், தேவையற்ற பொருட்களை அடையாளம் கண்டு, அவற்றை அகற்றுவதற்கான நடைமுறைகள் நிறைவு செய்யப்பட்டன.
செயல்பாட்டு கட்டத்தின் போது அனைத்து முக்கிய நிலுவை பணிகளும் விரைந்து மேற்கொள்ளப்பட்டு, நிலுவைகள் பெரிய அளவில் குறைக்கப்பட்டன.
மேலும், நாடு முழுவதும் உள்ள கடற்கரைகளை தூய்மைப்படுத்த சிறப்பு இயக்கமும் மேற்கொள்ளப்பட்டது. இளைஞர் நலன், விளையாட்டுத் துறை அமைச்சர் திரு மன்சுக் மாண்டவியா தலைமையில் குஜராத் மாநிலம் போர்பந்தர் கடற்கரையில் தூய்மை இயக்கம் மேற்கொள்ளப்பட்டது.
இந்த இயக்கத்தின் போது, மொத்தம் 6,22,469 மைபாரத் தன்னார்வலர்களின் பங்களிப்புடன் 700 கடற்கரை பகுதிகள் சுத்தம் செய்யப்பட்டன.
“தூய்மையே சேவை” இயக்கத்தின் போது, மைபாரத்தின் தன்னார்வலர்கள் 1,29,577 செயல்பாடுகளை மேற்கொண்டனர்.
விழிப்புணர்வு கூட்டங்கள், குழு விவாதங்கள் போன்றவையும் நடத்தப்பட்டன. இதன் கீழ் மொத்தம் 2608 நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. மொத்தத்தில், இத்துறையால் 1,29,577 செயல்பாடுகள் மேற்கொள்ளப்பட்டு, 15,82,359 கிலோ பிளாஸ்டிக் கழிவுகள் சேகரிக்கப்பட்டு, அகற்றப்பட்டன.