शनिवार, नवंबर 23 2024 | 02:34:13 AM
Breaking News
Home / Choose Language (page 32)

Choose Language

ஐஆர்எஸ் அதிகாரிகளுக்கான பயிற்சித்திட்ட பங்குதாரர்கள் / பங்குதாரர் நிறுவனத்தைத் தேர்ந்தெடுப்பதற்கான விருப்ப விண்ணப்பங்களை நாசின் வரவேற்கிறது

மறைமுக வரிவிதிப்புத் துறையில் திறன் மேம்பாட்டுக்கான இந்திய அரசின் தலைமை நிறுவனமான தேசிய சுங்கம், மறைமுக வரிகள் மற்றும் போதைப் பொருள் தடுப்பு அகாடமி (NACIN), ஐஆர்எஸ் (சி & ஐடி) அதிகாரிகளுக்கான இடைக்கால தொழில் பயிற்சித் திட்டத்தின் (எம்சிடிபி) III, IV மற்றும் கட்டம்-V ஆகியவற்றை ஏற்பாடு செய்து வழங்க திறந்த ஒப்பந்தப்புள்ளி செயல்முறை மூலம் பயிற்சி பங்குதாரர்கள் / கூட்டாளர் நிறுவனங்களைத் தேர்வு செய்வதற்கான விருப்ப விண்ணப்பங்களை வரவேற்கிறது. 12.11.2024 அன்று பதிவேற்றப்பட்ட 11.11.2024 தேதியிட்ட “முன்மொழிவுக்கான கோரிக்கை”, 16.12.2024 அன்று மாலை 6:00 மணிக்குள் …

Read More »

அந்தமான் நிக்கோபார் தீவுகளின் மீன்வளம் மற்றும் நீர்வாழ் உயிரின வளர்ப்புத் துறையில் முதலீட்டு வாய்ப்புகள்’ – என்ற தலைப்பில் முதலீட்டாளர்கள் சந்திப்பு 2024 நடைபெற்றது

மத்திய மீன்வளம், கால்நடை பராமரிப்பு மற்றும் பால்வள அமைச்சகத்தின் மீன்வளத் துறையானது அந்தமான் & நிக்கோபார் தீவுகளின் மீன்வளம் மற்றும் நீர்வாழ் உயிரின துறையில் முதலீட்டு வாய்ப்புகள் குறித்த  முதலீட்டாளர்கள் சந்திப்பு 2024 நவம்பர் 14 அன்று அந்தமான் & நிக்கோபார் தீவுகளில் உள்ள ஸ்வராஜ் தீவில் நடைபெற்றது. பஞ்சாயத்து ராஜ் அமைச்சர் திரு ராஜீவ் ரஞ்சன் சிங் முன்னிலையில் இந்த சந்திப்பு கூட்டம் நடைபெற்றது. அந்தமான் நிக்கோபார் தீவுகளின் …

Read More »

தொழில் நிறுவனங்கள் இரட்டை அனுமதி பெறுவதில் இருந்து விலக்கு அளிக்கும் அறிவிக்கை: சுற்றுச்சூழல், வனம் மற்றும் பருவநிலை மாற்ற அமைச்சகம் வெளியீடு

புதிய தொழிற்சாலைகள் அமைப்பதற்கான சுற்றுச்சூழல் அனுமதி மற்றும் நிறுவுவதற்கான இசைவாணை  ஆகிய இரட்டை இணக்கங்களை நீக்க வேண்டும் என்ற தொழில்துறையினரின் நீண்ட நாள் கோரிக்கையை மத்திய அரசு ஏற்றுக்கொண்டுள்ளது.  இப்போது, மாசுபடுத்தாத வெள்ளை வகைத் தொழில்கள் நிறுவுவதற்கான அனுமதி அல்லது செயல்பட ஒப்புதல் (CTO) எடுக்க வேண்டிய அவசியமில்லை. சுற்றுச்சூழல் அனுமதி  பெற்ற தொழிற்சாலைகள் இசைவாணை எடுக்க வேண்டிய அவசியமில்லை.  இது இணக்கச் சுமையை குறைப்பது மட்டுமல்லாமல், ஒப்புதல்கள் இரட்டிப்பாக்கப்படுவதையும் தடுக்கிறது. காற்று மாசுபாடு …

