मंगलवार, नवंबर 05 2024 | 07:20:43 PM
Breaking News
Home / Tag Archives: Action Plan

Tag Archives: Action Plan

தேசியத் தலைநகர் தில்லிப் பிரதேசத்தில் காற்று மாசுபாட்டைக் கட்டுப்படுத்தவும் தணிக்கவும் தரப்படுத்தலுக்கான செயல் திட்டம் விதிக்கப்பட்ட பின் பல்வேறு முகமைகளால் இலக்கு நிர்ணயிக்கப்பட்ட நடவடிக்கைகளின் அமலாக்கம்

தேசியத் தலைநகர் தில்லியிலும்  அருகிலுள்ள பகுதிகளிலும் காற்று தர மேலாண்மை ஆணையத்தால்  திருத்தப்பட்ட தரப்படுத்தலுக்கான செயல் திட்டத்தை 15.10.2024 முதல் செயல்படுத்துவதன் மூலம், காற்று மாசுபாட்டைக் கட்டுப்படுத்தும் சம்பந்தப்பட்ட நிறுவனங்களால் நடவடிக்கைகள் எடுக்கப்படுகின்றன. ஆணையத்தில் தரப்படுத்தலுக்கான செயல் திட்ட கண்காணிப்பு கட்டுப்பாட்டு அறை அமைத்தல்,  மாநிலங்களால் இலக்கு நிர்ணயிக்கப்பட்ட நடவடிக்கைகளை பின்தொடர்வதற்கும் கண்காணிப்பதற்கும், 15.10.2024 முதல் ஆணையத்தில் தரப்படுத்தலுக்கான செயல் திட்ட கண்காணிப்பு கட்டுப்பாட்டு அறை அமைக்கப்பட்டுள்ளது. இது தர மேலாண்மை ஆணைய உறுப்பினர்  தலைமையில் உள்ளது. கட்டுப்பாட்டு அறை மற்றும் சம்பந்தப்பட்ட மாநிலங்களின் நோடல் அதிகாரிகள் இடையே தகவல்களை சுமூகமாக பரிமாற்றுவதற்காக ஒரு பிரத்யேக வாட்ஸ்அப் குழு உருவாக்கப்பட்டுள்ளது. தேசியத் தலைநகர் தில்லி முழுவதும் 7000-க்கும் அதிகமான  கட்டுமானம் மற்றும் கட்டிட இடிப்புத் தளங்கள் ஆய்வு செய்யப்பட்டன.  597 இணக்கமில்லா  தளங்களுக்கு சுற்றுச்சூழல் இழப்பீடு  விதிக்கப்பட்டுள்ளது மற்றும் 56 தளங்களுக்கு மூடுவதற்கான உத்தரவுகள் பிறப்பிக்கப்பட்டுள்ளன. சாலை தூசியைக் கட்டுப்படுத்த சாலை துப்புரவு இயந்திரங்கள், நீர் தெளிப்பான்கள், புகை எதிர்ப்பு தண்ணீர் துப்பாக்கிகள் ஆகியவை வற்றை நிறுவுதல்: தில்லியில் மட்டும் தினமும் சராசரியாக 81 சாலை துப்புரவு இயந்திரங்கள் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளன . ஹரியானா மற்றும் உத்தரப்பிரதேச  சாலைகளில் இருந்து வரும் தூசி மாசுபாட்டைக் கட்டுப்படுத்த தினமும் 36 சாலை துப்புரவு இயந்திரங்கள் பயன்படுத்தப்படுகின்றன. தேசியத் தலைநகர் தில்லி முழுவதும் தினமும் சராசரியாக சுமார் 600 நீர் தெளிப்பான்கள் மற்றும் புகை எதிர்ப்பு தண்ணீர் துப்பாக்கிகள் பயன்படுத்தப்பட்டன. ஏறத்தாழ 1400 தொழிற்சாலைகள் மற்றும் 1300 மின் உற்பத்திக்கான டீசல் என்ஜின்கள் ஆய்வு செய்யப்பட்டு, இணங்காத தொழிற்சாலைகள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டது.

