शुक्रवार, नवंबर 22 2024 | 07:44:38 PM
Breaking News
Home / Tag Archives: Chennai

Tag Archives: Chennai

கைத்தறி, விசைத்தறி தொழிலாளர்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்த மத்திய, மாநில அரசுகள் இணைந்து பணியாற்ற வேண்டும்; சென்னையில் மத்திய ஜவுளித்துறை அமைச்சர் கிரிராஜ் சிங் வலியுறுத்தல்

தமிழகத்தில் கைத்தறி, விசைத்தறி தொழிலாளர்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்த மத்திய, மாநில அரசுகள் இணைந்து பணியாற்ற வேண்டும் என்று  மத்திய ஜவுளித்துறை அமைச்சர் கிரிராஜ் சிங் வலியுறுத்தியுள்ளார்.            மத்திய ஜவுளித்துறை அமைச்சர் திரு கிரிராஜ் சிங்,  சென்னையில் இன்று ஜவுளித்துறை, கைத்தறி, கைவினைப்பொருட்கள் மற்றும் ஏற்றுமதி அபிவிருத்திக் கழகங்களின் அலுவலர்களுடன் இத்துறையின் திட்டங்களின் செயல்பாடுகள் குறித்து ஆய்வுக்கூட்டம் நடத்தினார். சென்னை சேப்பாக்கத்திலுள்ள அரசினர் விருந்தினர் மாளிகையில்  நடைபெற்ற இக்கூட்டத்தில் தமிழ்நாடு அரசின் …

Read More »

சென்னை இந்திய தொழில்நுட்பக் கழகத்தின் ஆய்வு இந்தியாவிலும் வெளிநாடுகளிலும் செயற்கை நுண்ணறிவு நிர்வாகத்தில் ‘பங்கேற்பு அணுகுமுறை’க்கு அழைப்பு விடுத்துள்ளது

சென்னையில் உள்ள இந்திய தொழில்நுட்பக் கழக (ஐஐடி மெட்ராஸ்) ஆராய்ச்சியாளர்களும், தில்லியில் உள்ள சட்டக் கொள்கைக்கான விதி மையமும் இணைந்து வெளியிட்ட ஆய்வுக் கட்டுரையில், இந்தியாவிலும் வெளிநாடுகளிலும் செயற்கை நுண்ணறிவு மேம்பாடு மற்றும் நிர்வாகத்தில் பங்கேற்பு அணுகுமுறைக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. செயற்கை நுண்ணறிவு மேம்பாட்டில் பங்கேற்பு அணுகுமுறைக்கான அடிப்படைக் காரணங்களை இந்த ஆய்வு கண்டறிந்துள்ளது. செயற்கை நுண்ணறிவு வழிமுறையின் விளைவுகளை மேம்படுத்துவதுடன், செயல்முறையில் நேர்மையையும் ஏற்படுத்த முடியும். செயற்கை நுண்ணறிவு நிர்வாகத்தில் பங்கேற்பு …

Read More »

வருமானவரிப் பிடித்தம் குறித்த விழிப்புணர்வுக் கருத்தரங்கம் சென்னையில் நடைபெற்றது

சென்னை சரகம்-3 வருமானவரி கூடுதல் ஆணையர் திரு எம் கார்த்திகேயன் வழிகாட்டுதலின் அடிப்படையில், அம்பத்தூர் தொழிற்பேட்டை உற்பத்தியாளர் சங்கத்தில் அமைந்துள்ள கருத்தரங்கக் கூடத்தில், வருமானவரி பிடித்தம் செய்பவர்களின் நலன் கருதி, வருமானவரிப் பிடித்தம் குறித்த விழிப்புணர்வுக் கருத்தரங்கம் நடைபெற்றது. இந்த வருமானவரி பிடித்தம் குறித்த கருத்தரங்கத்தில்   70-க்கும் மேற்பட்ட பல்வேறு தொழில் செய்யும் வருமானவரி பிடித்தம் செய்பவர்கள் கலந்து கொண்டு பயன் பெற்றனர். ஏஐஇஎம்ஏ (AIEMA) சங்க  துணைத் தலைவர் திரு ரவிச்சந்திரன் வரவேற்புரை ஆற்றினார். வருமானவரி துணை ஆணையர் திரு  ராஜாமனோகர்  தலைமை ஏற்று கருத்துரை வழங்கினார். அவர் தமது உரையில், வருமானவரி பிடித்தம் செய்பவர்கள் , முறையாக வருமான வரிப்பிடித்தம் / வரிவசூல் செய்வதன் அடிப்படை கடமை, வரிப்பிடித்தம் செய்த தொகையினை, காலத்தே  மத்திய அரசின் கணக்கில் செலுத்த வேண்டிய கட்டாயம், காலாண்டு படிவங்களை பிழையின்றி காலத்திற்குள் தாக்கல் செய்யவேண்டிய முக்கியத்துவம், வரிப்பிடித்தம் செய்யப்பட்டவர்களுக்கு சான்றிதழ் வழங்கவேண்டிய அவசியம் போன்றவை குறித்து தெளிவாக விளக்கினார். வருமானவரி வரி அலுவலர்கள் திரு ராஜாராமன், திரு தீபன் குமார், திரு செந்தில் குமார்,  வரிப்பிடித்தம் குறித்த தலைப்புகளில் எளிய முறையில் விளக்கினர். வருமானவரித் துறையால், வருமானவரி பிடித்தம் செய்பவர்களுக்கு உதவும் பொருட்டு முன்னெடுக்கப்பட்ட பல்வேறு வகையான நடவடிக்கைகள், கருத்தரங்கத்தில் பங்குபெற்றவர்களுக்கு பகிரப்பட்டது.      

Read More »