Read More »

வருடாந்திர கடற்படை விமான பாதுகாப்பு கூட்டம் மற்றும் விமான பாதுகாப்பு கருத்தரங்கு – 2024

கிழக்கு கடற்படை தலைமையகத்தின் கீழ் விசாகப்பட்டினத்தில் உள்ள ஐஎன்எஸ் தேகாவில் நவம்பர் 12-13 தேதிகளில் 2024 ஆம் ஆண்டிற்கான விமான பாதுகாப்பு கருத்தரங்கு மற்றும் வருடாந்திர கடற்படை விமான பாதுகாப்பு கூட்டம் வெற்றிகரமாக நடத்தப்பட்டது. விமான பாதுகாப்பு கருத்தரங்கு நவம்பர் 12 அன்று தொடங்கியது, தலைமை விருந்தினராக, கிழக்கு கடற்படை தளபதி வைஸ் அட்மிரல் ராஜேஷ் பெந்தர்கர் கலந்து கொண்டு உரை நிகழ்த்தினார். “வளர்ந்து வரும் அச்சுறுத்தல்கள் மற்றும் சவால்கள் …

Read More »

ஒருங்கிணைந்த தலைமையகப் பாதுகாப்புப் பணியாளர்கள் பிரிவு வருடாந்திர கூட்டு மின்காந்த வாரியக் கூட்டம் 2024 ஐ நடத்தியது

கூட்டு மின்காந்த வாரியத்தின் வருடாந்திரக் கூட்டம்  நவம்பர் 13 அன்று ஒருங்கிணைந்த பாதுகாப்புப் பணியாளர்களின் (செயல்பாடுகள்) துணைத் தலைவர் ஏர் மார்ஷல் ஜீதேந்திர மிஸ்ரா தலைமையில் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் டிஆர்டிஓ, டிடிபி மற்றும் முப்படைகளின் மூத்த அதிகாரிகள் கலந்து கொண்டனர். மின்னணு போர்முறை, கையொப்ப மேலாண்மை, வளர்ந்து வரும் தொழில்நுட்பங்கள், இஎம்ஐ / இஎம்சி, ஸ்பெக்ட்ரம் மேலாண்மை மற்றும் மனித வள மேலாண்மை போன்ற பகுதிகளில் கூட்டு செயல்பாடுகள் மற்றும் ஒருங்கிணைப்பு குறித்த பல அம்சங்கள் இந்தக் கூட்டத்தில் …

Read More »

பினாகா ஆயுத அமைப்பின் சோதனைகளை டிஆர்டிஓ வெற்றிகரமாக நிறைவு செய்துள்ளது

பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு நிறுவனம் (டிஆர்டிஓ) பி.எஸ்.க்யூ.ஆர் சரிபார்ப்பு சோதனைகளின் ஒரு பகுதியாக துல்லியமாக தாக்கும் பினாகா ஆயுத அமைப்பின் சோதனைகளை வெற்றிகரமாக முடித்துள்ளது. வெவ்வேறு துப்பாக்கி சுடும் நிலைகளில் மூன்று கட்டங்களாக இந்த சோதனைகள் நடத்தப்பட்டுள்ளன. இந்த சோதனைகளின்போது, அளவீடு, துல்லியம், நிலைத்தன்மை, சுடும் வேகம் ஆகிய அளவீடுகள், ராக்கெட்டுகளின் விரிவான சோதனையின் மூலம் மதிப்பீடு செய்யப்பட்டன. ஏவுகணை உற்பத்தி நிறுவனங்களால் மேம்படுத்தப்பட்ட சேவையில் உள்ள இரண்டு …

Read More »

2024, அக்டோபர் மாதத்திற்கான இந்தியாவில் மொத்த விலைக் குறியீட்டு எண்கள் (அடிப்படை ஆண்டு: 2011-12)

