रविवार, नवंबर 24 2024 | 11:48:43 PM
Breaking News
Home / Choose Language / Tamil / ‘க்யூஎஸ் உலக பல்கலைக்கழக தரவரிசை: ஆசியா 2025’-ல் இந்தியா சிறப்பான இடத்தைப் பிடித்துப் பிரகாசிக்கிறது – முதல் 100 சிறந்த நிறுவனங்கள் பட்டியலில் 7 இந்திய நிறுவனங்கள் இடம்பெற்றுள்ளன

‘க்யூஎஸ் உலக பல்கலைக்கழக தரவரிசை: ஆசியா 2025’-ல் இந்தியா சிறப்பான இடத்தைப் பிடித்துப் பிரகாசிக்கிறது – முதல் 100 சிறந்த நிறுவனங்கள் பட்டியலில் 7 இந்திய நிறுவனங்கள் இடம்பெற்றுள்ளன

Follow us on:

க்யூஎஸ் (QS) உலக பல்கலைக்கழக தரவரிசை: ஆசியா 2025 என்பது ஆசிய கண்டம் முழுவதும் உள்ள உயர்கல்வியின் திறனைப் பிரதிபலிக்கிறது. கல்வி, ஆராய்ச்சி, புதுமை, சர்வதேசமயமாக்கல் ஆகியவற்றில் சிறந்து விளங்கும் சிறந்த நிறுவனங்களை இது பட்டியலிடுகிறது. இந்த ஆண்டு தரவரிசை ஆசிய பல்கலைக்கழகங்களிடையே வளர்ந்து வரும் போட்டியையும் உலகளாவிய கல்வித் தரங்களை மேம்படுத்துவதற்கான பிராந்தியத்தின் உறுதிப்பாட்டையும் வெளிப்படுத்துகிறது.

க்யூஎஸ் உலக  தரவரிசை – ஆசியா 2025-ன் முதல் 50  முதல் இடங்களுக்குள் இந்தியாவின் 2 நிறுவனங்களும், முதல் 100 இடங்களில் முதல் இந்தியா ஏழு நிறுவனங்களும் இடம்பெற்றுள்ளன.

 தில்லி இந்திய தொழில்நுட்ப நிறுவனம்  44வது இடத்தில் உள்ளது. பெட்ரோலியம் – எரிசக்தி ஆய்வுகள் பல்கலைக்கழகம் (யுபிஇஎஸ்) இந்திய நிறுவனங்களிடையே மிக முக்கியமான முன்னேற்றத்தை அடைந்துள்ளது. இது 70 இடங்கள் முன்னேறி 148 வது இடத்தைப் பிடித்துள்ளது.

க்யூஎஸ் உலக பல்கலைக்கழக ஆசிய தரவரிசையின் முக்கிய அம்சங்கள்:

இந்த தரவரிசை கிழக்கு, தெற்கு, தென்கிழக்கு மற்றும் மத்திய ஆசியாவில் உள்ள 25 நாடுகளை உள்ளடக்கிய 984 நிறுவனங்களை மதிப்பிடுகிறது. ‘க்யூஎஸ் உலக பல்கலைக்கழக தரவரிசை: ஆசியா 2025’  என்பது, நிறுவன செயல்திறன் குறித்து செயல்திறன் ஒப்பீடுகளைச் செய்கிறது.

சமீபத்திய தரவரிசையில் அதிக எண்ணிக்கையிலான நிறுவனங்களுடன் இந்தியா தனித்து நிற்கிறது.

முதல் 50-ல் இடம்பெற்ற நிறுவனங்கள்: இந்தியாவில் ஐஐடி தில்லி (44வது இடம்) மற்றும் ஐஐடி மும்பை (48வது இடம்)

இது தவிர  ஐஐடி – சென்னை (56), ஐஐடி காரக்பூர் (60), இந்திய அறிவியல் நிறுவனம் (62), ஐஐடி கான்பூர் (67), தில்லி பல்கலைக்கழகம் (81) ஆகிய நிறுவனங்கள் இந்தியாவின் வலுவான கல்வி நிலையை வெளிப்படுத்துகின்றன.

