அஜர்பைசான் நாட்டின் பாகு நகரில் நடைபெற்ற ஐநா பருவநிலை மாற்ற மாநாட்டில், இந்தியா முக்கியமான விவகாரம் குறித்து தலையிட்டது. பருவநிலை மாற்றத்தை எதிர்கொள்ளவதற்கான CoP 29 மாநாட்டில் தெரிவிக்கப்பட்ட முழுமையான தொகுப்பில், இந்தியாவின் எதிர்பார்ப்பு அடிப்படையில் இந்த தலையீடு மேற்கொள்ளப்பட்டது.
இந்த மாநாட்டில் பங்கேற்ற மத்திய சுற்றுச் சூழல் வனம் மற்றும் பருவநிலை மாற்றத்துறை செயலாளரும், இந்திய தூதுக்குழுவின் துணைத்தலைவருமான திருமதி லீனா நந்தன், 2024-ம் ஆண்டுக்கான தேசிய அளவில் தீர்மானிக்கப்பட்ட பங்களிப்புகளின் பகுப்பாய்வு அறிக்கை அடிப்படையில், 2020 முதல் 2030 வரையிலான காலகட்டத்தில் மொத்த கரியமில வாயு வெளியேற்றம் 86 சதவீதம் அதிகரிக்கக் கூடும் என்றார். எனவே, நமது விவாதங்கள் உறுதியான முடிவெடுக்கும் வகையில் அமைய வேண்டும் என்றார்.
2020-க்கு முந்தைய காலகட்டம் என்பது உலகளாவிய பருவநிலை மாற்ற நடவடிக்கைகளை மேற்கொள்வதற்கான அரிய வாய்ப்பு என்றும் அவர் குறிப்பிட்டார். கரியமில வாயு வெளியேற்றத்தைக் குறைக்க ஒப்புக் கொண்ட நாடுகள், உறுதியான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேணடும் என்றும் இந்த மாநாட்டில் இந்தியா வலியுறுத்தியது.