வளர்ச்சி அடைந்த பாரதத்தின் வரலாறு அறிவியலின் மூலம் எழுதப்படும் என்று குவஹாத்தியில் இந்திய சர்வதேச அறிவியல் விழாவின் (ஐஐஎஸ்எஃப் -2024) 10-வது பதிப்பைத் தொடங்கி வைத்து மத்திய அறிவியல், தொழில்நுட்பத் துறை இணையமைச்சர் டாக்டர் ஜிதேந்திர சிங் கூறினார். நிகழ்ச்சியில் பேசிய அவர், வளர்ந்த நாடாக மாறுவதற்கான இந்தியாவின் பாதை அறிவியல் முன்னேற்றத்துடனும் கண்டுபிடிப்புகளுக்கான அதன் உறுதிப்பாட்டுடனும் ஆழமாக பின்னிப்பிணைந்துள்ளது என்று கூறினார். அறிவியல் முன்னேற்றத்தை முன்னெடுத்துச் செல்லும் ஒரு கலாச்சாரத்தை வளர்ப்பதன் முக்கியத்துவத்தை டாக்டர் ஜிதேந்திர சிங் சுட்டிக் காட்டினார். சுகாதாரம் முதல் உள்கட்டமைப்பு வரை சமூகத்தின் ஒவ்வொரு அம்சத்திலும் தொழில்நுட்பமும் ஆராய்ச்சியும் பங்களிக்கும் எதிர்காலத்தை வடிவமைக்க வேண்டும் என்று அவர் கூறினார். பிரதமர் திரு நரேந்திர மோடி தலைமையிலான அரசின் மூன்றாவது பதவிக்காலத்தில் இதுவரை முதல் ஐந்து மாதங்களுக்குள் எடுத்த ஆறு முக்கிய முடிவுகளை அவர் சுட்டிக்காட்டினார். இது அறிவியல் முன்னேற்றத்திற்கான இந்தியாவின் உறுதிப்பாட்டை எடுத்துக் காட்டுகிறது என அவர் தெரிவித்தார். இவற்றில் ரூ. 1 லட்சம் கோடி மதிப்பில் தேசிய ஆராய்ச்சி அறக்கட்டளையை நிறுவுதல், விண்வெளி புத்தொழில்களுக்கான ரூ. 1,000 கோடி துணிகர நிதி, வானிலை முன்னறிவிப்பை மேம்படுத்த வானிலை இயக்கம் தொடங்குதல் ஆகியவை அடங்கும் என அவர் குறிப்பிட்டார். சுற்றுச்சூழல், பொருளாதாரம், வேலைவாய்ப்பு வளர்ச்சிக்கு உயிரி தொழில்நுட்பத்தை மேம்படுத்த வடிவமைக்கப்பட்ட பயோ-இ 3 முன்முயற்சி, 2 கோடிக்கும் அதிகமான மாணவர்களுக்கு கல்வி இதழ்களின் உலகளாவிய அணுகலை வழங்க “ஒரு நாடு, ஒரு சந்தா” கொள்கையை அறிமுகப்படுத்துவது குறித்தும் அவர் எடுத்துரைத்தார். புதிய கண்டுபிடிப்புகளை ஊக்குவிப்பதற்கான ய அடல் கண்டுபிடிப்பு இயக்கம் விரிவுபடுத்தப்பட்டுள்ளதையும் அவர் குறிப்பிட்டார். அறிவியல், தொழில்நுட்பத்தில் உலகத் தலைமை இடமாக இந்தியாவை நிலைநிறுத்துவதே அரசின் தொலைநோக்குப் பார்வை என்று திரு ஜிதேந்திர சிங் கூறினார். அறிவியல் – தொழில்நுட்பத்தில் இந்தியாவின் சாதனைகளை வெளிப்படுத்தவும் இந்திய சர்வதேச அறிவியல் திருவிழா பல்வேறு வகையான செயல்பாடுகளை வழங்குகிறது. சந்திரன் அருங்காட்சியக கண்காட்சி, 3டி லேசர் கண்காட்சி, மறுகற்பனை பாரத கண்காட்சி, இளம் விஞ்ஞானிகள் மாநாடு ஆகியவை இதன் சிறப்பம்சங்களில் அடங்கும். பாதுகாப்பு கண்காட்சி, வடகிழக்கின் அறிவியல் வளங்களை ஆராய்வதற்காக அர்ப்பணிக்கப்பட்ட ஒரு பிரத்யேக நிகழ்வு ஆகியவையும் இதில் இடம்பெறுகின்றன. இந்தியா முழுவதிலுமிருந்து 10,000 க்கும் மேற்பட்ட மாணவர்கள் இதில் பங்கேற்றுள்ளனர். அறிவியல்- தொழில்நுட்பத்தில், இளம் உள்ளங்களை இணைக்கவும், ஊக்குவிக்கவும் இந்த நிகழ்வு ஒரு ஊக்க சக்தியாக செயல்படுகிறது. நித்தி ஆயோக்கின் டாக்டர் வி.