सोमवार, नवंबर 25 2024 | 07:41:54 PM
Breaking News
Home / Choose Language / Tamil / டிஜிட்டல் ஆயுள் சான்றிதழ் பிரச்சாரத்திற்காக இந்திய அஞ்சலக வங்கியுடன் இணைந்து செயல்படுகிறது ஓய்வூதியர்கள் நலத்துறை அமைச்சகம்

டிஜிட்டல் ஆயுள் சான்றிதழ் பிரச்சாரத்திற்காக இந்திய அஞ்சலக வங்கியுடன் இணைந்து செயல்படுகிறது ஓய்வூதியர்கள் நலத்துறை அமைச்சகம்

Follow us on:

இந்திய அஞ்சலக   வங்கியும், ஓய்வூதியர்கள் நலத்துறை அமைச்சகமும் இணைந்து 2024 நவம்பர் 1 முதல் நவம்பர் 30 வரை நாடு தழுவிய டிஜிட்டல் ஆயுள் சான்றிதழ்  (DLC 3.0) இயக்கத்தை நாட்டில் உள்ள 800 பெரிய மற்றும் சிறிய நகரங்களில் நடத்துகின்றன.

நாட்டில் டிஜிட்டல் முறையிலான முக அங்கீகார மற்றும் கைவிரல் ரேகை பதிவு ஆகியவற்றின் மூலம் தொலைதூர பகுதிகளில் உள்ள ஓய்வூதியர்கள் உட்பட அனைத்து ஓய்வூதியர்களுக்கும் இந்த வசதியை அறிமுகப்படுத்துவதே இதன் நோக்கமாகும். அவர்கள் வசிக்கும் இடங்களிலோ, அருகில் உள்ள டிஜிட்டல் ஆயுள் சான்றிதழ் முகாம்களிலோ எளிமையாக இந்த வசதியை இதன் மூலம் பெற முடியும்.

இதன் ஒருபகுதியாக ஓய்வூதியம், ஓய்வூதியர்கள் நலத்துறை, இந்திய அஞ்சலக வங்கியுடன் இணைந்து செயல்படுகிறது. அனைத்து ஓய்வூதியர்களும் முக்கியமாக கிராமங்களில் உள்ள ஓய்வூதியர்கள் சிரமமின்றி தபால்காரர் மூலம் தங்களின்  வீட்டிலேயோ அல்லது அருகில் உள்ள டிஜிட்டல் ஆயுள் சான்றிதழ் முகாம்களிலோ, முக அங்கீகாரம் அல்லது கைவிரல் ரேகை பதிவு மூலம் ஆயுள் சான்றிதழை சமர்ப்பிக்கலாம்.

இதைப்பற்றி அஞ்சல் துறை, சென்னை மத்திய கோட்ட கண்காணிப்பாளர், திருமதி சுவாதி மதுரிமா கூறுகையில், இந்த இயக்கம், ஓய்வூதியர்கள் நலத்துறை, தனித்துவ அடையாள அட்டை ஆணையம் ஆகியவற்றுடன் இணைந்து  மேற்கொள்ளப்படுகிறது என்றார்.

இந்திய அஞ்சலக வங்கி இல்லம்தேடி வங்கி சேவை மூலம் ஆயுள் சான்றிதழ் சமர்ப்பித்தல் சேவையை வழங்கி வருகிறது என்று அவர் குறிப்பிட்டார். இந்த சேவைக்கு கட்டணமாக ரூபாய் 70 மட்டும் வசூலிக்கப்படுகிறது என அவர் தெரிவித்தார்.

இந்த டிஜிட்டல் ஆயுள் சான்றிதழ் சேவையை பெறவிரும்பும் ஓய்வூதியர்கள் அருகில் உள்ள அஞ்சலகம் அல்லது தங்கள் பகுதி தபால்காரரை தொடர்பு கொள்ளலாம் என்றும் மேலும் https://ccc.cept.gov.in/ServiceRequest/request.aspx என்ற இணையதள முகவரி மூலம் அல்லது “Postinfo” செயலியை பதிவிறக்கம் செய்து சேவை கோரிக்கையை பதிவுசெய்யலாம் என்றும் அவர் தெரிவித்தார்.

