गुरुवार, नवंबर 07 2024 | 06:14:36 PM
Breaking News
Home / Choose Language / Tamil (page 2)

Tamil

Tamil

அறிவியல் மற்றும் தொழிலக ஆராய்ச்சித் துறையானது சிறப்பு இயக்கம் 4.0-ஐ வெற்றிகரமாக மேற்கொண்டது

அறிவியல் மற்றும் தொழிலக ஆராய்ச்சித் துறை (DSIR) அதன் தன்னாட்சி அமைப்புகள், அறிவியல் மற்றும் தொழிலக ஆராய்ச்சி கவுன்சில் (CSIR) மற்றும் இரண்டு பொதுத்துறை நிறுவனங்களான தேசிய ஆராய்ச்சி மேம்பாட்டுக் கழகம் (NRDC) & மத்திய மின்னணு லிமிடெட் (CEL) ஆகியவற்றுடன் இணைந்து, DSIR செயலாளர், டாக்டர்  N. கலைச்செல்வியின் வழிகாட்டுதலின் கீழ் 2 அக்டோபர் 2024 முதல் 31 அக்டோபர் 2024 வரை சிறப்பு இயக்கம் 4.0 ஐ வெற்றிகரமாக நடத்தியது. 2024 அக்டோபர் 2-ம் தேதி புதுதில்லியில் உள்ள சிஎஸ்ஐஆர் தலைமையகத்தில் தூய்மைப் பணியுடன் டிஎஸ்ஐஆர் செயலாளர் & சிஎஸ்ஐஆர் தலைமை இயக்குநரால் இந்த இயக்கம் தொடங்கி வைக்கப்பட்டது. செயலாளர் டிஎஸ்ஐஆர் & சிஎஸ்ஐஆர் …

Read More »

ஐரோப்பிய ஒன்றியத்தின் சூரிய ஆய்வக செயற்கைக்கோள் புரோபா-3-ஐ டிசம்பரில் இந்தியா விண்ணில் செலுத்தும்: டாக்டர் ஜிதேந்திர சிங் அறிவிப்பு

ஐரோப்பிய ஒன்றியத்தின் புரோபா-3 விண்வெளி செயற்கைக்கோளை டிசம்பர் முதல் வாரத்தில் இந்தியா விண்ணில் செலுத்த உள்ளது என்று மத்திய அமைச்சர் டாக்டர் ஜிதேந்திர சிங் இன்று அறிவித்தார். இது இந்தியா உலகளாவிய விண்வெளித் துறையில் தலைமையிடத்தில் வளர்ந்து வருவதில் மற்றொரு மைல்கல்லைக் குறிக்கிறது, இதை 3 வது இந்திய விண்வெளி மாநாட்டில் தெரிவித்த டாக்டர் ஜிதேந்திர சிங், விண்வெளி ஆராய்ச்சி மற்றும் ஆய்வில் இந்தியாவிற்கும் ஐரோப்பிய ஒன்றியத்திற்கும் இடையிலான வலுவான கூட்டாண்மையை இது காட்டுகிறது என்றார். சூரியனை …

Read More »

இந்திய வரலாற்றை வடிவமைப்பதில் பருவநிலையின் பங்கை ஆய்வு கண்டறிந்துள்ளது

கடந்த 2000 ஆண்டுகளில் இந்திய துணைக் கண்டத்தில் மனித வரலாற்றை வடிவமைப்பதில் பருவநிலை உந்துதல், தாவர மாற்றங்கள் முக்கிய பங்கு வகித்தன என்று ஒரு புதிய ஆய்வு கண்டறிந்துள்ளது. எதிர்கால தாக்கங்களை சிறப்பாக கணிக்க வரலாற்று பருவநிலை வடிவங்களைப் புரிந்துகொள்வதன் முக்கியத்துவத்தை இந்த ஆராய்ச்சி அடிக்கோடிட்டுக் காட்டுகிறது. மத்திய கங்கை சமவெளியில் பிற்கால ஹோலோசீன் (சுமார் 2,500 ஆண்டுகள்) பருவநிலை பதிவுகளில், பற்றாக்குறை உள்ளது. இது இந்தப் பிராந்தியத்தில் கடந்த கால பருவநிலை …

Read More »