Read More »

உயிரியல் பன்முகத்தன்மை குறித்த மாநாட்டிற்கான சி.ஓ.பி16 இல் புதுப்பிக்கப்பட்ட தேசிய பல்லுயிர் உத்தி மற்றும் செயல் திட்டத்தை இந்தியா அறிமுகப்படுத்தியது

 உயிரியல் பன்முகத்தன்மை குறித்த மாநாட்டிற்கான 16-வது சி.ஓ.பி கூட்டத்தில் இந்தியாவின் புதுப்பிக்கப்பட்ட தேசிய பல்லுயிர் உத்தி மற்றும் செயல்திட்டத்தை  மத்திய சுற்றுச்சூழல், வனம் மற்றும் காலநிலை மாற்றத்துக்கான இணை அமைச்சர் திரு கீர்த்தி வர்தன் சிங் வெளியிட்டார். கொலம்பியாவின் காலியில், அக்டோபர் 30, 2024 அன்று, ‘குன்மிங்-மாண்ட்ரீல் குளோபல் பல்லுயிர் கட்டமைப்பின் இலக்குகளை அடைவதற்கான செயல்திட்டம்  மற்றும் இந்தியாவின் புதுப்பிக்கப்பட்ட தேசிய பல்லுயிர் உத்தி மற்றும் செயல் திட்டம்’ என்ற சிறப்பு நிகழ்வின் போது இந்த ஆவணம் வெளியிடப்பட்டது. கொலம்பியாவின் சுற்றுச்சூழல் மற்றும் நிலையான அபிவிருத்திக்கான துணை அமைச்சர் மொரிசியோ கப்ரேரா, பலதரப்பு விவகாரங்களுக்கான துணை அமைச்சர் திருமிகு கண்டியா ஒபேசோ, உயிரியல் பன்முகத்தன்மை குறித்த மாநாட்டிற்கான நிர்வாக செயலாளர் திருமிகு ஆஸ்ட்ரிட் ஸ்கோமேக்கர், இந்திய அரசின் சுற்றுச்சூழல், வனம் மற்றும் காலநிலை மாற்ற அமைச்சகத்தின் சிறப்புச் செயலாளர் திரு தன்மய் குமார் மற்றும் தேசிய பல்லுயிர் ஆணையத்தின் தலைவர் திரு சி.அச்சலேந்தர் ரெட்டி உள்ளிட்டோர் இந்த நிகழ்வில் கலந்துகொண்டனர். நிகழ்ச்சியில் பேசிய அமைச்சர் திரு கீர்த்தி வர்தன் சிங், குன்மிங்-மாண்ட்ரீல் குளோபல் பல்லுயிர் கட்டமைப்புடன் இணைந்த புதுப்பிக்கப்பட்ட தேசிய பல்லுயிர் உத்தி மற்றும் செயல் திட்டமானது, 2030-ஆம் ஆண்டளவில் பல்லுயிர் இழப்பைத் தடுத்து நிறுத்துவதற்கும், 2050-ஆம் ஆண்டளவில் இயற்கையோடு இயைந்து வாழ்வது என்ற நீண்ட காலப் பார்வையுடன், உத்திகளைக் கையாள்வதற்கான ஒரு முக்கிய திட்டமாகும் என்று கூறினார். இந்தியா தனது செயல்திட்டத்தைப் புதுப்பிப்பதில் ‘முழுமையானஅரசு’ மற்றும் ‘முழுமையான சமூக’ அணுகுமுறையை ஏற்றுக்கொண்டதாக அவர் எடுத்துரைத்தார். புதுப்பிக்கப்பட்ட செயல்திட்டம் சுற்றுச்சூழல் சவால்களை ஏற்றுக்கொள்வதுடன் சுற்றுச்சூழல் மறுசீரமைப்பு, இனங்கள் மீட்பு திட்டங்கள் மற்றும் சமூகத்தால் இயக்கப்படும் பாதுகாப்பு முயற்சிகள் மூலம் சீரழிந்த சுற்றுச்சூழல் அமைப்புகளின் மறுசீரமைப்பு, சதுப்பு நிலங்களைப் பாதுகாத்தல் மற்றும்  கடலோரப் பகுதிகள் மற்றும் கடல்சார் மேலாண்மை ஆகியவற்றில் கவனம் செலுத்துவதற்கான உத்திகளை கோடிட்டுக் காட்டுகிறது என்று அமைச்சர் மேலும் குறிப்பிட்டார்.

Read More »