गुरुवार, दिसंबर 19 2024 | 05:48:28 PM
Breaking News
Home / Tag Archives: Central Department of Consumer Affairs

Tag Archives: Central Department of Consumer Affairs

மாவட்ட மற்றும் மாநில நுகர்வோர் ஆணையங்களில் உள்ள காலி பணியிடங்களை மத்திய நுகர்வோர் நலத் துறை ஆய்வு செய்தது

நாடு முழுவதும் உள்ள மாவட்ட மற்றும் மாநில நுகர்வோர் ஆணையங்களில் உள்ள காலிப்பணியிடங்களின் தற்போதைய நிலை குறித்த ஆய்வுக் கூட்டத்தை மத்திய நுகர்வோர் நலத் துறை நடத்தியது. துறையின்  செயலாளர் திருமதி நிதி காரே தலைமையில் நடைபெற்ற இந்தக் கூட்டத்தில், சம்பந்தப்பட்ட மாநிலங்கள்/யூனியன் பிரதேசங்களில் உள்ள  துறைகளின் முதன்மைச் செயலாளர்கள், இயக்குநர்கள் மற்றும் மூத்த அதிகாரிகள் கலந்து கொண்டனர். நுகர்வோர் பிரச்சனைகள் / வழக்குகள் உடனடியாகவும், திறமையாகவும் கையாளப்படுவதை உறுதி செய்ய காலி பணியிடங்கள் விரைவில் நிரப்பப்படுவது அவசியம் என்று திருமதி நிதி காரே  கூறினார். நாடு முழுவதும் உள்ள நுகர்வோர் ஆணையங்களில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப தகுதியான நபர்களை நியமிக்க வேண்டியதன் அவசியத்தை அவர் வலியுறுத்தினார். நுகர்வோரின் குறைகள் விரைவாகவும் திறம்படவும் தீர்க்கப்படுவதை உறுதி செய்வதற்கான அரசின் உறுதிப்பாட்டைப் பின்பற்றி இந்த நடவடிக்கைக்கான அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. நுகர்வோர் உரிமைகளைப் பாதுகாப்பதற்கும் சேவையின் தரத்தை நிலைநிறுத்துவதற்கும் நுகர்வோர் ஆணையங்களின் திறமையான செயல்பாடு முக்கியமானது என்று குறிப்பிட்ட அவர், இந்தப் பணியிடங்களை நிரப்புவதற்கு முன்னுரிமை அளிக்குமாறு அனைத்து மாநிலங்கள் / யூனியன் பிரதேசங்களின் பிரதிநிதிகளை வலியுறுத்தினார். நாடு முழுவதும் உள்ள காலி பணியிட தரவுகளை ஆழமாக பகுப்பாய்வு செய்ய இந்த கூட்டம் உதவியது. 2024, அக்டோபர்  நிலவரப்படி, மாவட்ட மற்றும் மாநில நுகர்வோர் ஆணையங்களில் தலைவர் மற்றும் உறுப்பினர் பதவிகளில் குறிப்பிடத்தக்க காலிப்பணியிடங்கள் உள்ளன. மாநில ஆணையங்களில் 18 தலைவர் பணியிடங்களும், 56 உறுப்பினர் பணியிடங்களும் காலியாக உள்ளன. இதேபோல், நாடு முழுவதும் உள்ள மாவட்ட ஆணையங்களில் 162 தலைவர் பணியிடங்களும், 427 உறுப்பினர் பணியிடங்களும் காலியாக உள்ளன. அனைவரின் சிறந்த முயற்சிகளையும் மீறி, நுகர்வோர் ஆணையங்களில் காலிப்பணியிடங்கள் முந்தைய ஆண்டுகளுடன் ஒப்பிடுகையில் கணிசமாக அதிகரித்துள்ளன என்பது கவனித்தில் கொள்ளப்பட்டது. நுகர்வோர் ஆணையங்களில் அதிகரித்து வரும் இந்த காலிப்பணியிடங்கள் குறித்து தனது ஆழ்ந்த கவலையை வெளிப்படுத்திய செயலாளர், மாநிலங்கள் / யூனியன் பிரதேசங்கள் விரைந்து செயல்பட்டு இந்த சவாலை எதிர்கொள்ள வேண்டும் என்று வலியுறுத்தினார். நுகர்வோர் பாதுகாப்புச் சட்டம், 2019-ன் செயல்படுத்தும் விதிகளையும், நிலவும் சூழ்நிலைகளையும் கருத்தில் கொண்டு, 2019 சட்டத்தின் பிரிவு 32-ன் விதிகள் மீது அவர் பங்கைற்றவர்களின் கவனத்தை ஈர்த்தார். இந்த சந்திப்பின் விளைவாக மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களுடன் இந்த விஷயத்தில் பயனுள்ள பேச்சுவார்த்தை நடைபெற்றது. விசாரணைகளில் ஏற்படும் தாமதங்களைத் தவிர்ப்பதற்கும், நுகர்வோர் நீதியை பாதிக்கும் வழக்குகளின் பின்னடைவைக் குறைப்பதற்கும் காலியிடங்களை நிரப்புவது அவசியம் என்று ஒருமித்த கருத்து இருந்தது. நுகர்வோர் ஆணையங்களில் காலி பணியிடங்களை நிரப்ப திறமையான, குறிக்கோள் மற்றும் வெளிப்படையான செயல்முறையை உறுதி செய்வதில் அனைத்து பங்குதாரர்களுடனும் நெருக்கமாகப் பணியாற்ற அமைச்சகம் உறுதிபூண்டுள்ளது. நாடு முழுவதும் செயல்திறனை மேம்படுத்துவதை நோக்கமாகக் கொண்டு, நுகர்வோர் தீர்வு செயல் முறையை வலுப்படுத்துவதற்கான அமைச்சகத்தின் உறுதிப்பாட்டை இந்த முயற்சி அடிக்கோடிட்டுக் காட்டுகிறது.

Read More »