மத்திய அரசு ஓய்வூதியர்கள் மட்டுமன்றி தொழிலாளர் வருங்கால வைப்புநிதி நிறுவனம் மூலம் ஓய்வூதியம் பெறுபவர்கள், மாநில அரசு ஓய்வூதியர்கள், ராணுவ ஓய்வூதியர்கள், இதர ஓய்வூதியர்கள் இந்த வசதியைப் பயன்படுத்தி, வீட்டில் இருந்த படியே தங்கள் பகுதி தபால்காரரிடம் கைவிரல் ரேகைபதிவு, முக அங்கீகாரம்  ஆகியவற்றின் மூலம் ஆயுள் சான்றிதழை சமர்ப்பித்து பயன் பெறுமாறு அஞ்சல்துறை கேட்டுக்கொண்டுள்ளது.

मित्रों,
मातृभूमि समाचार का उद्देश्य मीडिया जगत का ऐसा उपकरण बनाना है, जिसके माध्यम से हम व्यवसायिक मीडिया जगत और पत्रकारिता के सिद्धांतों में समन्वय स्थापित कर सकें। इस उद्देश्य की पूर्ति के लिए हमें आपका सहयोग चाहिए है। कृपया इस हेतु हमें दान देकर सहयोग प्रदान करने की कृपा करें। हमें दान करने के लिए निम्न लिंक पर क्लिक करें -- Click Here


* 1 माह के लिए Rs 1000.00 / 1 वर्ष के लिए Rs 10,000.00

Contact us

Check Also

மனதின் குரல் உரையில் லோத்தலின் கடல்சார் பாரம்பரிய வளாகத்தின் முக்கியத்துவத்தைப் பிரதமர் திரு நரேந்திர மோடி எடுத்துரைத்தார்

பிரதமர் திரு:நரேந்திர மோடி தமது மாதாந்திர வானொலி நிகழ்ச்சியான மனதின் குரலின் 116-வது நிகழ்ச்சியில் பேசியபோது, இந்தியாவின் கடல்சார் வரலாற்றில் லோத்தலின் முக்கியத்துவத்தை எடுத்துரைத்தார். ஹரப்பா நாகரிகத்துடன் தொடங்கிய இந்தியாவின் 5000 ஆண்டுகள் பழமையான கடல்சார் வரலாற்றை எடுத்துரைப்பதற்காக அர்ப்பணிக்கப்பட்ட ஒரு பெரிய அருங்காட்சியகமாக, கப்பல்  துறை அமைச்சகத்தின் கீழ் லோத்தல் இப்போது அமைக்கப்படுகிறது. இந்த முயற்சி குறித்து பேசிய பிரதமர் திரு நரேந்திர மோடி, “லோத்தல் இந்தியாவின் கடல்சார் திறமை, பழைய வர்த்தக திறன்கள் ஆகியவற்றின் பெருமைமிக்க சின்னமாகும். இங்கு உருவாக்கப்படும் அருங்காட்சியகம் நமது வளமான கடல் பாரம்பரியத்தை எடுத்துரைக்கும் உலகளாவிய மையமாக மாறும்.” என்றார். பிரிவினையில் உயிர் பிழைத்தவர்களின் அனுபவங்களை ஆவணப்படுத்தும் வாய்மொழி வரலாற்றுத் திட்டத்தை பிரதமர் மேலும் எடுத்துரைத்தார். பிரிவினையின் சில சாட்சிகள் மட்டுமே எஞ்சியுள்ள நிலையில், இந்த முயற்சி அவர்களின் அனுபவங்களை எதிர்கால சந்ததியினருக்கு கொண்டு செல்வதை நோக்கமாகக் கொண்டுள்ளது. பழங்காலப் பாரம்பரியத்தைப் பாதுகாப்பதற்கான இந்தியாவின் தற்போதைய இயக்கத்தின் ஒரு பகுதியாக, இந்த முயற்சிகளுக்கு பங்களிப்பதன் மூலமும், இந்தியாவின் கடல்- கலாச்சார வரலாற்றின் மரபு பாதுகாக்கப்படுவதை உறுதி செய்வதன் மூலமும் இதில் தீவிரமாக பங்கேற்க பிரதமர் திரு நரேந்திர மோடி மக்களை ஊக்குவித்துள்ளார்.