கே.சரஸ்வத், மத்திய அரசின் முதன்மை அறிவியல் ஆலோசகர் பேராசிரியர் ஏ.கே.சூட், சிஎஸ்ஐஆர் தலைமை இயக்குநர் டாக்டர் என்.கலைச்செல்வி, உயிரித் தொழில்நுட்பத் துறைச் செயலாளர் டாக்டர் ராஜேஷ் கோகலே, அறிவியல் – தொழில்நுட்பத் துறையின் செயலாளர் பேராசிரியர் அபய் கரண்டிகர் உள்ளிட்டோர் இந்த விழாவில் பங்கேற்றனர்.
Read More »ડૉ. મનસુખ માંડવિયાએ કમલા નેહરુ કૉલેજ, દિલ્હી ખાતે વિકિસિત ભારત એમ્બેસેડર યુવા કનેક્ટ ઇવેન્ટમાં 2047 સુધીમાં ‘વિકસિત ભારત’ હાંસલ કરવામાં યુવાનોની ભૂમિકા પર ભાર મૂક્યો
કેન્દ્રીય યુવા બાબતો અને રમતગમત તથા શ્રમ અને રોજગાર મંત્રી ડૉ. મનસુખ માંડવિયાએ આજે નવી દિલ્હીની કમલા નહેરુ કોલેજમાં ‘વિકસિત ભારત એમ્બેસેડર – યુવા કનેક્ટ’માં વિદ્યાર્થીઓ સાથે એક આકર્ષક કાર્યક્રમ દરમિયાન વિકસિત ભારતનાં વિઝનને સાકાર કરવામાં યુવાનોની મુખ્ય ભૂમિકા પર ભાર મૂક્યો હતો. તેમણે વર્ષ 2047માં ભારતને આઝાદીના 100મા વર્ષ સુધીમાં વિકસિત રાષ્ટ્ર બનવાના પ્રધાનમંત્રી નરેન્દ્ર મોદીના …
Read More »दिल्ली येथील कमला नेहरु महाविद्यालयात आयोजित “विकसित भारत अंबॅसेडर – युवा कनेक्ट” कार्यक्रमात बोलताना केंद्रीय मंत्री मनसुख मांडवीय यांनी वर्ष 2047 पर्यंत विकसित भारताचे लक्ष्य साध्य करण्यात तरुणांच्या भूमिकेवर दिला भर
केंद्रीय युवा व्यवहार आणि क्रीडा तसेच श्रम आणि रोजगार मंत्री डॉ. मनसुख मांडवीय यांनी विकसित भारताचे स्वप्न साकार करण्यात तरुणांच्या महत्त्वपूर्ण भूमिकेवर अधिक भर दिला आहे.नवी दिल्ली येथील कमला नेहरु महाविद्यालयातील “विकसित भारत अंबॅसेडर – युवा कनेक्ट” या विद्यार्थ्यांच्या सक्रीय सहभागासह आयोजित कार्यक्रमात ते आज बोलत होते. देशामध्ये परिवर्तन घडवून …
Read More »विकसित भारत युवा नेता संवाद: राष्ट्र उभारणीसाठी युवकांना सक्षम करण्याकरिता चार-टप्प्यांची स्पर्धा
विकसित भारत युवा नेता संवाद हा महत्त्वपूर्ण उपक्रम आज भारतीय क्रीडा प्राधिकरण, प्रादेशिक केंद्र (साई, आरसी), मुंबई येथे आयोजित पत्रकार परिषदेत राष्ट्रीय युवा महोत्सव 2025 च्या आधी जाहीर करण्यात आला. देशाचे भविष्य घडवण्याच्या दृष्टीने भारतातील तरुणांना सहभागी करून घेण्यासाठी तसेच सक्षम करण्यासाठी चार टप्प्यातील स्पर्धेचा हा कार्यक्रम नेहरू युवा केंद्र संघटनेच्या ( एनवायकेएस) …