அகில இந்திய மொத்த விலைக் குறியீட்டு எண் அடிப்படையிலான ஆண்டுப் பணவீக்க விகிதம் 2024 அக்டோபர் மாதத்தில் (அக்டோபர், 2023-க்கு மேல்) 2.36% (தற்காலிகமானது) ஆக உள்ளது. 2024 அக்டோபரில் பணவீக்கம் முதன்மையாக உணவுப் பொருட்களின் விலை, உணவுப் பொருட்களின் உற்பத்தி, பிறவற்றின்  உற்பத்தி, இயந்திரங்கள் மற்றும் உபகரணங்களின் உற்பத்தி, மோட்டார் வாகனங்கள், டிரெய்லர்கள் & அரை டிரெய்லர்கள் போன்றவற்றின் விலை உயர்வால் ஏற்பட்டது. அனைத்துப் பொருட்கள் மற்றும் மொத்த விலைக் குறியீட்டு எண் கூறுகளின் அடிப்படையில் கடந்த மூன்று மாதங்களுக்கான குறியீட்டு எண்கள் மற்றும் பணவீக்க …

Read More »

43-வது இந்திய சர்வதேச வர்த்தக கண்காட்சியை திரு பியூஷ் கோயல் தொடங்கி வைத்தார்

புதுதில்லியில் உள்ள பாரத் மண்டபத்தில் 43-வது இந்திய சர்வதேச வர்த்தக கண்காட்சியை மத்திய வர்த்தக மற்றும் தொழில்துறை அமைச்சர் திரு பியூஷ் கோயல் இன்று தொடங்கி வைத்தார். அப்போது பேசிய அவர், இந்திய வர்த்தக மேம்பாட்டு அமைப்பை உலகத் தரம் வாய்ந்த நிறுவனமாக விரிவுபடுத்த அரசு திட்டமிட்டுள்ளது என்றும் ஒட்டுமொத்த தொழில்துறை மற்றும் மதிப்புக் கூட்டல் சங்கிலியை ஒரே புள்ளியில் பிரதிபலிக்கும் வகையில் விரிவுபடுத்த அரசு திட்டமிட்டுள்ளது என்றும் இதன் மூலம் …

Read More »

இந்திய சர்வதேச வர்த்தக கண்காட்சி 2024-ல் இந்திய நிலக்கரி நிறுவன அரங்கை மத்திய நிலக்கரி மற்றும் சுரங்கத் துறை அமைச்சர் திரு ஜி கிஷன் ரெட்டி தொடங்கி வைத்தார்

புதுதில்லி பிரகதி மைதானத்தில் நடைபெற்ற இந்திய சர்வதேச வர்த்தக கண்காட்சி (ஐஐடிஎஃப்) 2024-ல் இந்திய நிலக்கரி நிறுவன அரங்கை மத்திய நிலக்கரி மற்றும் சுரங்கத்துறை அமைச்சர் திரு ஜி கிஷன் ரெட்டி இன்று திறந்து வைத்தார். இந்த நிகழ்ச்சியில் நிலக்கரி அமைச்சக செயலாளர் திரு விக்ரம் தேவ் தத், சுரங்க அமைச்சக செயலாளர் திரு வி.எல்.காந்தராவ் மற்றும் மூத்த அதிகாரிகள் கலந்து கொண்டனர். இந்த நிகழ்வு எரிசக்தி பாதுகாப்பு, புதிய சுரங்கம், நிலையான நடைமுறைகள் ஆகியவற்றில் …

Read More »

மேகாலயாவில் கடல் விமான செயல்முறை விளக்க விழாவில் மத்திய சிவில் விமானப் போக்குவரத்துத் துறை அமைச்சர் திரு கிஞ்சரப்பு ராம்மோகன் நாயுடு பங்கேற்றார்

மேகாலயாவுக்கு இரண்டு நாள் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள மத்திய சிவில் விமானப் போக்குவரத்து அமைச்சர் திரு கிஞ்சரப்பு ராம்மோகன் நாயுடு, ரி போய் மாவட்டத்திலுள்ள உமியம் ஏரியில் நடைபெற்ற கடல் விமான செயல்விளக்க அறிமுக விழாவில் கலந்து கொண்டு, மேகாலயாவின் இயற்கை அழகைக் கண்டு வியந்தார்.  இந்நிகழ்ச்சியில் மேகாலயா முதலமைச்சர் திரு கான்ராட் கே. சங்மா கலந்து கொண்டார். இதில் பேசிய மத்திய அமைச்சர், இந்த நிகழ்வை சாத்தியமாக்கிய மேகாலயா முதலமைச்சருக்கு …

Read More »