தூய்மை இயக்கத்திற்கான சிறப்பு இயக்கம் 4.0 ஐ மின்சார அமைச்சகம் வற்றிகரமாக நிறைவு செய்தது

2024, அக்டோபர் 2 முதல் 31 வரை நடத்தப்பட்ட நிலுவையில் உள்ள பணிகளை நிறைவு செய்வதற்கான சிறப்பு இயக்கம் 4.0 ஐ மின்சார அமைச்சகம் வெற்றிகரமாக முடித்துள்ளது. இந்த சிறப்பு இயக்கம் தூய்மையை ஊக்குவித்தல், பணிகளை ஒழுங்குபடுத்துதல், அமைச்சகத்தின் பொதுத்துறை நிறுவனங்கள் மற்றும் அதன் கீழ் உள்ள அமைப்புகளில் நிலுவையில் உள்ள குறைகளை நிவர்த்தி செய்வதை நோக்கமாகக் கொண்டது. இந்த இயக்கத்தின் போது, அமைச்சகம் பல்வேறு இடங்களில் 368 தூய்மை இயக்கங்களை …

Read More »

புதுதில்லி, தேசிய ஊடக மையத்தில் நாடு முழுதும் டிஜிட்டல் வாழ்நாள் சான்றிதழ் இயக்கம் 3.0-ஐ 2024, நவம்பர் 6 அன்று மத்திய இணையமைச்சர் டாக்டர் ஜிதேந்திர சிங் தொடங்கிவைக்கவுள்ளார்

நாடு முழுவதும் 800 நகரங்கள் / மாவட்டங்களில் மத்திய ஓய்வூதியம் மற்றும் ஓய்வூதியதாரர்கள் நலத்துறை சார்பில் 2024 நவம்பர் 1 முதல் 30 வரை நடத்தப்படும் டிஜிட்டல் வாழ்நாள் சான்றிதழ்  இயக்கம் 3.0-ஐ 2024 நவம்பர் 6 அன்று, புதுதில்லியில் உள்ள தேசிய ஊடக மையத்தில் மத்திய இணையமைச்சர் டாக்டர் ஜிதேந்திர சிங் தொடங்கிவைக்கிறார். ஓய்வூதியம் பெறுவோர் ஓய்வூதியத்தை தொடர்ந்து பெறுவதற்காக ஆண்டுதோறும் வாழ்நாள் சான்றிதழைச் சமர்ப்பிக்க வேண்டும். பாரம்பரியமாக வாழ்நாள் …

Read More »

ஹரியானா, திரிபுரா, மிசோரம் மாநிலங்களுக்கு 15-வது நிதி ஆணைய மானியம் விடுவிப்பு

ஹரியானா, திரிபுரா மற்றும் மிசோரம் ஆகிய மாநிலங்களில் உள்ள கிராமப்புற உள்ளாட்சி அமைப்புகளுக்கு 2024-25 நிதியாண்டில் 15-வது நிதி ஆணைய மானியங்களை மத்திய அரசு விடுவித்துள்ளது. ஹரியானாவின் பஞ்சாயத்து ராஜ் அமைப்புகளான  ஊரக உள்ளாட்சி அமைப்புகளுக்கு முதல் தவணையின் ஒரு பகுதியாக ரூ.194.867 கோடி மதிப்புள்ள நிபந்தனையற்ற மானியங்கள் வழங்கப்பட்டுள்ளன. நிதி விடுவிப்பதற்கான நிபந்தனையைப் பூர்த்தி செய்த மாநிலத்தில் உள்ள 18 தகுதியான மாவட்ட ஊராட்சிகள், 139 தகுதியான வட்டார ஊராட்சிகள் மற்றும் 5911 தகுதியான கிராம பஞ்சாயத்துகளுக்கு  நிதி வழங்கப்பட்டுள்ளது . திரிபுராவிலுள்ள …

Read More »

