शुक्रवार, नवंबर 22 2024 | 12:32:36 AM
Breaking News
Home / Tag Archives: Dr. M. Ravichandran

Tag Archives: Dr. M. Ravichandran

ஆழ்கடல் நுண்ணுயிரிகள் தொடர்பான கடல்சார் நுண்ணுயிர் களஞ்சிய இணையதளம் – மத்திய புவி அறிவியல் அமைச்சகச் செயலாளர் டாக்டர் எம். ரவிச்சந்திரன் தொடங்கி வைத்தார்

என்ஐஓடி  (NIOT) எனப்படும் தேசிய பெருங்கடல் தொழில்நுட்ப நிறுவனத்தின் 31-வது நிறுவன தினம் இன்று (09 நவம்பர் 2024) கொண்டாடப்பட்டது. மத்திய புவி அறிவியல் அமைச்சகத்தின் செயலாளர் டாக்டர் எம்.ரவிச்சந்திரன் சிறப்பு விருந்தினராக இந்நிகழ்ச்சியில் கலந்து கொண்டார்.  நீலப் பொருளாதாரத்தின் பல்வேறு பிரிவுகளின் வளர்ச்சியில் என்ஐஓடி பல ஆண்டுகளாக செயல்பட்டு வருகிறது. என்ஐஓடி இயக்குநர் பேராசிரியர் பாலாஜி ராமகிருஷ்ணன் இந்நிறுவனத்தின் முக்கிய செயல்பாடுகள் குறித்து எடுத்துரைத்தார்.  கடல்நீரை குடிநீராக்கும் திட்டம், ஆழ்கடல் நீர்மூழ்கிக் கப்பல்களை உருவாக்கும் முயற்சிகள், கடல் வளங்களுக்கான  சோதனைகள், கடலோரப் பாதுகாப்பு, வானிலை, பருவநிலை மாற்ற மதிப்பீடு ஆகியவை தொடர்பான கடல்சார் தரவுகளை சேகரித்தல் போன்றவை குறித்து அவர் விளக்கினார். ஆழ்கடல் இயக்கத்தின் கீழ் உருவாக்கப்பட்ட, ஆழ்கடல் நுண்ணுயிரிகள் தொடர்பான கடல்சார் நுண்ணுயிர் களஞ்சியத்தின் இணையதளத்தைப் புவி அறிவியல் அமைச்சகத்தின் செயலாளர் திரு ரவிச்சந்திரன் தொடங்கி வைத்தார். அவர் தமது உரையில், என்ஐஓடி மேற்கொள்ளும் பணிகளைப் பாராட்டினார். இந்நிறுவனத்தின் பெரும்பாலான பணிகள் முக்கிய பொறியியல், தொழில்நுட்பப் பகுதிகளாக உள்ளன என்பதை அவர் எடுத்துரைத்தார். கல்வியாளர்களுடன் இணைந்து கூட்டு ஆய்வை இந்நிறுவனம் மேற்கொள்வது மட்டுமல்லாமல்,  நிபுணத்துவத்தை வளர்ப்பதிலும், யோசனைகளை செயல்பாடுகளாக மாற்றுவதிலும், தொழில்துறையுடன் இணைந்து திறன் வளர்ப்பை ஊக்குவிப்பதிலும்  மேலும் அதிக அளவில் பணியாற்ற வேண்டும் என்று புவி அறிவியல் அமைச்சகச் செயலாளர் திரு ரவிச்சந்திரன் அறிவுறுத்தினார்.      

Read More »