मित्रों,
मातृभूमि समाचार का उद्देश्य मीडिया जगत का ऐसा उपकरण बनाना है, जिसके माध्यम से हम व्यवसायिक मीडिया जगत और पत्रकारिता के सिद्धांतों में समन्वय स्थापित कर सकें। इस उद्देश्य की पूर्ति के लिए हमें आपका सहयोग चाहिए है। कृपया इस हेतु हमें दान देकर सहयोग प्रदान करने की कृपा करें। हमें दान करने के लिए निम्न लिंक पर क्लिक करें -- Click Here


* 1 माह के लिए Rs 1000.00 / 1 वर्ष के लिए Rs 10,000.00

Contact us

Check Also

மின்னணுவியல் மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகம் மின்னணு பொம்மை ஹேக்கத்தானை அறிவித்துள்ளது

மின்னணுவியல் மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகம், இந்திய பொம்மை தொழில் துறை மற்றும் சில அமைப்புகளுடன் இணைந்து ‘மின்னணுவியல்  மற்றும் தகவல் தொழில்நுட்பம் சார்ந்த கட்டுப்பாடு மற்றும் மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ் ஓராண்டு பயிற்சி பெற்ற பொறியியல் பட்டதாரிகளின் முதல் தொகுதி பட்டமளிப்பு விழாவைக் கொண்டாடின. இந்த திட்டம் அமைச்சகத்தின் ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு குழுவின் முன்மாதிரிகளை உருவாக்குவதன் மூலம் இந்திய மின்னணு பொம்மைகள் துறையின் வளர்ச்சியை ஊக்குவிப்பதற்காக வடிவமைக்கப்பட்ட ஒரு முன்முயற்சியாகும், மேலும் இது இளம் பொறியாளர்களை சித்தப்படுத்துகிறது. அமைச்சகத்தின்  முன்முயற்சியின் கீழ், வடகிழக்கு பிராந்தியம் மற்றும் SC/ST  பின்னணியில் இருந்து இந்தியா முழுவதிலும் இருந்து இளம் பொறியாளர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டு ஒரு வருடத்திற்கு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளனர். நிகழ்வின் போது, அமைச்சகத்தின் செயலாளர் ,  மின்னணு பொம்மை ஹேக்கத்தானை அறிவித்தார். நிகழ்ச்சியில் கருத்து தெரிவித்த அவர், “இந்தியாவில் மின்னணு பொம்மைகளின் சந்தை வளர்ந்து வருகிறது, மேலும் இந்திய பொம்மை தொழில் சூழலை உருவாக்க, மின்னணுவியல் மற்றும் தகவல் தொழில்நுட்பம் முக்கியப் பங்காற்ற முடியும். அதற்கான கட்டுமானத் தொகுதிகள் உருவாக்கப்படுவதையும், அடுத்த தலைமுறை பொறியாளர்கள் அதை நோக்கிச் செயல்படுவதையும் கண்டு நான் மிகவும் மகிழ்ச்சியடைகிறேன். இந்த திட்டத்தை அதிக அளவில் மாணவர்களுக்கு வழங்குவதற்கும், பொம்மைத் தொழில்களின் ஒட்டுமொத்த ஊக்குவிப்பிலும் அதிக தாக்கத்தை ஏற்படுத்துவதற்கும் பெரிய அளவில் முறைப்படுத்தலாம். எஸ்டிபிஐ/எம்எஸ்ஹெச் மற்றும் எலக்ட்ரானிக் பொம்மைகளை மையமாகக் கொண்ட பிற நிறுவனங்களின் உதவியுடன் நாம், பட்டம் பெறும் மாணவர்களின் எதிர்காலம் சிறப்பாக அமைய உதவலாம்” என்றார். நவம்பர் 23, 2024 அன்று நடைபெற்ற இந்த பட்டமளிப்பு விழாவில், அமைச்சகத்தின்  செயலாளர் திரு எஸ். கிருஷ்ணன், கூடுதல் செயலாளர் திரு புவனேஷ் குமார், குழு ஒருங்கிணைப்பாளர் திருமதி. சுனிதா வர்மா உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.