Read More »தேசிய இளைஞர் விழா 2025- வளர்ச்சியடைந்த பாரதம் இளம் தலைவர்கள் உரையாடல்
வளர்ந்த இந்தியா பற்றிய கருத்துக்களைப் பிரதமருடன் பகிர்ந்து கொள்ள இளைஞர்களுக்கு ஒரு வாய்ப்பு ஏற்படுத்தப்பட்டுள்ளது. வளர்ச்சியடைந்த பாரதம் வினாடி வினா, 2024 நவம்பர் 25 முதல் டிசம்பர் 5 வரை மை பாரத் தளத்தில் நடைபெறுகிறது. தேசிய இளைஞர் விழா 2025-ன் ஒரு பகுதியாக நடைபெறும் வளர்ச்சியடைந்த பாரதம் இளம் தலைவர்கள் உரையாடல் 2025-ம் ஆண்டு ஜனவரி 11 மற்றும் 12 ஆம் தேதிகளில் புது தில்லியில் நடைபெறவுள்ளது. இளம் திறமையாளர்களைக் கண்டறிந்து வளர்ப்பதை நோக்கமாகக் கொண்ட இந்தத் திட்டம், வளர்ச்சியடைந்த இந்தியாவுக்கான கருத்துக்களைப் பகிர்ந்து கொள்வதற்கான ஒரு தளமாக இருக்கும். வளர்ச்சியடைந்த பாரதம் நிகழ்ச்சி மூலம் பிரதமர் திரு நரேந்திர மோடியுடன் நேரடியாக உரையாடவும், இந்தியாவின் எதிர்காலம் குறித்த தங்கள் கருத்துக்களை முன்வைக்கவும் இளைஞர்களுக்கு ஒரு பொன்னான வாய்ப்புக் கிடைக்கும். பிரதமர் திரு நரேந்திர மோடி தமது சுதந்திர தின உரையில் அழைப்பு விடுத்தது போல் இளம் தலைவர்களை அரசியலுக்கு கொண்டு வருவது இதன் நோக்கமாகும். இது ஒரு வெளிப்படையான, ஜனநாயக மற்றும் தகுதி அடிப்படையிலான தேர்தல் மூலம் வளர்ந்த இந்தியாவிற்கு இளைஞர்களின் அர்த்தமுள்ள பங்களிப்பை உறுதி செய்வதை நோக்கமாகக் கொண்டுள்ளது. வளர்ந்த பாரதத்தை உருவாக்க இளைஞர்களின் திறனைப் பயன்படுத்துவதற்கான அரசின் உறுதிப்பாட்டுக்கு ஏற்ப, தகுதியுள்ள அனைத்து இளம் பெண்களும் ஆண்களும் வளர்ச்சியடைந்த பாரதம் இளம் தலைவர்கள் உரையாடலில் பங்கேற்கலாம். மேரா யுவ பாரத் (மை பாரத்) தளத்தில் 25 நவம்பர் 2024 மற்றும் டிசம்பர் 5, 2024 க்கு இடையில் நடத்தப்படும் டிஜிட்டல் வினாடி வினாவில் 15 முதல் 29 வயதுக்குட்பட்ட இளம் பெண்களும் ஆண்களும் பங்கேற்பதன் மூலம் அடுத்த கட்டங்களுக்குத் தகுதி பெறலாம். இது தொடர்பான கூடுதல் தகவல்களை MyBharat தளத்திலிருந்தும் (https://mybharat.gov.in/) இந்திய விளையாட்டு ஆணையம், நேரு யுவ கேந்திரா மற்றும் நாட்டு நலப்பணி திட்ட அலுவலகங்களிலிருந்தும் பெறலாம். தேசிய இளையோர் திருவிழாவின் மறுவடிவமைப்பான வளர்ச்சியடைந்த பாரதம் இளம் தலைவர்கள் உரையாடல், இந்தியாவின் எதிர்காலத்தை வடிவமைப்பதில் இளைஞர்களின் பங்கேற்பை ஊக்குவிக்க நான்கு கட்டங்களாக வளர்ச்சியடைந்த பாரதம் சவாலை முன்வைக்கிறது. கட்டம் 1: வளர்ச்சியடைந்த பாரதம் வினாடி வினா: நவம்பர் 25, 2024 முதல் டிசம்பர் 5, 2024 வரை, டிஜிட்டல் வினாடி வினா 15 – 29 வயதுடையவர்களுக்கான எனது இளைய பாரதம் (மை பாரத்) தளத்தில் பங்கேற்க வேண்டும். கட்டம் 