உலக சூரியசக்தி அறிக்கை தொடரை சர்வதேச சூரியசக்தி கூட்டணி (ஐஎஸ்ஏ) வெளியிட்டது

உலக சூரியசக்தி அறிக்கை தொடரின் 3-வது பதிப்பு சர்வதேச சூரிய கூட்டணியின் 7-வது பேரவைக் கூட்டத்தில் வெளியிடப்பட்டது. இந்த அறிக்கை, உலகளாவிய சூரியசக்தி வளர்ச்சி, முதலீட்டு போக்குகள், தொழில்நுட்ப முன்னேற்றங்கள் மற்றும் ஆப்பிரிக்காவின் பசுமை ஹைட்ரஜன் திறன் ஆகியவற்றை மையமாகக் கொண்டது. உலக சூரிய சந்தை அறிக்கை, உலக முதலீட்டு அறிக்கை, உலக தொழில்நுட்ப அறிக்கை மற்றும் ஆப்பிரிக்க நாடுகளுக்கான பசுமை ஹைட்ரஜன் தயார்நிலை மதிப்பீடு ஆகிய 4 அறிக்கைகள் …

Read More »

இந்திய சினிமாவின் நான்கு ஜாம்பவான்களின் நூற்றாண்டு விழாவை இந்திய சர்வதேச திரைப்பட விழா கொண்டாடுகிறது

55-வது இந்திய சர்வதேச திரைப்பட விழா (ஐ.எஃப்.எஃப்.ஐ) இந்திய சினிமாவின் பல அம்சங்களை வடிவமைத்த நான்கு சினிமா ஜாம்பவான்களைக் கௌரவிக்கவுள்ளது. இந்த ஆண்டு ஐ.எஃப்.எஃப்.ஐ, ராஜ் கபூர், தபன் சின்ஹா, அக்கினேனி நாகேஸ்வர ராவ் மற்றும் முகமது ரஃபி ஆகியோரைக் கௌரவிக்கும் வகையில், திரையிடல்கள் மற்றும் கலந்துரையாடல்கள் மூலம் அஞ்சலி செலுத்தும். சினிமா உலகிற்கு இந்தப் புகழ் பெற்ற திரைப்பட ஆளுமைகளின் பங்களிப்புகளை நினைவு கூருவதாக இது அமையும். இந்த ஆளுமைகளுக்கு சிறப்பு அஞ்சலி செலுத்தும் …

Read More »

‘சுங்க விநியோகச் சங்கிலித் தொடரில் பாலினச் சமத்துவத்தை உள்ளடக்குதல்’ என்ற கருத்தரங்கு நடைபெற்றது

புனேயில் உள்ள மத்திய சரக்கு மற்றும் சேவை வரி மற்றும் சுங்க மண்டலம்  ஏற்பாடு செய்திருந்த ‘சுங்க விநியோகச் சங்கிலித் தொடரில்  பாலினச் சமத்துவத்தை உள்ளடக்குதல்” என்ற தலைப்பிலான கருத்தரங்கிற்கு மத்திய மறைமுக வரிகள் மற்றும் சுங்க வாரிய உறுப்பினர் (சுங்கம்) திரு சுர்ஜித் புஜாபால் தலைமை தாங்கி சிறப்புரையாற்றினார். பாலின சமத்துவத்தின் குறிப்பிடத்தக்க குறியீடாக பாலின உள்ளடக்கம் உள்ளது என்று அவர் கூறினார். இது பாலின பாகுபாட்டைக் குறைப்பதை நோக்கமாகக் கொண்டுள்ளது. …

Read More »

இந்தியா-கத்தார் இடையிலான ஒத்துழைப்பை மேம்படுத்த இருநாட்டு நிதி புலனாய்வு பிரிவுகள் புதுதில்லியில் கூடுகின்றன

கத்தார் நிதி புலனாய்வு பிரிவின் தலைவர் திரு ஷேக் அகமது அல் தானி தலைமையிலான ஒன்பது பேர் கொண்ட தூதுக்குழு 2024 நவம்பர் 4 மற்றும் 5 தேதிகளில் புதுதில்லியில் இந்திய நிதி புலனாய்வு பிரிவு தலைவர் திரு விவேக் அகர்வாலைச் சந்தித்தது. இந்தப் பயணம் இரு நிதி உளவுப் பிரிவுகளுக்கிடையேயான உறவுகளை வலுப்படுத்துவதிலும், பணமோசடி மற்றும் பயங்கரவாதத்திற்கு நிதியுதவி அளிப்பதை எதிர்த்துப் போராடுவதில் ஒருவருக்கொருவர் உதவுவதற்கான உறுதிப்பாட்டையும் குறிக்கிறது. இந்த …

Read More »