गुरुवार, नवंबर 21 2024 | 11:35:28 PM
Breaking News
Home / Choose Language / Tamil / இந்திய கடற்படை வினாடி வினா – கண்கவர் இறுதி நிகழ்ச்சியுடன் நிறைவடைந்தது

இந்திய கடற்படை வினாடி வினா – கண்கவர் இறுதி நிகழ்ச்சியுடன் நிறைவடைந்தது

Follow us on:

கடற்படையின் திங்க் -2024 (THINQ 2024) என்ற வினாடி வினா போட்டியின் இறுதிப் போட்டியை இந்திய கடற்படை 2024 நவம்பர் 08 அன்று நடத்தியது. இந்தியாவின் கடல்சார் பாரம்பரியத்துக்கான அர்ப்பணிப்பின் அடையாளமான எழிமலாவில் உள்ள இந்திய கடற்படை அகாடமியின் அழகிய நாளந்தா பிளாக்கில் இறுதிச் சுற்று நடைபெற்றது.

 பள்ளி மாணவர்கள், கடற்படை வீரர்கள், அவர்களின் குடும்பத்தினர், முன்னாள் வீரர்கள், சிறப்பு விருந்தினர்கள், பயிற்சியாளர்கள் போட்டியைக் கண்டுகளித்தனர்.  பங்கேற்ற அணிகள் பார்வையாளர்களை இருக்கைகளின் விளிம்பில் உட்கார வைத்திருந்தன.

திங்க் 2024 கோப்பைக்கான கடுமையான போட்டியில் தொடர்ந்து ஜெய்ப்பூர் ஜெயஸ்ரீ பெரிவால் உயர்நிலைப் பள்ளி முதலிடத்தையும், சென்னை பி.வி.பவன் வித்யாஸ்ரமம் இரண்டாம் இடத்தையும் பிடித்தன. கடற்படைத் தளபதி அட்மிரல் தினேஷ் கே திரிபாதி மற்றும் உயர் அதிகாரிகள் இதில் பங்கேற்றனர்.

திங்க் 2024 இந்தியாவின் பிரகாசமான இளம் மனங்களின்  திறமையை வெளிப்படுத்தியது.  போட்டி மனப்பான்மையை வளர்ப்பதாகவும், கடற்படை வாழ்க்கை முறையை ஊக்குவிப்பதாகவும் இது அமைந்தது.

मित्रों,
मातृभूमि समाचार का उद्देश्य मीडिया जगत का ऐसा उपकरण बनाना है, जिसके माध्यम से हम व्यवसायिक मीडिया जगत और पत्रकारिता के सिद्धांतों में समन्वय स्थापित कर सकें। इस उद्देश्य की पूर्ति के लिए हमें आपका सहयोग चाहिए है। कृपया इस हेतु हमें दान देकर सहयोग प्रदान करने की कृपा करें। हमें दान करने के लिए निम्न लिंक पर क्लिक करें -- Click Here


* 1 माह के लिए Rs 1000.00 / 1 वर्ष के लिए Rs 10,000.00

Contact us

Check Also

36 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களிலிருந்தும் 1.76 கோடிக்கும் அதிகமான பள்ளி மாணவர்கள் வீரக்கதை 4.0 திட்டத்தில் பங்கேற்றனர்

36 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களைச் சேர்ந்த 1.76 கோடிக்கும் அதிகமான பள்ளி மாணவர்கள் வீரக்கதை 4.0 திட்டத்தில் ஆர்வத்துடன் …