2: டிசம்பர் 08 2024 முதல் டிசம்பர் 15 2024 வரை, கட்டுரை/ வலைப்பதிவு (Blog) எழுதுதல் : முந்தைய சுற்றில் வெற்றி பெற்றவர்கள், “வளர்ச்சியடைந்த இந்தியாவுக்கான தொழில்நுட்பம்” மற்றும் “வளர்ச்சியடைந்த இந்தியாவுக்கான இளைஞர்களுக்கு அதிகாரமளித்தல்” போன்ற சுமார் 10 யோசனைகள் பற்றிய கட்டுரைகளை சமர்ப்பிப்பார்கள். இந்தப் போட்டியும் MyBharat தளத்தில் நடத்தப்படும். கட்டம் 3: டிசம்பர் 20 2024 முதல் டிசம்பர் 26 2024 வரை, வளர்ச்சியடைந்த பாரதம் விஷன் பிட்ச் டெக்: மாநில அளவிலான விளக்கக்காட்சிகள்: இரண்டாம் சுற்றில் தகுதி பெறும் பங்கேற்பாளர்கள் தேர்ந்தெடுக்கப்பட்ட தலைப்புகளில் மாநில அளவில் தங்கள் கருத்துக்களை முன்வைப்பார்கள். கட்டம் 4: புதுதில்லியில் நடைபெறும் வளர்ச்சியடைந்த பாரதம் தேசிய சாம்பியன்ஷிப்: 2025 ஜனவரி 11 முதல் 12 வரை நடைபெறும் தேசிய இளைஞர் விழாவில் பல்வேறு தலைப்புகளின் அடிப்படையில் மாநில அளவிலான அணிகள் போட்டியிடும். வெற்றிபெறும் அணிகள், பிரதமர் திரு நரேந்திர மோடியிடம், வளர்ச்சியடைந்த இந்தியாவுக்கான தங்களின் தொலைநோக்குப் பார்வைகளையும் யோசனைகளையும் முன்வைக்கும். வளர்ச்சியடைந்த பாரதம் இளம் தலைவர்கள் உரையாடல் – தேசிய இளைஞர் விழா 2025, மூன்று வெவ்வேறு துறைகளில் இருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட இளைஞர்களின் கூட்டம் நடைபெறும். 2025 ஜனவரி 11-12 தேதிகளில் தில்லி பாரத் மண்டபத்தில் நடைபெறும் தேசிய நிகழ்வில் பங்கேற்க சுமார் 3,000 இளைஞர்கள் தேர்ந்தெடுக்கப்படுவார்கள். வளர்ச்சியடைந்த பாரதம் கண்காட்சி: இது மாநிலங்கள் / யூனியன் பிரதேசங்கள் மற்றும் மத்திய அமைச்சகங்களின் இளைஞர்கள் சார்ந்த முன்முயற்சிகளைக் காட்சிப்படுத்தும். இந்தியாவின் வளர்ச்சிப் பார்வையில் இளைஞர்கள் ஈடுபடுவதற்கு இது ஒரு சிறந்த தளத்தை வழங்கும் முழு அமர்வுகள்: முன்னணி தேசிய மற்றும் உலகளாவிய வல்லுநர்கள் இளைஞர்களுடன் கருத்துரையாடல் மற்றும் பயிற்சி பட்டறைகளில் பங்கேற்பார்கள். இந்திய பாரம்பரியத்தின் கொண்டாட்டம்: பாரம்பரியத்தின் பெருமையை காக்கும் வகையில் வளர்ச்சி எனும் மகத்தான பகுதியாக இந்தியாவின் வளமான பாரம்பரியத்தை கொண்டாடும் கலாச்சார நிகழ்ச்சியும் இந்த விழாவில் அடங்கும். வளர்ச்சியடைந்த பாரதம் இளம் தலைவர்கள் உரையாடல் என்பது ஒரு திருவிழா என்பதை விட, இது இந்தியாவின் இளைஞர்களை நாட்டின் வளர்ச்சிப் பயணத்தில் தீவிர பங்களிப்பாளர்களாக மாற்றும் இயக்கமாகும். வளர்ச்சியடைந்த பாரதம் இளம் தலைவர்கள் உரையாடல் தொடர்பான அனைத்து விவரங்களும் மை பாரத் தளத்தில் (https://mybharat.gov.in/) கிடைக்கிறது.
