அறுவைசிகிச்சைக்குப் பிந்தைய முழங்கால் மறுவாழ்வுக்கான குறிப்பிடத்தக்க முன்னேற்றமாக, ஐ.ஐ.டி ரோபரின் ஆராய்ச்சியாளர்கள் தொடர்ச்சியான செயலற்ற இயக்கம் (சிபிஎம்) சிகிச்சையை மிகவும் அணுகக்கூடியதாகவும் மலிவு விலையிலும் மாற்றுவதற்கான ஒரு புதுமையான தீர்வை வெளியிட்டுள்ளனர். ஐ.ஐ.டி ரோபரில் உள்ள குழு, முழங்கால் மறுவாழ்வுக்கான முழுமையான இயந்திர செயலற்ற இயக்க இயந்திரத்தை உருவாக்கியுள்ளது. இதற்கு காப்புரிமை வழங்கப்பட்டுள்ளது. விலை உயர்ந்த மற்றும் மின்சாரத்தைச் சார்ந்துள்ள பாரம்பரிய மோட்டார் பொருத்தப்பட்ட இயந்திரங்களைப் போலல்லாமல், புதிதாக உருவாக்கப்பட்ட சாதனம் முற்றிலும் மாறுபட்டது. இது …
Read More »மத்திய அரசு பணி நியமனத்தில் நேர்மறையான முன்னேற்றம்
”நாட்டின் இளைஞர்களுக்கு வேலை வாய்ப்புகளை அதிகப்படுத்துவதே எங்கள் உறுதிப்பாடு. மத்திய அரசின் கொள்கைகளும், முடிவுகளும் வேலைவாய்ப்புகளை உருவாக்குவதில் நேரடித் தாக்கத்தை ஏற்படுத்துகின்றன”. ~பிரதமர் திரு நரேந்திர மோடி இந்தியாவின் வேலைவாய்ப்புச் சந்தை சமீபத்திய ஆண்டுகளில் குறிப்பிடத்தக்க வளர்ச்சியைக் கண்டுள்ளது. நாட்டின் இளைஞர்கள் பொருளாதார வளர்ச்சியைத் தூண்டுவதில் முக்கிய பங்கு வகிக்கின்றனர். வேலைவாய்ப்புகளுக்கான அதிகரித்து வரும் தேவை அரசின் ஆட்சேர்ப்பு முயற்சிகளில் பிரதிபலிக்கிறது. 2023-24-ம் ஆண்டில், பணியாளர் நலத்துறை அமைச்சகம் குரூப் …
Read More »திரைப்படங்களின் பன்முகத்தன்மையைக் கொண்டாடுதல்
உள்ளூர், உலகளாவிய திரைப்படங்களின் ஒருங்கிணைப்பாக இந்திய சர்வதேச திரைப்பட விழா (ஐஎஃப்எஃப்ஐ) திகழ்கிறது. இது பல்வேறு கலாச்சாரங்கள், கதைகள், கலை முயற்சிகளை பிரதிபலிக்கும் பிராந்திய, உலகளாவிய திரைப்படங்களின் இணக்கமான கலவையைக் கொண்ட விழாவாக அமைந்துள்ளது. உள்ளூர் வேர்களை விட்டுப் பிரியாமல், உலகளாவிய ஆற்றலையும் எவ்வாறு பெறுவது என்பதற்கு சர்வதேச திரைப்பட விழா ஒரு உதாரணமாக திகழ்கிறது. உலகெங்கிலும் உள்ள திரைப்படங்கள், கலைஞர்கள் மற்றும் பார்வையாளர்களை இது ஒன்றிணைக்கிறது. எல்லைகளைக் கடந்து உலகெங்கிலும் உள்ள திரைப்படத் தயாரிப்பாளர்களையும் பார்வையாளர்களையும் ஒன்றிணைக்கும் உலகளாவிய மொழியாக சினிமாவின் கொண்டாட்டமாகவும் இது உள்ளது. நவம்பர் 20 முதல் 28 வரை …
Read More »சத்தீஸ்கர், ஒடிசா மற்றும் மேற்கு வங்கம் ஆகிய மாநிலங்களில் தீயணைப்பு சேவைகளை விரிவுபடுத்துதல் மற்றும் நவீனப்படுத்துதல் திட்டத்தின் கீழ் ரூ.725.62 கோடி மதிப்பிலான மூன்று திட்டங்களுக்கு மத்திய உள்துறை அமைச்சர் திரு அமித் ஷா தலைமையிலான உயர்நிலைக் குழு ஒப்புதல்
