தொழில்நுட்பம் மற்றும் ஆளுகையின் அற்புதமான கலவையாக பிரகதி தளம் உள்ளது என்று பிரதமர் திரு நரேந்திர மோடி பெருமிதம் தெரிவித்துள்ளார். இது தடைகளை அகற்றுவதையும், திட்டங்கள் உரிய காலத்தில் முடிக்கப்படுவதையும் உறுதி செய்கிறது. ஆக்ஸ்போர்டு செட் வணிகப்பள்ளி மற்றும் கேட்ஸ் அறக்கட்டளை நடத்திய ஆய்வில், பிரகதியின் செயல்திறன் அங்கீகரிக்கப்பட்டுள்ளது குறித்து அவர் மகிழ்ச்சி தெரிவித்துள்ளார் .
சமூக ஊடக எக்ஸ் பதிவில் அவர் கூறியிருப்பதாவது:
” தொழில்நுட்பம் மற்றும் ஆளுமையின் அற்புதமான கலவையை பிரகதி பிரதிபலிக்கிறது. தடைகள் அகற்றப்படுவதையும், திட்டங்கள் சரியான நேரத்தில் முடிக்கப்படுவதையும் உறுதி செய்கிறது. பல ஆண்டுகளாக, இந்த அமர்வுகள் கணிசமான நன்மைகளுக்கு வழிவகுத்தன, இது மக்களுக்கு பெரிதும் பயனளித்தது.
பிரகதியின் செயல்திறனை @OxfordSBS மற்றும் @GatesFoundation ஆகியவை, இந்த ஆய்வில் அங்கீகரித்திருப்பது குறித்து நான் மகிழ்ச்சி அடைகிறேன்.