Read More »வளர்ச்சி அடைந்த பாரதத்தை உருவாக்க இளைஞர்களுக்கு பிரதமர் அழைப்பு
பிரதமர் திரு நரேந்திர மோடி தனது மாதாந்திர மனதின் குரல் உரையில், வளர்ச்சி அடைந்த பாரத்தை வடிவமைப்பதில் இளைஞர்களின் பங்கை வலியுறுத்தினார். இளம் உள்ளங்கள் ஒன்றிணைவதற்கான சக்தியை எடுத்துரைத்த அவர், 2025 ஜனவரி 11-12 தேதிகளில் புதுதில்லியில் உள்ள பாரத் மண்டபத்தில் நடைபெறவுள்ள ‘வளர்ச்சி அடைந்த பாரதம் இளம் தலைவர்கள் உரையாடல்’ என்ற வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த முன்முயற்சியை அறிவித்தார். சுவாமி விவேகானந்தரின் 162-வது பிறந்த நாளைக் குறிக்கும் வகையில், இந்த பிரம்மாண்டமான நிகழ்வு, நாடு முழுவதும் உள்ள கோடிக்கணக்கான இளைஞர்களை ஒன்றிணைக்கவும், விவாதிக்கவும், இந்தியாவின் எதிர்காலத்திற்கான யோசனைகளை முன்வைக்கவும் ஒரு தளமாக செயல்படும். கிராமங்கள், வட்டாரங்கள், மாவட்டங்கள், மாநிலங்களில் இருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட ஆயிரக்கணக்கான இளைஞர்கள் உரையாடலுக்காக கூடுவார்கள். இந்த நிகழ்ச்சி பற்றி பேசிய பிரதமர், அடிமட்ட அரசியல் ஈடுபாட்டை வளர்ப்பது, புதிய தலைமையை வளர்ப்பது குறித்த தமது தொலைநோக்குப் பார்வையை வெளிப்படுத்தினார். “செங்கோட்டையின் கொத்தளத்தில் இருந்து, அரசியல் பின்புலம் இல்லாத இளைஞர்கள் அரசியலில் அடியெடுத்து வைக்க வேண்டும் என்று நான் வலியுறுத்தினேன். வளர்ச்சி அடைந்த பாரதம் இளம் தலைவர்கள் உரையாடல் அந்த திசையில் மற்றொரு படியாகும்,” என்று அவர் கூறினார். இந்த உரையாடலில் தேசிய, சர்வதேச வல்லுநர்கள், சிந்தனையாளர்கள், முக்கியப் பிரமுகர்கள் இடம்பெறுவார்கள். இதில் பிரதமரே கலந்து கொண்டு இளைஞர்களுடன் கலந்துரையாடி, நாட்டின் முன்னேற்றத்திற்கான புதுமையான யோசனைகளை முன்வைக்க அவர்களை ஊக்குவிப்பார். இந்த நுண்ணறிவுகள் இந்தியாவின் எதிர்காலத்திற்கான விரிவான திட்டத்தை உருவாக்க பங்களிக்கும். தேச நிர்மாணத்தில் இளைஞர்கள் தீவிரமாக பங்கேற்க இந்த வாய்ப்பைப் பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என்று பிரதமர் கேட்டுக் கொண்டார். “இந்தியாவின் எதிர்காலத்தை கட்டமைக்கப் போகிறவர்களுக்கு இது ஒரு சிறந்த