गुरुवार, नवंबर 07 2024 | 08:07:47 PM
Breaking News
Home / Choose Language / Tamil / சென்னை இந்திய தொழில்நுட்பக் கழகத்தின் ஆய்வு இந்தியாவிலும் வெளிநாடுகளிலும் செயற்கை நுண்ணறிவு நிர்வாகத்தில் ‘பங்கேற்பு அணுகுமுறை’க்கு அழைப்பு விடுத்துள்ளது

சென்னை இந்திய தொழில்நுட்பக் கழகத்தின் ஆய்வு இந்தியாவிலும் வெளிநாடுகளிலும் செயற்கை நுண்ணறிவு நிர்வாகத்தில் ‘பங்கேற்பு அணுகுமுறை’க்கு அழைப்பு விடுத்துள்ளது

Follow us on:

சென்னையில் உள்ள இந்திய தொழில்நுட்பக் கழக (ஐஐடி மெட்ராஸ்) ஆராய்ச்சியாளர்களும், தில்லியில் உள்ள சட்டக் கொள்கைக்கான விதி மையமும் இணைந்து வெளியிட்ட ஆய்வுக் கட்டுரையில், இந்தியாவிலும் வெளிநாடுகளிலும் செயற்கை நுண்ணறிவு மேம்பாடு மற்றும் நிர்வாகத்தில் பங்கேற்பு அணுகுமுறைக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

செயற்கை நுண்ணறிவு மேம்பாட்டில் பங்கேற்பு அணுகுமுறைக்கான அடிப்படைக் காரணங்களை இந்த ஆய்வு கண்டறிந்துள்ளது. செயற்கை நுண்ணறிவு வழிமுறையின் விளைவுகளை மேம்படுத்துவதுடன், செயல்முறையில் நேர்மையையும் ஏற்படுத்த முடியும். செயற்கை நுண்ணறிவு நிர்வாகத்தில் பங்கேற்பு அணுகுமுறையின் அவசியம் மற்றும் முக்கியத்துவம் குறித்து பல்துறை ஒத்துழைப்புடன் கூடிய அன்றாடப் பயன்பாட்டு அம்சங்களுடன் இந்த ஆய்வு சுட்டிக் காட்டியுள்ளது

செயற்கை நுண்ணறிவு மூலம் பல்வேறு களங்கள் தானியங்கி முறையில் இயங்குவதால், அவற்றின் அமைப்பு மற்றும் செயல்பாட்டை வெவ்வேறு விதமாக மாற்றிவிட முடியும். செயற்கை நுண்ணறிவு அமைப்புகளின் வடிவமைப்பு, செயல்படுத்துதல், மேற்பார்வை ஆகியவற்றை உருவாக்குவதில் சம்பந்தப்பட்ட அனைவரையும் ஈடுபடுத்துவதன் அவசியத்தை இந்த மாதிரி எடுத்துக்காட்டுவதாக அமைந்துள்ளது.

சென்னை இந்திய தொழில்நுட்பக் கழகத்தில் வாத்வானி தரவு அறிவியல் மற்றும் செயற்கை நுண்ணறிவுப் பள்ளியின் கீழ் இயங்கிவரும் பொறுப்புள்ள செயற்கை நுண்ணறிவுக்கான மையத்தின் ஆராய்ச்சியாளர்களும், சட்டம் மற்றும் தொழில்நுட்ப சிந்தனையாளர் குழுவினரான விதி லீகல் அமைப்பினரும் தொழில்நுட்ப வல்லுநர்கள், வழக்கறிஞர்கள், கொள்கை ஆராய்ச்சியாளர்களிடம் இரு பகுதிகளாக இந்த ஆய்வை நடத்தினர்.

இத்தகைய ஆய்வுகளின் அவசியத்தை எடுத்துரைத்த வாத்வானி தரவு அறிவியல் மற்றும் செயற்கை நுண்ணறிவுப் பள்ளியின் தலைவர் பேராசிரியர் பி.ரவீந்திரன், “பொது மற்றும் தனியார் துறைகளில் செயற்கை நுண்ணறிவுத் தொழில்நுட்பங்களை பரவலாக குறிப்பிடத்தக்க வகையில் ஏற்றுக் கொள்ளப்பட்டிருப்பதுடன், புதிய மற்றும் எதிர்பாராத வழிகளில் மக்களின் வாழ்க்கையில் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த சூழலில் அவற்றின் வடிவமைப்பு, மேம்பாடு, வரிசைப்படுத்துதல் எவ்வாறு நடைபெறுகிறது என்பதை ஆய்வு செய்வது அவசியமாகிறது. இந்த அமைப்புகளை வரிசைப்படுத்துவதன் மூலம் பாதிப்புக்கு உள்ளாவோர் எந்த அளவுக்க வளர்ச்சியடைகிறார்கள் என்பது குறித்து எந்த கருத்தும் இல்லை என்பதை இந்த ஆய்வு கண்டறிந்துள்ளது. இதனை ஒரு பெரிய இடைவெளியாகப் பார்க்கும்போது, அதிக பொறுப்புள்ள, பாதுகாப்பான, மக்களை மையமாகக் கொண்ட செயற்கை நுண்ணறிவு அமைப்புகளை உருவாக்குவதற்கும் பயன்படுத்துவதற்கும் பங்கேற்பு அணுகுமுறை நன்மையளிக்கும் என்பதை இந்த ஆய்வு சுட்டிக் காட்டுகிறது” எனக் குறிப்பிட்டார்.

मित्रों,
मातृभूमि समाचार का उद्देश्य मीडिया जगत का ऐसा उपकरण बनाना है, जिसके माध्यम से हम व्यवसायिक मीडिया जगत और पत्रकारिता के सिद्धांतों में समन्वय स्थापित कर सकें। इस उद्देश्य की पूर्ति के लिए हमें आपका सहयोग चाहिए है। कृपया इस हेतु हमें दान देकर सहयोग प्रदान करने की कृपा करें। हमें दान करने के लिए निम्न लिंक पर क्लिक करें -- Click Here


* 1 माह के लिए Rs 1000.00 / 1 वर्ष के लिए Rs 10,000.00

Contact us

Check Also

மகளிர் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டு அமைச்சகம் நவம்பரில் தத்தெடுப்பு விழிப்புணர்வு மாதத்தைக் கொண்டாடுகிறது

தத்தெடுப்பு விழிப்புணர்வு மாதம் என்பது ஒரு வருடாந்திர நிகழ்வாகும். மத்திய தத்தெடுப்பு வள ஆணையம் (CARA) மற்றும் அதன் அனைத்து பங்குதாரர்களும் …