சத்தீஸ்கர், ஒடிசா மற்றும் மேற்கு வங்கத்திற்கான “மாநிலங்களில் தீயணைப்பு சேவைகளை விரிவுபடுத்துதல் மற்றும் நவீனப்படுத்துதல்” என்பதன் கீழ், ரூ.725.62 கோடி மதிப்பிலான மூன்று திட்டங்களுக்கு மத்திய உள்துறை மற்றும் கூட்டுறவுத்துறை அமைச்சர் திரு அமித் ஷா தலைமையிலான உயர்மட்டக் குழு ஒப்புதல் அளித்துள்ளது. சத்தீஸ்கருக்கு ரூ.147.76 கோடியும், ஒடிசாவுக்கு ரூ.201.10 கோடியும், மேற்கு வங்கத்துக்கு ரூ.376.76 கோடியும் வழங்க குழு ஒப்புதல் அளித்துள்ளது. உயர்மட்டக் குழுவில் நிதியமைச்சர், வேளாண் அமைச்சர், …
Read More »தேசிய உணவு தொழில்நுட்ப தொழில்முனைவோர் நிறுவனத்தில் பட்டமளிப்பு விழா
குண்ட்லியில் உள்ள தேசிய உணவு தொழில்நுட்ப தொழில்முனைவோர், மேலாண்மை நிறுவனத்தின் (NIFTEM-K) ஐந்தாவது பட்டமளிப்பு விழா இன்று (2024 நவம்பர் 11) நடைபெற்றது. உணவு பதப்படுத்தும் தொழில்கள் அமைச்சகத்தின் செயலாளர் திருமதி அனிதா பிரவீன் இந்த நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார். உணவு பதப்படுத்துதல் தொழில் அமைச்சகத்தின் கூடுதல் செயலாளர் திரு மின்ஹாஜ் ஆலம், ஹல்திராம் நிறுவனத்தின் நிர்வாக இயக்குநர் திரு பங்கஜ் அகர்வால் ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டனர். இந்த நிகழ்ச்சியில் பிரபல கல்வியாளர்கள், விஞ்ஞானிகள், தொழில்துறை தலைவர்களும் கலந்து கொண்டனர். நிஃப்டம்-கே எனப்படும் தேசிய …
Read More »பிரதமரின் ஜன்தன் கணக்கு வைத்திருப்பவர்களுக்கு மறு கேஒய்சி-ஐ குறிப்பிட்ட காலத்திற்குள் உறுதி செய்ய அனைத்து வழிகளையும், குறிப்பாக டிஜிட்டல் வழிகளைப் பயன்படுத்துமாறு வங்கிகளுக்கு நிதிச் சேவைகள் துறை செயலாளர் வலியுறுத்தல்
பிரதமரின் ஜன் தன் திட்ட (PMJDY) கணக்கு வைத்திருப்பவர்களுக்கு, புதிதாக உங்கள் வாடிக்கையாளரை அறிந்து கொள்ளுங்கள் (மறு-கேஒய்சி) நடைமுறையை மேற்கொள்வதற்கான ஆலோசனைக் கூட்டம் சம்பந்தப்பட்ட அனைவருடனும் நிதிச் சேவைகள் துறை செயலாளர் திரு எம். நாகராஜு தலைமையில் புதுதில்லியில் இன்று நடைபெற்றது. PMJDY 2014-ல் தொடங்கப்பட்டது. ஆகஸ்ட் 2014 முதல் டிசம்பர் 2014 வரை சுமார் 10.5 கோடி ஜன்தன் கணக்குகள் இயக்க முறையில் தொடங்கப்பட்டுள்ளன. இந்தக் கணக்குகள் 10 ஆண்டுகளுக்குப் பிறகு அவ்வப்போது புதுப்பிக்கப்பட வேண்டும் அல்லது மறு கேஒய்சி செய்யப்பட வேண்டும். கூட்டத்தின் போது, ஏடிஎம், மொபைல் பேங்கிங், இணைய வங்கி மற்றும் பிற டிஜிட்டல் சேனல்கள் …
Read More »நாடுகடந்த கடல்சார் குற்றங்களை எதிர்த்துப் போராடுவதற்கும், பிராந்திய ஒத்துழைப்பை மேம்படுத்துவதற்கும், இந்திய – இலங்கை கடலோரக் காவல்படை 7-வது வருடாந்திர உயர்மட்ட கூட்டம் கொழும்பில் நடைபெற்றது
இந்தியக் கடலோரக் காவல்படை (ICG) மற்றும் இலங்கை கடலோர காவல்படை (SLCG) ஆகியவை, 7-வது வருடாந்திர உயர்மட்டக் கூட்டத்தை 2024 நவம்பர் 11 அன்று கொழும்பில் நடத்தின. தலைமை இயக்குநர் டி.ஜி.எஸ்.பரமேஷ் தலைமையிலான நான்கு பேர் கொண்ட ஐ.சி.ஜி தூதுக்குழு மற்றும் ரியர் அட்மிரல் ஒய்.ஆர்.சேரசிங்க தலைமையிலான இலங்கை கடலோர காவல்படை தூதுக்குழுவினர் இந்த சந்திப்பில் பங்கேற்றனர். இது, இரு நாட்டு கடலோர காவல்படையினருக்கும் இடையிலான கூட்டு முயற்சிகளில் குறிப்பிடத்தக்க …