வாய்ப்பு. வாருங்கள், நாம் ஒன்றிணைந்து நாட்டைக் கட்டியெழுப்புவோம். நாட்டை வளர்ச்சி அடையச் செய்வோம்.” என்று பிரதமர் கூறினார். சுவாமி விவேகானந்தரின் உணர்வைக் கொண்டாடுவதிலும், இளம் மனங்களை ஊக்குவிப்பதிலும், பிரகாசமான, வளர்ந்த இந்தியாவுக்கான அடித்தளத்தை அமைப்பதிலும் இந்த நிகழ்வு ஒரு நினைவுச்சின்ன தருணமாக இருக்கும். தேசிய இளைஞர் விழாவின் மறுவடிவமான வளர்ச்சி அடைந்த பாரதம் இளம் தலைவர்கள் உரையாடல், இந்தியாவின் எதிர்காலத்தை வடிவமைப்பதில் இளைஞர்களின் ஈடுபாட்டை ஊக்குவிப்பதற்கான நான்கு கட்ட போட்டியாகவமையும். மேலும் விவரங்களுக்கு https://pib.gov.in/PressReleasePage.aspx? PRID=2074242 என்ற இணையதள இணைப்பைப் பார்க்கலாம். வளர்ச்சி அடைந்த பாரதம் இளம் தலைவர்கள் உரையாடல் – தேசிய இளைஞர் விழா 2025 தொடர்பான அனைத்து விவரங்களும் மை பார்ட் தளத்தில் ( https://mybharat.gov.in/ ) கிடைக்கும்.
Read More »વિકસિત ભારત યંગ લીડર્સને મળશે પ્રધાનમંત્રીને મળવાની તક
કેન્દ્રીય મંત્રી ડૉ મનસુખ માંડવીયાએ સપ્તાહની શરૂઆતમાં જાહેર કર્યું હતું કે, આગામી વર્ષે 11 અને 12 જાન્યુઆરીમાં રાષ્ટ્રીય યુવા મહોત્સવ દરમિયાન વિકસિત ભારતને આકાર આપવામાં દેશનાં યુવાઓને સામેલ કરવા, સશક્ત બનાવવા માટેનાં પ્રધાનમંત્રી શ્રી નરેન્દ્ર મોદીનાં દ્રષ્ટિકોણ મુજબ રાષ્ટ્રીય યુવા મહોત્સવની કલ્પના કરવામાં આવી છે. જે માટે “વિકસિત ભારત યંગ લીડર્સ સંવાદ”નું આયોજન કરવામાં આવશે. બે …
Read More »கோல் இந்தியா நிறுவனம் 50-வது நிறுவன தினத்தை எதிர்காலத்திற்கான தொலைநோக்குடன் கொண்டாடுகிறது – வளர்ச்சியடைந்த இந்தியா
நிலக்கரி அமைச்சகத்தின் கீழ் செயல்படும் கோல் இந்தியா நிறுவனம் (சிஐஎல்), தனது 50-வது நிறுவன தினத்தை கொல்கத்தாவில் உள்ள கோல் இந்தியா தலைமையகத்தில் கொண்டாடியது. இந்தக் கொண்டாட்டத்தில், மத்திய நிலக்கரி மற்றும் சுரங்கத்துறை அமைச்சர் திரு ஜி.கிஷன் ரெட்டி தலைமை விருந்தினராகவும், நிலக்கரி அமைச்சகத்தின் செயலாளர் திரு விக்ரம் தேவ் தத் கௌரவ விருந்தினராகவும் கலந்து கொண்டனர். முக்கியத்துவம் வாய்ந்த இந்த நிகழ்வு கடந்த ஐந்து தசாப்தங்களாக நாட்டின் எரிசக்தித் துறைக்கு சிஐஎல் ஆற்றியுள்ள பங்களிப்புகளைக் …
Read More »