शनिवार, नवंबर 16 2024 | 03:39:38 PM
Breaking News
Home / Choose Language / Tamil / காலத்திற்கு ஏற்ப, உகந்த வயதினருக்கு திரைப்படங்களைப் பரிந்துரைக்க புதிய சான்றளிப்பு முறை அறிமுகம்

காலத்திற்கு ஏற்ப, உகந்த வயதினருக்கு திரைப்படங்களைப் பரிந்துரைக்க புதிய சான்றளிப்பு முறை அறிமுகம்

Follow us on:

மத்திய திரைப்பட சான்றளிப்பு வாரியம் இதுவரை திரைப்படங்களை “யூ”, “ஏ” மற்றும் “யூஏ” ஆகிய பிரிவுகளில் திரையிடுவதற்கான அனுமதி வழங்கி வந்தது. மாறி வரும் திரைப்பட உள்ளடக்கங்களை கருத்தில் கொண்டு 24.10.2024  முதல் அனுமதி வழங்கும் திரைப்படங்கள், “யூ”, “ஏ”, “யூஏ7+”, “யூஏ 13+”, “யூஏ 16+” என்னும் பிரிவுகளில் வகைப்படுத்தப்படுகின்றன. இதில் “யூ” வகை திரைப்படங்கள் எல்லா வயதினருக்கும் உகந்தவையாகும். “ஏ” வகையில் அனுமதிக்கப்படும் படங்கள் 18 வயது கடந்தவர்கள் மட்டுமே காண்பதற்கு அனுமதிக்கப்பட்டவை. அதற்குக் குறைவான வயதுடையவர்கள் காண அனுமதி இல்லை.

திரைப்படங்களில் குழந்தைகளுக்கு ஒவ்வாத வன்முறை/ பயமுறுத்தும் காட்சி அமைப்புகள், நெருக்கமான அல்லது கிளர்ச்சியூட்டும் காட்சிகள்,  அடிமைப்படுத்தும் பழக்கங்கள்,  விபரீதமான நடத்தைகள் போன்ற அம்சங்கள் காட்சிப்படுத்தப்பட்டிருக்கும் விதம், அவை பார்வையாளர் மேல் உண்டாக்கும் தாக்கம் போன்றவற்றை கருத்தில் கொண்டு அவை 7, 13, 16 வயதுக்கு மேற்பட்ட குழந்தைகளுக்கு உகந்ததாக “யூஏ7+”, “யூஏ 13+”, “யூஏ 16+” என வகைப்படுத்தப்படும்.

“யூஏ7+”, “யூஏ 13+”, “யூஏ 16+” என்று பரிந்துரைக்கப்படும் திரைப்படங்களில், தங்கள் குழந்தைகளின் தனித்தன்மையை கருத்தில் கொண்டு பரிந்துரைக்கப்பட்ட வயதிற்கும் குறைவான வயதுடைய குழந்தைகள் அந்த திரைப்படத்தை பார்க்க அனுமதிப்பதா வேண்டாமா என்பதை முடிவு செய்யும் முன் அத்திரைப்படத்தைப் பற்றிய விவரங்களை அறிந்து கொள்ள பெற்றோர்கள் அறிவுறுத்தப்படுகிறார்கள்.

எந்தவொரு திரைப்படத்தின் சான்றிதழ் (வயது மதிப்பீடு) விவரங்களை அறிய, பெற்றோர்கள் cbfcindia.gov.in என்ற இணையதளத்தைப்  பார்வையிடவும், பயன்படுத்தவும் அறிவுறுத்தப்படுகிறார்கள்.

இந்தப் புதிய சான்றளிப்பு காலத்திற்கு ஏற்ப, உகந்த வயதினருக்கு திரைப்படங்களை பரிந்துரைக்க வாரியத்திற்கு உதவி செய்யும். பெற்றோர்கள் இதனை கவனத்தில் கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

मित्रों,
मातृभूमि समाचार का उद्देश्य मीडिया जगत का ऐसा उपकरण बनाना है, जिसके माध्यम से हम व्यवसायिक मीडिया जगत और पत्रकारिता के सिद्धांतों में समन्वय स्थापित कर सकें। इस उद्देश्य की पूर्ति के लिए हमें आपका सहयोग चाहिए है। कृपया इस हेतु हमें दान देकर सहयोग प्रदान करने की कृपा करें। हमें दान करने के लिए निम्न लिंक पर क्लिक करें -- Click Here


* 1 माह के लिए Rs 1000.00 / 1 वर्ष के लिए Rs 10,000.00

Contact us

Check Also

200 ஜிகாவாட் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி சாதனையை கௌரவிக்கும் வகையில் சுதர்சன் பட்நாயக்கின் மணல் சிற்பத்தை மத்திய அமைச்சர் பிரலாத் ஜோஷி பகிர்ந்துள்ளார்

ஒடிசாவின் பூரி கடற்கரையில் உருவாக்கப்பட்ட புகழ்பெற்ற மணல் சிற்பக் கலைஞர் திரு சுதர்சன் பட்நாயக்கின் கலைப்படைப்புகளை மத்திய புதிய மற்றும் புதுப்பிக்கத்தக்க எரிசக்தித்துறை  அமைச்சர் திரு  பிரலாத் ஜோஷி பகிர்ந்துள்ளார். “புதுப்பிக்கத்தக்க எரிசக்தியில் 200 ஜிகாவாட் மைல்கல்லை தாண்டிய இந்தியாவின் குறிப்பிடத்தக்க சாதனையை கௌரவிக்கும் வகையிலான மணற்சிற்பம்! @sudarsansand #RenewablesPeChintan #REChintanShivir ” என்று மத்திய அமைச்சர் ஜோஷி தனது எக்ஸ் சமூக வலைத்தள பக்கத்தில் பதிவிட்டுள்ளார். பிரதமர் திரு நரேந்திர மோடியின் ‘பஞ்சாமிர்த’ இலக்குக்கு ஏற்ப, புதுப்பிக்கத்தக்க எரிசக்தியில் இந்தியா அக்டோபரில் 200 ஜிகாவாட் மைல்கல்லை எட்டியது. இந்தக் குறிப்பிடத்தக்க வளர்ச்சி 2030 ஆம் ஆண்டுவாக்கில் புதைபடிவம் அல்லாத ஆதாரங்களில் இருந்து 500 ஜிகாவாட்  புதுப்பிக்கத்தக்க எரிசக்தியை அடைய வேண்டும் என்ற நாட்டின் லட்சிய இலக்குடன் ஒத்துப்போகிறது.