Read More »சிலிக்கான் கார்பைடு வேஃபர்களை உள்நாட்டிலேயே உருவாக்குதல் மற்றும் எக்ஸ்-பேண்ட் பயன்பாடுகள் வரை காலியம் நைட்ரைடு உயர் எலக்ட்ரான் மொபிலிட்டி டிரான்சிஸ்டர்கள் அடிப்படையிலான எம்எம்ஐசி தொழில்நுட்பம்
டி.ஆர்.டி.ஓ ஆய்வகமான சாலிட் ஸ்டேட் இயற்பியல் ஆய்வகம், 4 அங்குல விட்டம் கொண்ட சிலிக்கான் கார்பைடு (SiC) செதில்களை வளர்ப்பதற்கும் உற்பத்தி செய்வதற்கும், உள்நாட்டு செயல்முறைகளை வெற்றிகரமாக உருவாக்கியுள்ளதுடன் காலியம் நைட்ரைடு (GaN) உயர் எலக்ட்ரான் மொபிலிட்டி டிரான்சிஸ்டர்கள் (HEMTs) 150W வரை மற்றும் மோனோலிதிக் மைக்ரோவேவ் ஒருங்கிணைந்த சுற்றுகள் (MMICs) 40W வரை, எக்ஸ்-பேண்ட் அதிர்வெண்கள் வரை, பயன்பாடுகளுக்கு உருவாக்கியுள்ளது. பாதுகாப்பு, விண்வெளி மற்றும் தூய்மையான எரிசக்தி துறைகளில் …
Read More »பூஜ்ய தாதா பகவான் நினைவு தபால் தலையை வெளியிட்டுள்ளது அஞ்சல் துறை
தாதா பகவான் என்று பரவலாக மதிக்கப்படும் அம்பாலால் முல்ஜிபாய் படேலின் வாழ்க்கையும், போதனைகளையும் நினைவுகூரும் வகையில், அஞ்சல் துறையால் ஒரு சிறப்பு அஞ்சல் தலை வெளியிடப்பட்டுள்ளது. நவம்பர் 10-ம் தேதி பூஜ்ய தாதா பகவானின் 117- வது ஜன்ம ஜெயந்தியின் போது, குஜராத்தின் வதோதராவில் உள்ள நவ்லாகி மைதானத்தில் மாண்புமிகு குஜராத் முதலமைச்சர் திரு பூபேந்திரபாய் படேல், பூஜ்யஸ்ரீ தீபக்பாய் தேசாய், போஸ்ட் மாஸ்டர் ஜெனரல் திரு தினேஷ் குமார் சர்மா ஆகியோர் முன்னிலையில் இந்த தபால் தலை வெளியிடப்பட்டது. திருமதி நேனு குப்தா வடிவமைத்த நினைவு அஞ்சல் தலையில் பூஜ்ய ஸ்ரீ …
Read More »தெற்காசிய தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை கவுன்சிலின் (எஸ்.ஏ.டி.ஆர்.சி) 25-வது கூட்டத்தை அமைச்சர் ஜோதிராதித்ய சிந்தியா தொடங்கி வைத்தார்
தெற்காசிய தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை கவுன்சிலின் (எஸ்ஏடிஆர்சி-25) 25-வது கூட்டத்தை மத்திய தொலைத்தொடர்புத் துறை அமைச்சர் திரு. ஜோதிராதித்ய சிந்தியா புதுதில்லியில் இன்று தொடங்கி வைத்தார். இந்த நிகழ்ச்சியில் உரையாற்றிய அமைச்சர் சிந்தியா, “உலகளாவிய தெற்கின் குரலாக இந்தியா வெளிப்படுவதால், எஸ்ஏடிஆர்சி அறிவு பகிர்வுக்கான ஒரு சிறந்த தளமாகவும், வளர்ந்து வரும் கொள்கை மற்றும் ஒழுங்குமுறை சவால்களில் புதுமையான முன்னோக்குகளின் சங்கமமாகவும் செயல்படும்” என்று கூறினார். “பாதுகாப்பான, தரமான உந்துதல் எதிர்காலம்” ஒழுங்குமுறை அமைப்புகளால் கொள்கைகளை உருவாக்க வழிகாட்ட வேண்டும் என்று …
Read More »